வந்தாச்சு, வந்தாச்சு....!


             இரண்டாண்டுகள் காத்திருப்பும் அயர்வும், வலிக்குப் பின்னான ஒருகணப் பிரசவிப்பு மகிழ்வானது, சிறுகதைத் தொகுப்பை நூல் வடிவில் கையில் வாங்கியபோது (அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி, 04142-258942)


                                           திரு. குறிஞ்சி வேலன் ('திசை எட்டும்')
                   
           "உன் அப்பா வீட்டுக்கு வருவது போல் வந்து போம்மா"
முதன்முதல் வீட்டுக்கு போனபோது இந்த 'வாழும் அப்பா' சொன்ன வார்த்தைகள் ... நேற்றிரவு இவரது முயற்சியால் நூலான 'சுழல்' பிறந்த வீட்டு சீதனமாய்  என் கைகளில் . பெருமிதமும் மகிழ்வுமாய்  பூரிக்கும் இத்தருணத்தில், நன்றி சொல்லி அன்னியப் படுத்தக் கூடாது இவரை நான்.


('இட்டிக்கோரா' மலையாள மூல நாவலின் ஆசிரியர் திரு. T.D. ராமகிருஷ்ணனுடன் தமிழில் மொழிபெயர்த்த (உயிர்மை வெளியீடு) திரு. குறிஞ்சி வேலன், அவரது துணைவியார், தமிழ் மொழிபெயர்ப்பை கணினியில் எழுதாக்கிய நான்.)




        பெற்றவர்கள் கண் பார்க்க பேர் புகழடைவது வரம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே. நூலை 'காணிக்கை' ஆக வைத்து வணங்கவே வாய்த்தது எனக்கும்.

     முன்னோட்டமாக முன்னுரையின் பாதியை ஒரு பதிவாக்கினேன். http://nilaamagal.blogspot.in/2011/12/blog-post_09.html

எஞ்சிய மறுபாதியும் உங்களுடன் பகிர்வேன் கிட்டதட்ட எல்லாக் கதைகளையும் வலைப்பூவில் பதிவிட்டு உள்ளேன். தலைப்புக் கதை விரைவில்.

14 கருத்துரைகள்
  1. வாழ்த்துகள் நிலாமகள்..... புத்தகம் விரைவில் வாங்கிவிடுகிறேன்.....

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வந்தாச்சு, வந்தாச்சு....!

    வாங்க வாங்க ..வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. வாழ்த்துகள்... !

    ReplyDelete
  5. // பெற்றவர்கள் கண் பார்க்க பேர் புகழடைவது வரம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே. நூலை 'காணிக்கை' ஆக வைத்து வணங்கவே வாய்த்தது எனக்கும்.//

    எனக்கும் அப்படியே தான்.

    நல்லதொரு அறிமுகம். பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இனிய வாழ்த்துக்கள் நிலாமகள். எண்ணத்தின் சுழல் இங்கே ஏட்டின் சுழலாய் எங்கெங்கும் சுழன்றடிக்கட்டும்.

    ReplyDelete
  7. பெற்றவர்கள் கண் பார்க்க பேர் புகழடைவது வரம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே. நூலை 'காணிக்கை' ஆக வைத்து வணங்கவே வாய்த்தது எனக்கும்.//

    பெற்றவர்கள் தெய்வமாக வாழ்த்துவார்கள்.
    சிறுகதை தொகுப்பு சுழலுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தங்கள் மனம் போல் எண்ணம் சிறப்படையும்
    அன்னை தந்தையின் ஆசி எப்போதுமே அவர்களின் பிள்ளைகளுக்கு
    கிட்டிய வண்ணம் தான் இருக்கும் .கவலை வேண்டாம் எழுத்துத்
    துறையில் நீங்கள் மென் மேலும் சாதனை படைக்க அந்த எழுத்தே
    சாதகமான நற் பலன்களை வழங்கட்டும் .மிக்க நன்றி வருகைக்கும்
    சிறப்பான பகிர்வுக்கும் .

    ReplyDelete
  9. மிக்க மகிழ்வான செய்தி நிலா.

    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    புது வருஷத்தில் பிறந்திருக்கிறது ஒரு புதுக் குழந்தை.வெளியீட்டு விழா எப்போ தோழி? புத்தகத்தை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்?

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  11. மனமார்ந்த வாழ்த்துகள் நிலாமகள். சுழல் வாசிக்கவில்லை. வாசித்தபின்பு எழுதுகிறேன். நன்றி குறிஞ்சிவேலன் அவர்களுக்கும்.

    ReplyDelete
  12. இனிய வாழ்த்துக்கள் நிலாமகள்! இது போன்ற பல சிறப்புகள் மேலும் மேலும் உங்களை வந்தடையட்டும்!! பெரும்புகழ் தரட்டும்!

    பி.கு. இளைத்து விட்ட மாதிரி தெரிகிறீர்களே?

    ReplyDelete
  13. தோழியாரே,
    வாழ்த்துகள். வளர்க உங்களது எழுத்துப்பணி.
    உங்களது சாதணையின் ஒரு நகல் எனக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். வாசிக்க ஆவலுடன் உள்ளேன். உங்கள் 'சுழல்' எங்களது (ரசிகர்களின்) எண்ணங்களை பலவிததிலும் சுழலச்செய்யும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
    ... கண்ணன், தஞ்சையிலிருந்து.

    ReplyDelete
  14. அன்புள்ள நிலாமகள்..

    வாழ்த்துக்கள். உங்களின் முதல்தொகுப்பை அனுப்பி வையுங்கள். தொடர்ந்து பல தொகுப்புக்கள் வரட்டும்.

    ReplyDelete