(தஞ்சையில் நிகழ்ந்த 'எழுத்தாளி - இரண்டாம் சந்திப்'பில் தோழர் குப்பு வீரமணியின் கடித விமர்சனம் ... 'சுழல்' சிறுகதைத் தொகுப்புக்கு...)
'சுழல்' படித்தேன். சற்றும் படோபமில்லாமல், ஆற்றொழுக்கான நடையில் சமுதாயத்தைப் பகிர்கிறார் நிலாமகள் . அவர் கதை எழுதவேண்டுமென்று எழுதியதாக நான் உணரவில்லை. மாறாக தாம் சந்தித்த அல்லது எதிர்ப்பட்ட சூழலில் பெண்கள் என்னவானார்கள் என்பதையே சொல்கிறார்.
கதைகேட்ட கதையை முன்னோட்டமாக சொல்லியிருப்பது, கதை சொல்லும் கலை கைவரப் பெற்றவர் என்பதற்கு பொருத்தமான பின்னணி. தேர்ந்த ரசனை, ஒவ்வொன்றையும் நிதானமாகப் பார்த்து மதிப்பிட்டு, பதிவிட்டு, பதனிட்டு, சுவைபட வழங்குகிறார்.
ஞானியின் ‘சுடும் நிலவு' தொகுதியில் சிறகை விரிக்கும் கூட்டுப் புழுக்கள் படித்திருக்கிறேன். செம்பா, மஹிமா, பாட்டி... செம்பாவை விலாவாரியாகச் சொல்லி, மஹிமாவுக்கு டிட்டோ போட்டுட்டு... போகிறபோக்கில் பாட்டியின் பூர்வ கதையை ‘நச்'சுன்னு பதிவிட்டு... ‘எலேய்... திருந்தவே மாட்டீங்களாடா'ன்னு கேட்கத் தோணியது.
ஆனால், தொகுப்பில், அந்த செம்பாவும் சீனிப்பயலும் - சுழலில் முன்கதைப் பாத்திரங்களாகிறார்கள். கொண்டாடி, துணைநின்று, வளர்த்தெடுத்து, வழிநடத்தினால்... ‘நாதியத்தவ'ன்னு சொல்லிடற அந்தத் திமிர்.. ‘ஆண்மை அழியவேண்டும்'னு பெரியார் சுட்டியது இதைத்தான். இன்னும் நிறைய,
என்னைக் கவர்ந்த சமுதாய உணர்வு மிக்க, மனிதத்தின் மீது கொண்ட மாளாத காதல் கொண்ட படைப்புகளாகவே அடையாளம் காண்கிறேன். குழந்தை அடிமை(2) வேலைக்கு எதிராக வலிவு மிக்க குரல். ஆனால் இவ்வளவு இதமாக தவிர்க்கவே முடியாதபடி பதிவு செய்திருக்கிற நேர்த்திக்கு ஒரு சல்யூட்.
எல்லாக் கதைகளின் பாத்திரப் படைப்புகளும் ஒரு இலட்சியத்தோடு அல்லது ஆசையோடு படைக்கப்பட்டுள்ளன. கேசவன் சார், பவழமல்லி சங்கரி, பெரியப்பா(சிங்கம்), யயாதியின் மகள் தனா( ரொம்ப சரியா யயாதியை அடையாளம் காட்டியிருக்காங்க; கூடவே ஒரு படிப்பினையும்)
செளம்யாம்மாதான் நிலாமகளா?
“எல்லாப் பாடங்களையும் கசடறக் கற்றுத் தருகிற இன்றைய கல்வித் திட்டம் வாழ்க்கையின் சூட்சுமங்களை, சூத்திரங்களைப் பிரித்துப் போடவும் விடை காணவும் இளம்பிராயத்தினருக்குக் கற்றுத் தருகிறதா?” என்கிற பொறுப்பு மிக்க வினா.
காதல் பற்றிய தமது கருத்தைத் தெளிவாக தாய்மைக்குரிய பரிவுடன் சுட்டும் பிறிதொரு படைப்பு ‘தவிப்பு'. விருந்தாளித் தாம்பூலமும் கூட படைப்பாளியின் பாத்திரமாகத் தான் இருக்க வேண்டும். பல இடங்களில் சுழலில் இந்தப் பாத்திரம் வருகிறது.
கடைசிப் பாடம்... நல்ல பாடம். அவசியம். ட்ரையாம்பக்... நிலாமகள் பாத்திரமாகப் பரிமளிக்கும் இடங்களாக நானுணர்ந்தவற்றில் இந்தப் பாத்திரமும் அடக்கம்.
நினைவில் நிலைப்பட்டு விட்ட சிலவற்றைப் பகிர்ந்தேன். இந்தத் தொகுப்பு கதை எழுத மட்டும் நினைத்த நம் படைப்பாளியினுடையதல்ல. சமுதாயப் பற்று மிக்க பொறுப்புணர்வுடனான ஒரு பெண்ணின் எழுத்து. இத்தகைய பெண் எழுத்துக்களே இன்றைய தேவை. மற்றபடி கிராமத்தை அவர் காட்டுகிற விதம், ‘போதும் இங்க கிழிச்சது. புறப்படு கிராமத்துக்கு' என்ற மாதிரியிருந்தாலும், அவர் காட்டுற கிராமம் சிரமம் தான். நேத்து வச்ச நெத்திலிக் கருவாட்டுக் குழம்பை சுடுசோற்றில் ஊற்றிப் பதமாகக் கலந்து பிசைந்து' என்றது போல ஒரு இடம் அடடா...
ட்ரையாம்பக்... ‘கைமீறிப் போன பலதுக்கும் தயாராய் விழியோரம் கட்டி இருக்கும் துளி ஈரம் மிச்ச மீதி மனிதத்தின் சிறு அடையாளமாய். ‘வேறென்ன கிழிக்க முடியும்?' ‘ அறச்சீற்றம் எழும்பிக் கையாலாகாத் தனத்தின் மேல் ‘பொத்'தென விழுந்து மடிகிறது.
இப்படி இடங்கள் அவரது படைப்பு ஆளுமை பளிச்சிடும் தருணங்கள். அவரைப் பாராட்டறதா, கொண்டாடறதா, தெரியல. ரொம்ப நாள் பழகினவங்க மாதிரி உணர்ந்தேன்.
நன்றி: ரொட்டேரியன் திரு. குப்பு வீரமணி, தஞ்சை.

அப்போ வாங்கி படிச்சுத்தான் ஆகணும் போல
ReplyDeleteஇல்லையான அது ஒரு (மன) குறையாகவே இருக்கும்..

@வாசன்...
ReplyDeleteமகிழ்வும் நன்றியும் ஐயா.
நல்ல விமரிசனம். வாழ்த்துக்கள் நிலாமகள். இன்னமும் பல நூல்கள் வெளிவர என் பிரார்த்தனைகள்
ReplyDelete