தந்தை கரம்பிடித்து தள்ளாடி நடைபழகி வந்தவொரு சிறுபெண்ணை வழிமறித்துக் கேட்டேன்யான். “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றலே-உந்தன்நாளின் பெரும்பொழுதில் மனவிருப்போடிருப்பது அப்பாவிடமா? அம்மாவிடமா?" “அப்பாவிடம்தான்!” என ஒற்றைச் சொல்லைச் சிறகாக்கி கொவ்வை இதழ்விரி குறுநகை தெறிக்க-தன் ஒளிர்விழிகளால் புன்னகைத்து எனைக் கடந்தாள்; மனங்கிளர்ந்தாள்-ஆம் ஆம்!!...
undefinedundefined undefined