சிரித்தெழு

"மரம் மாதிரி நிக்கிறியே மடப்பயலே..." கோபம் வந்தால் அப்பாவின் வாயிலிருந்து கட்டாயம் புறப்படும் வசை இது. பல்லைக் கடித்து கண்களை உருட்டி தலையில் தலையில் அடித்துக் கொள்வார். காலம் போன காலத்தில் நோய் தின்றது அப்பாவின் வலதுகாலை... முதலில் சுண்டுவிரல் தொடர்ந்து அடியடியாய் அடியடியாய் அறுத்துதெறிந்து...