அந்த நாள் ஞாபகம் ....


 "அரி நமோத்து சிந்தம் !
           அரி ஓம் ; குரு ஓம்!
                நன்றாக... குருவாழ்க!
                     குருவே துணை!!"

    எண்ணாவரத்து வாத்தியார் சொல்ல சொல்ல புதுசா வந்த புள்ள திருப்பிச் சொல்லுது. (அப்பல்லாம் ஊர் பேரை வெச்சுதான் பலபேரையும் சொல்றது.)

 விஜய தசமி அன்னிக்கு புதுசா பள்ளியோடம் வர்ற புள்ளைங்களுக்காக பெரிய வாத்தியாரும் (தலைமை ஆசிரியர்) இவரும் ஒண்ணாம்ப்பு டீச்சரும் கட்டாயம் வந்துடுவாங்க.

  பயந்து முழிச்சிகிட்டும் கண்ணைக் கசக்கிக் கிட்டும் வர்ற புள்ளைங்க கூட வந்தவங்கள கெட்டியா பிடிச்சிகிட்டிருக்கும். சிலது தலைவாசல்லியே கையை உதறிட்டு அலறி அழுதுகிட்டு ஓடும். மல்லுகட்டி  ஊசி போட அழுத்தி பிடிக்கறாப்புல குண்டுகட்டா கொண்டுவர வைக்கும்.(அப்பாம்மா தவிர, வெவரமான உறவோ தெரிஞ்சவங்களோ கூட கொண்டுவந்து சேர்த்துட்டு கார்டியன் கையெழுத்து போட்டுட்டு போறது சகஜம் .) 

 வந்தவங்க தலை மறையும் வரைக்கும் தான் அழுகை ஆர்ப்பாட்டமெல்லாம். அப்புறம் ஒண்ணாம்ப்பு செவந்திப்பூ டீச்சர் மேசைக்கு அடியிலேயிருந்து குச்சியை எடுத்து மேசைமேல டபால் டபால்ன்னு தட்டின உடனே எல்லா சத்தமும் கப்சிப்!

  மஞ்சள் பையிலிருக்கும் புது அரிச்சுவடி, புது சிலேட்டு, புது பலப்பம்  எல்லாத்துக்கும் வேலை வந்துடும். சிலேட்டில் டீச்சர் பெரிசா எழுதித் தந்த  ''னா மேல் அழுத்தி அழுத்தி எழுதிட்டே இருக்கணும். அதை அழியாமக் கொண்டுபோய் வீட்டில காட்டுற பூரிப்பு இருக்கே... தம்புள்ள தானவே ''னா போட்டுட்டாப்புல அவாளுக்கும் பெருமை தாங்காது...

  நடுநடுவுல -அம்மா, -ஆடு, -இலை, -, -உரல், - ஊதல், -எலி, -ஏணி, -ஐவர், -ஒட்டகம், -ஓடம், ஓள-ஓளவை, -எஃகு  என டீச்சர் சொல்லச் சொல்ல புள்ளைங்க எல்லாம் தொண்டை கிழிய கத்தற சத்தம்  சுத்துபட்டு ஜனங்களுக்கு கிட்ட பள்ளிக்கூடம் நடக்கறதை  சொல்லிகிட்டே இருக்கும். அததுக்கும் அரிச்சுவடியில போட்டிருக்கிற படங்களைப் பார்த்து, எழுத்தின் மேல் விரல் வச்சி தான் சொல்லணும். கும்பலோட கத்திகிட்டு கண்ணும் கையும் வேற வேலையில இருந்தா சுத்தி சுத்தி வர்ற டீச்சர் நங்'குன்னு கொட்டுவாங்க தலையில.

      மதியம் மஞ்சள் பையில அம்மா அனுப்பிய சாப்பாட்டு டப்பாவை காலி பண்ணிட்டு பெல் அடிக்கிற வரை ஆட்டம் தான். ஊஞ்சல், நாலு மூலைக் கிண்ணி, ஓடி பிடிக்கறது, ஒளிஞ்சி பிடிக்கிறது இப்படிப் பலதும். வெயில் உரைத்ததா நினைவே இல்லை. எவ்வளவு வியர்வையும் போட்டிருக்கிற பருத்தி உடைகள் ஈர்த்துக்கும். தொண்டை வறள வறள  வகுப்பிலிருக்கும் பானை தண்ணிதான்.  

ஏழ்மையான புள்ளைங்களுக்கு அரசாங்க இலவச சாப்பாடு கோதுமை உப்புமா வந்திருக்கும்.  தட்டில் போட்ட சாப்பாட்டை எல்லோருமா பிரார்த்தனை சொன்ன பிறகுதான் சாப்பிடுவாங்கவாடை தான் தள்ளியிருக்கிறவங்க வயிற்றையும் பிசையும்

     சாயங்காலம் அக்கம்பக்கத்து புள்ளைங்களோட பேசி சிரிச்சிகிட்டு வழியில ஓரம் பாரமா இருக்குற செடிகொடியில பூவை இலைதழையை பறிச்சி பையை நிரப்பிகிட்டு வீடு வரவேண்டியது தான்


அடுத்து ரெண்டாம்ப்பு... (ஹைய்யா...!) 



21 கருத்துரைகள்
  1. ஒன்ணாப்பில் இவ்வளவு தானா...?

    ரசித்தேன்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிகவும் அழகான ”அந்த நாள் ஞாபகம்”.. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ”மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற தலைப்பில் நான் எழுதியது ஞாபகம் வந்தது. முடிந்தால் படித்துப்பாருங்கோ. உங்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்.

    முதல் பகுதியின் இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2012/03/1.html

    ReplyDelete
  3. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..

    அழகான காட்சிகள்.. எப்போதும் மறக்கமுடியாமல்..

    ReplyDelete
  4. அந்த நாள் ஞாபகம் என்றும் பசுமையாக நினைவில்...

    ReplyDelete
  5. தட்டில் போட்ட சாப்பாட்டை எல்லோருமா பிரார்த்தனை சொன்ன பிறகுதான் சாப்பிடுவாங்க. வாடை தான் தள்ளியிருக்கிறவங்க வயிற்றையும் பிசையும். //

    பாவம். கேட்கும் போதே கஷட்மாய் இருக்கிறது.

    நடுநடுவுல அ -அம்மா, ஆ-ஆடு, இ-இலை, ஈ-ஈ, உ-உரல், ஊ- ஊதல், எ-எலி, ஏ-ஏணி, ஐ-ஐவர், ஒ-ஒட்டகம், ஓ-ஓடம், ஓள-ஓளவை, ஃ -எஃகு என டீச்சர் சொல்லச் சொல்ல புள்ளைங்க எல்லாம் தொண்டை கிழிய கத்தற சத்தம் சுத்துபட்டு ஜனங்களுக்கு கிட்ட பள்ளிக்கூடம் நடக்கறதை சொல்லிகிட்டே இருக்கும்./

    ஆம் , நீங்கள் சொல்வது உண்மை,
    அந்தநாள் ஞாபகம் மிக ந்ன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  6. கலங்க வைக்கும் காலயந்திரம்.

    ReplyDelete
  7. மலரும் பள்ளி நினைவுகள்... மீண்டும் பள்ளியில் அமர்ந்தோம் ...

    ReplyDelete
  8. அதே ஒண்ணாம்பு பிள்ளையோட பாஷையில அந்தக்கால நினைவுகள்... கடைசியா சொன்னவிஷயம் இப்ப நினைச்சாலும் ரசிக்கவைக்குது. எவ்வளவு இனிமையான காலங்கள் அவை... பள்ளிப் பேருந்திலும் பிற வாகனங்களிலும் பள்ளி சென்று வரும் பிள்ளைகள் இயற்கையுடனான அந்த சம்பாஷணைகளை இழந்துவிட்டார்கள் என்றுதான் சொல்லணும். நாம் அவற்றை அனுபவித்தோம் என்று சொல்லிக்கொள்கையில் இப்பவும் மிதப்புதான் நமக்கு...

    ReplyDelete
  9. ஒண்ணாப்பு நினைவுகள்.... படிக்கும் அனைவரையும் ஒண்ணாப்புக்கு அழைத்துச் சென்றுவிடும் நிச்சயம்.....

    தொடருங்கள் சகோ....

    ReplyDelete
  10. நல்லதொரு அனுபவப் பகிர்வு.

    இந்தக் காலம் எனக்கு நினைவில் இல்லை.பள்ளிக்குப் போக மாட்டேன் என்று வீட்டில் நான் போட்ட அமர்க்களங்கள் தான் நினைவில் இருக்கிறது.

    அந்த அரிவரிப்புத்தகம் மட்டும் எனக்கு நல்ல நினைவாக இருக்கிறது; படங்களோடு. இதே புத்தகம் தான் நாமும் படித்தோம்.

    தொடருங்கள், எல்லாம் புதுசாக இருக்கிரது. அறிய ஆவல்.

    ReplyDelete
  11. அன்புள்ள நிலாமக்ள்...

    எனது வீட்டிலிருந்து அலுவலகம் செல்லுவம் வழியில் மூன்று மழலையர் பள்ளிகள் உள்ளன. விஜயதசமி அன்றைக்கும் அதனைத் தொடர்ந்து சில நாட்களிலும் இந்தப் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக வருவார்கள். வேடிக்கையாக இருக்கும். தினமும் அரங்கேறும் காட்சிகள் அற்புதமாக இருக்கும். இவற்றைப் பற்றி நிறைய எழுதலாம். உங்கள் பதிவு அந்த நினைவு உணர்வலைகளை எழுப்பிவிட்டது. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  12. மலரும் நினைவுகள் தரும் சந்தோஷம்... இயல்புக்கு திரும்பியபின் நெருடும் ஏக்கம் .. அந்தநாளும் மீண்டு வந்திடாதோ எனும் தவிப்பு... வாழ்க்கை ஏனோ புரியவேயில்லை..

    ReplyDelete
  13. @திண்டுக்கல் தனபாலன் ...

    சீன் பை சீனா சொல்ல அவகாசம் இல்லாம சினாப்சிஸ்-ஆ சொல்லிட்டேன் பாலண்ணா....


    ReplyDelete
  14. @ரிஷபன் ...

    @கோவை2தில்லி ...

    @கோமதி அரசு...

    @இராஜ இராஜேஸ்வரி...

    @வெங்கட் நாகராஜ்...

    நம்ம காலட்சேபமும் நல்லாவே களை கட்டுது, எல்லோரையும் அவங்கவங்க ஒண்ணாம்ப்புக்கு இழுத்துட்டுப் போய்.

    ReplyDelete
  15. @வை.கோ. சார்...

    நீங்க எழுதாத தலைப்பென்று ஒன்று உண்டா சார்?!

    உங்க பதிவையும் சீனா சாரோட பதிவையும் படிச்சுட்டு வந்தேன். நானெல்லாம் என்னத்த எழுதி...

    ReplyDelete
  16. @ அப்பாதுரை ஐயா...

    'இன் பிட்வீன் தி லைன்' துல்லியமாக உணர்வதில் நீங்க கில்லாடி சார்.

    ReplyDelete
  17. @கீத மஞ்சரி ...

    கீதா... கீதா... என்னருமைத் தோழியே... நம் எண்ணங்களின் அலைவரிசை எல்லாம் ஒன்றாகவே.

    ReplyDelete
  18. @மணிமேகலா...

    அய்யய்யோ ... எனக்கும் மூன்று நான்கிலிருந்து தான் நன்றாக நினைவில். (இதெல்லாம் நமது மூன்று நான்கில் வந்த ஒண்ணா ம்ப்புகளுடையது.யார் கேட்டாலும் இந்த ரகசியத்தை சொல்லாதீங்க) நாம கோமதி அரசுவை அவங்க நினைவுத் திறனை பாராட்டணும். எப்பவாச்சும் நினைச்சிப் பார்க்காட்டா கொஞ்சம் கொஞ்சமா மறந்துதான் விடுவோம் போலிருக்கு.

    என்னுடன் பள்ளி வந்த எனது சித்தப்பா மகன் தினம் செய்த அமர்க்களங்களை சமீபத்தில் ஊர்த் திருவிழாவில் ஒருவர் நான் செய்ததாக நினைவு கூர்ந்த போது நொந்தே போனேன். எவ்வளவு சொல்லியும் அவர் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை தெரியுமா? :((

    ReplyDelete
  19. @ஹரணி சார்...

    உங்க நினைவலைகளையும் நம்ம வலைகடலில் மோத விடுங்களேன் ... நம் அப்பாக்களெல்லாம் திண்ணைப் பள்ளியில் படித்தார்களாம். அதையெல்லாம் சொல்ல யாராவது இருந்தால் தேவலை. (சுப்பு தாத்தா?!)
    எங்கள் பிள்ளைகளை முதல் நாள் பள்ளியில் விட்டுவிட்டு வாசலில் நின்று நாங்கள் அலைபாய்ந்தது இருக்கிறதே... அதெல்லாமும் இருக்கிறது மேல் மனசில்.

    ReplyDelete
  20. @மோகன் ஜி ...

    ஆம் ஜி. அப்படியே ஓ' என்று அழுதுடலாம் போலிருக்கு.

    எப்ப தான் புரியுமோ... இப்படியே முடியுமோ...?!

    ReplyDelete
  21. ஆஹா...அருமையான ஒண்ணாப்பு நினைவுகள் ...!!

    ReplyDelete