இங்கிவனை யான் பெறவே...

            அப்பாடா... நானும் இந்த வலையுலகில் நூறாவது பதிவை எட்டிவிட்டேன்! குருவணக்கமாக எங்கள் மகன் சிபிகுமாருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன். (வலைப்பூ தொடங்கி வைத்ததும், பல தொழில்நுட்பங்களை கணினியில் தேர்ந்து செழுமைப்படுத்தியதும், மிகப் பொறுமையாக அடிப்படை விஷயங்களை அறியச்செய்து தொடர்ந்து நான் செயல்பட உற்சாகம் ஊட்டியதும் ஆக இன்னபிறவற்றுக்காக)
      கல்வியின் நிமித்தம் பிரிவிலிருக்கும் அவனை நினைவுகளால் அரவணைக்கும் தருணங்களில்  பிரிவாற்ற துணை நிற்பது சிறு பிராயம் முதல் எடுத்து வைத்துள்ள புகைப்படங்களே. ஒருசிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
      

எங்கள்  இரு முத்துக்கள்



அப்பாவுடன்...



பாட்டி செல்லம்...(மாமனாரின் தாயார்)


அக்காவின் உடையணிந்து    ...

தோட்டத்துக்கு வரும் நிஜ மயிலுடன் எங்க தங்க மயில்!


பள்ளி செல்லத் துவங்கிய முதல் நாள் ... தாயுடனான முதல் பிரிவு!


அக்காவும் அத்தை பெண்ணும் உடன் நிற்க ...


அப்பாவும் பிள்ளையும் பிறந்தநாள் கேக் வெட்டிய நேரம் ...



அத்தை பையனுடன் குளிர்பதனப் பெட்டியின் தட்டுகளை எழுது பலகையாக்கி...



வயதுக்கு மீறிய வண்டி மீதான மாறா விருப்பம்...




கங்கை கொண்ட சோழபுரம்  கோயிலில் ...

திருச்செந்தூர் கடலில்...
கொடைக்கானலில் ...

 

எந்த வண்டியாயினும் உடன் நின்று படமெடுத்துக் கொள்வதில் தீரா விருப்பம்...
 

விளையாடப் போன இடத்தில் அடிபட்டுக் கிடந்த மைனாவை எடுத்து வந்து வீட்டில் உபசாரம்...

துப்பாக்கி சுடுவதில் அலாதி சுகம்... எந்த சுற்றுலா தளத்திலும் பார்த்தவுடன் நின்றுகொள்வான் . ஆசை தீர பலூன்களை குறிபார்த்து சுடுவதில் ஒரு திருப்தி.
கடந்த ஆண்டின் பிறந்த நாளில் அக்காவுடன்...



பள்ளி முடிந்த நாளன்று நண்பர்களுடன் கொண்டாட்டம்...
பத்தாம் வகுப்புத் தேர்வை இந்தக் கட்டுடன் தான் எழுதினான் பிள்ளை. (நிஜ கட்டு! சுண்டு விரலில் சின்ன எலும்பு முறிவு)
சிரிஷ் சந்திரன் தான் அவனது ஹீரோ!

ஓவர் டிரைவ் படித்து, பார்த்து, பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் தன் நண்பன் அரவிந்த் உடன் இம்மூன்று  வண்டிகளையும் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தனர்.
அதையொரு கட்டுரை வடிவமாக்கி மோட்டார் விகடனுக்கும் அனுப்பினர்.மோட்டார் விகடனிலிருந்து தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். இருவரும் பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் என்ற காரணத்தால் அக்கட்டுரை பிரசுரிக்க இயலாமல் போனது.
அதனாலென்ன... விடுமுறையை உபயோகமாக ப்ரஜெக்ட் செய்து கழித்த நிம்மதி....



நட நட நட நடப்பதுவும் ஸ்டைல் ....

சாகசக்காரன் என்ற பெயரெடுக்க தீரா அவா ...

நாராயணா ஜூனியர் காலேஜில் சேர வீட்டிலிருந்து புறப்படுகிறான்... முகத்தின் சிரிப்புக்கு  சற்றும் குறைந்ததல்ல மனதினுள்  பிரிவின் நெருடல்...

இனி இரண்டாண்டுகளுக்கு இதுதான் அவனது விலாசம்...

பிரிட்ஜ் கோர்ஸ் முடிந்து வீட்டுக்கு வந்ததும் கடலூர் பீச்சில் ஒரு கொண்டாட்டம்...
அப்பாவும் பிள்ளையும் கடலில் இறங்கினால் சாமானியமாக கரையேற மாட்டார்கள்.
உற்சாகமும் சந்தோஷமும் நிழல்போல் அவனுடன் எப்போதும்...


புகைப்படமெடுத்தல் அவனது பொழுதுபோக்கு ...  அவன் திறனுக்கு சில...


கணினியில் தானாகவே கற்றுத் தேர்ந்த பலவற்றுள் ஒன்றிரண்டு...




கார் ... அவனது பிரம்மாண்ட கனவு நாயகி...



இவ்வாண்டின் பிறந்த நாளுக்காக பதிவிட அவனறியாமல் அவனது சேமிப்பிலிருந்து சுட்ட அவனது கிராபிக்ஸ் படம்...
மாதங்களில் 'அவன்' மார்கழி!


இப்பதிவுக்கான படங்களை உடனிருந்து தேர்வு செய்ததிலிருந்து, பதிவுக்கான தொழில் நுட்பங்களில் உதவி செய்த 'தாய்க்கு தாயான' ('தகப்பன்சாமி'க்கு பெண்பால்!) எங்கள் மூத்த முத்து... ப்ருத்வி மதுமிதா... நன்றி சொல்லவே எனக்கு வார்த்தையில்லையே... உன் 'கனவு' நிறைவேற பிரார்த்தனைகளையே நன்றியாக சமர்ப்பிக்கிறேன் மது... 
18 கருத்துரைகள்
  1. ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தாயோ?

    வாழ்க நீவீர்!!

    ReplyDelete
  2. அசத்தல் பதிவு
    சில நொடிகளில் பல வருடங்களை மிக அழகாகச்
    சொல்லிப் போகுது புகைப்படங்கள்
    பல்லாண்டு பல்லாண்டு வளத்தோடும்
    உடல் நலத்தோடும் வாழ வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நூறாவது பதிவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நூறாவது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள்!

    'நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம்' என்ற பாடலை நினைவூட்டும் புகைப்படங்களும் உங்களின் இதய ஆழத்திலிருந்து வெளி வந்திருக்கும் வார்த்தைச் சித்திரங்களும் உங்கள் அன்பான குடும்பத்திற்கு உங்களின் நூறாவது பதிவை சமர்ப்பித்திருக்கிறீர்கள் என்று புரிய வைக்கின்றன‌! நூறு விரைவில் பல அழகிய பதிவுகளைக் கடந்து இரு நூறைத் தொட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. ஒரு டாகுமெண்டரி படம் போல அவ்வளவு டச்சிங்!
    தங்கள் எழுத்து மட்டுமல்ல..புகைப்படமும் பேசும் திறன் கண்டு மகிழ்ச்சி!!

    ReplyDelete
  6. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அன்பு சகோதரி அற்புதமான ஆல்பம் பார்த்த பூரிப்பை தந்தமைக்கு நன்றிகள், அப்பாவுடன் இருக்கும் சிபிக்கும் ஆந்திராவில் இருக்கும் சிபிக்கும் இப்பவும் கூட எந்த வித்தியாசமும் தெரியவில்லை, தேடுதலில் இருக்கும் முதிர்ச்சியைத்தவிர, மனம் முழுதும் உணர்வுகள் நிறைந்து சொல்கிறேன் செல்வங்கள் இருவரும் எல்லாமும் பெற்று பூமியின் பொக்கிஷங்களாய் வாழ்வாங்கு வாழ்வார்கள்...நிறைந்த மனதுடன் -இயற்கைசிவம்

    ReplyDelete
  8. படங்கள் அனைத்தும் ஒரு அழகிய கதை சொல்வதுபோல இருந்தன. அருமை.

    ReplyDelete
  9. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கச் செய்யும் கண்மணிகளுக்கு என் மனமார்ந்த அன்பும் ஆசிகளும்.

    ReplyDelete
  10. படங்கள் அனைத்தும் அழகு. நூறாவது பதிவை மகனுக்கும் , மகளுக்கும் சமர்பித்து சிறப்பித்து விட்டீர்கள். அவர்கள் வாழ்வில் வளம் பெற வாழ்த்துகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நிலா....உங்கள் பதிவு முழுதும் பாசம்.அற்புதமான அம்மா.வாழ்த்துகள் !

    ReplyDelete
  12. நல்ல பதிவு .வாழ்த்துக்கள்.படங்கள் மிக அருமை.

    ReplyDelete
  13. 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்'
    என்று வர்ணித்தார் நண்பர் இயற்கை சிவம், உங்கள் குடும்பத்தை.
    போட்டோக்களிலும், தகவல்களை தந்திருப்பதில் ஊடாடி நிற்கும் பூரிப்பிலும்
    உணர்கிறேன் இன்று. அன்பு வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  14. 100 க்கு நல்வாழ்த்துகள். கொஞ்சம் தாமதமாய்.
    படங்கள் அத்தனையும் வெகு அருமை. ஒவ்வொரு படத்தின் பின்னும் ஒரு கதை.. அத்தனை அழகாய்.
    பிள்ளைகள் இல்லாமல் வாழ்க்கையில் ஏது ருசி..

    ReplyDelete
  15. ப. தியாகு, மின்னஞ்சலில்...

    'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்'
    என்று வர்ணித்தார் நண்பர் இயற்கை சிவம், உங்கள் குடும்பத்தை.
    போட்டோக்களிலும், தகவல்களை தந்திருப்பதில் ஊடாடி நிற்கும் பூரிப்பிலும்
    உணர்கிறேன் இன்று. அன்பு வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  16. அனைவ‌ரின் அன்பும் ஆசிக‌ளும் என்னைத் திக்குமுக்காட‌ச் செய்யும் ம‌கிழ்வில் ஆழ்த்துகின்ற‌ன‌. மிக்க‌ ந‌ன்றி!

    ReplyDelete
  17. உங்கைள மாதிரி ஒரு கொண்டாடும் பெற்றோரை பெற்ற தங்கள் மகனுக்கு வாழ்த்துங்கள்! உங்கள் ஊக்கமும் உற்சாகமும் , அவரை நிறைவான வாழ்க்கைப் பாதையில் கொண்டு செல்லும்!

    உங்கள் மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  18. நெகிழ வைக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete