அற்புதம் அம்மா!!

உயிர்ச் சிறைக் கூடமாய் மனித உடம்பிருக்க கருவறை வெளிபோந்தும் மற்றுமொரு சிறைவாசம் சந்தர்ப்ப சூழலால்... வெகு தாமதமாகவேனும் கட்டறுத்தது காலக் கத்திரி வயிறு குளிர மனம் நெகிழ மறுபிரசவித்தாய் உன் மகனை. வாழிய! ...

செவிப்'பறை'

இணையுடனான காதல் கனிமொழியா? துணையற்ற முதுமையின் ஏக்கப் புலம்பலா? பகிர்ந்து மாளாத நட்பின் குதூகலமா? பேசி முடியாத பங்காளிச் சண்டையா? ...