சுத‌ந்திர‌ தேவிநின் திருவ‌டி ச‌ர‌ண‌ம்!

வ‌ங்காள‌ம்: ப‌க்கிம் ச‌ந்திர‌ ச‌ட்டோபாத்யாய‌ர்

த‌மிழில் : ம‌காக‌வி பார‌தி


ந‌ளிர்ம‌ணி நீரும், ந‌ய‌ம்ப‌டு க‌னிக‌ளும்
குளிர்பூந் தென்ற‌லும் கொழும்பொழிற் ப‌சுமையும்
வாய்ந்துந‌ன் கில‌குவை வாழிய‌ அன்னை!
வ‌ந்தே மாத‌ர‌ம்!

தெண்ணில‌ வ‌த‌னிற் சிலிர்த்திடு மிர‌வும்
த‌ண்ணிய‌ல் விரிம‌ல‌ர் தாங்கிய‌ த‌ருக்க‌ளும்
புன்ன‌கை யொளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்த‌னை யின்ப‌மும் வ‌ர‌ங்க‌ளு ந‌ல்குவை.
வ‌ந்தே மாத‌ர‌ம்!


கோடி கோடி குர‌ல்க‌ ளொலிக்க‌வும்
கோடி கோடி புய‌த்துணை கொற்ற‌மார்
நீடு ப‌ல்ப‌டை தாங்கிமுன் னிற்க‌வும்
கூடு திண்மை குறைந்த‌னை யென்ப‌தேன்?
ஆற்ற‌லின் மிகுந்த‌னை அரும்ப‌த‌ங் கூட்டுவை
மாற்ற‌ல‌ர் கொண‌ர்ந்த‌ வ‌ன்ப‌டை யோட்டுவை
வ‌ந்தே மாத‌ர‌ம்!

அறிவுநீ த‌ரும‌நீ உள்ள‌நீ அத‌னிடை
ம‌ரும‌நீ உட‌ற்க‌ண் வாழ்ந்திடு முயிர்நீ
தோளிடை வ‌ன்புநீ நெஞ்ச‌க‌த் த‌ன்புநீ
ஆல‌ய‌ந் தோறும் அணிபெற‌ விள‌ங்கும்
தெய்வ‌ச் சிலையெலாந் தேவியிங் குன‌தே.
வ‌ந்தே மாத‌ர‌ம்!


ப‌த்துப் ப‌டைகொளும் பார்வ‌தி தேவியும்
க‌ம‌ல‌த் தித‌ழ்க‌ளிற் க‌ளித்திடும் க‌ம‌லையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ!
வ‌ந்தே மாத‌ர‌ம்!

திருநிறைந்த‌னை த‌ன்னிக‌ ரொன்றிலை!
தீது தீர்ந்த‌னை நீர்வ‌ள‌ஞ் சார்ந்த‌னை
ம‌ருவு செய்க‌ளின் ந‌ற்ப‌ய‌ன் ம‌ல்குவை
வ‌ள‌னின் வ‌ந்த‌தோர் பைந்நிற‌ம் வாய்ந்த‌னை
பெருகு மின்ப‌ முடையை குறுந‌கை
பெற்றொ ளிர்ந்த‌னை ப‌ல்ப‌ணி பூண்ட‌னை
இருநி ல‌த்துவ‌ந் தெம்முயிர் தாங்குவை
எங்க‌ள் தாய்நின் ப‌த‌ங்க‌ளி றைஞ்சுவாம்.
வ‌ந்தே மாத‌ர‌ம்! வ‌ந்தே மாத‌ர‌ம்!!
9 கருத்துரைகள்
  1. வந்தே மாதரம் எனும் மதுரமான தேஷ் ராகத்தின் குழைவில் பொருட்செறிவான வார்த்தைகள் வடித்த சட்டோபாத்யாயாவை மஹாகவி பாரதி மொழிபெயர்த்தது சிலிர்ப்பான அனுபவம்.

    பாரத தேவிக்கு நம் வணக்கங்கள் நிலாமகள்.

    ReplyDelete
  2. சிறப்புக் கவிதை அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
  3. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  4. ஆல‌ய‌ந் தோறும் அணிபெற‌ விள‌ங்கும்
    தெய்வ‌ச் சிலையெலாந் தேவியிங் குன‌தே.
    வ‌ந்தே மாத‌ர‌ம்!

    ReplyDelete
  5. /ப‌த்துப் ப‌டைகொளும் பார்வ‌தி தேவியும்
    க‌ம‌ல‌த் தித‌ழ்க‌ளிற் க‌ளித்திடும் க‌ம‌லையும்
    அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ!
    வ‌ந்தே மாத‌ர‌ம்!//
    ஆஹா என்ன "மாதிரியான" தேச‌ம் ந‌ம் தேச‌ம்!!
    வீர‌மும், செழுமையும் அறிவும் தெய்வ‌ வ‌ர‌ங்க‌ளாய் பெற்ற‌‌
    ந‌ம் தேச‌ம்.
    இன்று
    பாதுகாப்புத்துறையில் போப‌ர்ஸ்/டெட்றா மோச‌டி
    வ‌னவ‌ளம், நிலக்க‌ரி, கிர‌னைட் சுர‌ங்க‌ மோச‌டி.
    குருகுல‌ க‌ல்வி, குபேர‌க் க‌ல்வியான‌ மோச‌டி.
    தெயவ‌மே, தெய்வ‌மே, என்ன‌ செய்வோம் தெய்வ‌மே?

    ReplyDelete
  6. வந்தே மாதரம் நிலாமகள் மற்றும் நண்பர்களே

    ReplyDelete
  7. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தோழி!அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் அது சென்று சேர்வதாக!!

    பொருளுணர்ந்து வாழ்த்துகிறேன்.வந்தே மாதரம்!!

    ReplyDelete
  8. அருமையான பதிவு. பாராட்டுக்கள். வழ்த்துகள்.

    Respected Madam,

    I am very Happy to share an award with you in the following Link:

    http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

    This is just for your information, please.

    If time permits you may please visit and offer your comments.

    Yours,
    VGK

    ReplyDelete
  9. சுதந்திர நாளில் அருமையான பகிர்வு... வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete