உடல் உறுப்புகளை ஊடுருவும் உணவின் சக்தி- கால அட்டவணை

நாம் உண்ணும் உணவினின்றும் வெளிப்படும் சக்தியானது, நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் ஒன்றன் பின் ஒன்றாய் ஊடுருவுவதாக அக்குபங்சர் மூலம் அறிகிறோம். ஒவ்வொரு உறுப்பிலும் இரண்டுமணி நேரம் விகிதம் 12 உறுப்புகளிலும் 24 மணி நேரத்தில் நாம் உட்கொள்ளும் உணவின் சக்தியானது ஊடுருவுவது பற்றி சற்று விவரமாகப் பார்க்கலாம்.


2 A.M. கல்லீரல்                                                         2 P.M. சிறுகுடல்


4 A.M. நுரையீரல்                                                      4 P.M. சிறுநீர்ப்பை


6 A.M. பெருங்குடல்                                                 6 P.M. சிறுநீரகம்


8 A.M. வயிறு                                                              8 P.M. இதய மேலுறை


10 A.M. மண்ணீரல்                                                  10 P.M. தேக வெப்பக் கட்டுப்பாடு




நண்                                                                               நடு


பகல்-இதயம்                                                            இரவு-பித்தப் பை






(சுழற்சி ஆரம்பம் : 3 A.M.)

மேற்கண்ட அட்டவணையில் பகல் 12 மணி நேரத்தில் இயங்கும் 6 உறுப்புகளும், இரவு 12 மணி நேரத்தில் இயங்கும் 6 உறுப்புகளும் காணலாம். இரவு நேரத்தில் இயங்கும் ஒரு உறுப்பு, அதனையொத்த பகல் நேரத்தில் இயங்கும் உறுப்புடன் சம்பந்தப் பட்டுள்ளது.

உதாரணமாக, மாலை 6.00 மணிக்குச் சிறுநீரகம் இயங்குகிறது. காலை 6.00 மணிக்கு பெருங்குடல் இயங்குகிறது. இவையிரண்டும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி இரத்தத்தைச் சுத்திகரிக்கச் செய்பவை. மஞ்சள்காமாலைக்குத் தரப்படும் சூரணம் அல்லது மூலிகை மருந்து அதிகாலையும் அந்திமாலையும் உட்கொள்ளக் காரணம், பித்தநீர் அதிகமாகக் கலந்துள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்ய பெருங்குடல், சிறுநீரகம் ஆகியவற்றின் உச்சபட்ச இயங்குதிறன் கொண்ட நேரத்தை உபயோகித்து, நோயினின்றும் விரைவில் நிவாரணம் பெறுவதே.

மேலும், ஒருவர் பிறக்கும் நேரம், அந்த நேரம் சம்பந்தப்பட்ட உறுப்பை அல்லது அதே நேரத்தின் மறுபாதி நாளின் நேரத்தில் இயங்கக் கூடிய உறுப்பை பின்னாளில் அக்குழந்தைக்குப் பலவீனமாக்கி நோயுறச் செய்யக் கூடும். உதாரணமாக, ஒரு குழந்தை நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறக்கிறதெனில், அது பித்தப் பை இயங்கும் நேரமல்லவா... இதே நேரத்தை ஒத்த ஒரு நாளின் மறுபாதியில் (பகல் 12.00 மணி) இதயம் இருக்கிறது. இந்தக் குழந்தை எதிர்காலத்தில் பித்த நீர்ப்பை சம்பந்தப்பட்ட கோளாறினாலோ அல்லது இதயம் சம்பந்தப்பட்ட கோளாறினாலோ பாதிப்புள்ளாகக் கூடிய நிலை உள்ளது.

1.வயிறு:

வயிற்றில் ஏற்படும் ஜீரணம்தான் சக்தி உற்பத்தியின் முதல் நிலை. ஒரு இரவுப் பட்டினிக்குப் பிறகு சாப்பிடும் காலை உணவினை ஏழிலிருந்து எட்டு மணிக்குள் உட்கொண்டால், உணவின் முழுமையான சக்தியை மண்ணீரல் மூலமாகக் கிரகிக்கலாம். அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உபாதைகள், உணவில் நாட்டமின்மை போன்றவற்றிலிருந்து நமது ஜீரண உறுப்புகளைக் காத்துக் கொள்ளலாம்.

2.மண்ணீரல்:

காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் இயங்கு சக்தி, 10.00 மணிக்கு உச்சமடைந்து, 11.00 மணிக்கு பூரணமாய்க் குறைந்து இதயத்தை அடைகிறது. காலை உணவு 8.00 மணிக்கு முன்னதாக உட்கொள்ள வில்லையெனில், மண்ணீரலுக்கு வரும் சக்தியின் அளவும் தன்மையும் வெகுவாக பாதிப்படைகிறது.

3. இதயம்:

இதயத்தின் மிக முக்கிய வேலை, கிடைத்த சக்தியினை உடல் முழுதும் பரப்புவது. இந்த வேலை 12.00 மணியளவில் முழுவேகத்துடன் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் கடின உழைப்பு, பலமான ஆகாரம் உண்பது ஆகியவற்றைத் தவிர்த்தல் நலம். அதனால் தான், பகல் உணவு நேரம் பொதுவாக 1.00 மணிக்குக் கடைபிடிக்கப் படுகிறது. (இதயம் இயங்கும் சக்தியின் ஓட்டம் முடிவு பெறும் நேரம்)

4. சிறுகுடல்:

1.00 மணிக்குத் தொடங்கி 2.00 மணிக்கு உச்சமடைந்து, 3.00 மணியளவில் சிறுநீரகப் பையை உணவின் சக்தியடைகிறது.

5. சிறுநீரகப் பை:

3.00 மணிக்குத் தொடங்கி, 4 மணிக்கு உச்சமடைந்து 5.00 மணியளவில் சிறுநீரகத்தை அடைகிறது.

6. சிறுநீரகம்:

சிறுநீரகப் பையும், சிறுநீரகமும் கழிவுப் பொருட்களையும், நீரிலுள்ள அசுத்தத்தையும், இரத்தத்திலுள்ள அழுக்கையும் அகற்றி வெளியேற்றுவதால் மாலை 4-6 மணிவரை தேகப்பயிற்சியில் ஈடுபட்டால், அந்தந்த உறுப்புகளுக்கு அதிக ரத்த ஓட்டத்தை அளிக்கிறது. இரத்தத்திலுள்ள அசுத்தம் அகன்றுவிட இந்நேரத்தில் உடற்பயிற்சியும் விளையாட்டும் அவசியமாகும்.

7. இதய மேலுறை(பெரிகார்டியம்):

இதன் இயங்கு சக்தி மாலை 7.00 மணி தொடங்கி 8.00மணிக்கு உச்சமாகி, 9.00 மணிக்கு அடுத்த உறுப்பை அடைகிறது.

8. தேக வெப்பநிலையைக் கட்டுப்பாடு:

அக்குபங்சர் வைத்திய அமைப்பிலுள்ள சிறப்பம்சம் கொண்ட மிக முக்கிய உறுப்பு இது. உடலிலுள்ள மற்ற 11 உறுப்புகளையும் 3 பிரிவுகளாகப் பிரித்து அதனைக் கட்டுப்படுத்துகிறது. இந்த 11 உறுப்புகளும் ஒன்றுக்கொன்று உடன்பட்டு சீராக இயங்கினால்தான் நமக்குத் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி சீராக வைத்திருப்பதும் இதுதான். இதில் கோளாறு ஏற்பட்டால் ஜீரம், மலச்சிக்கல், அஜீரணம், குமட்டல், வாந்தி ஏற்படும். இரவு 9.00 மணிக்கு இயங்கு சக்தி தொடங்கி 10.00 மணிக்கு உச்சமடைந்து 11.00 மணிக்கு பித்தநீர்ப்பையை அடையும்.

9. பித்தநீர்ப் பை:

இரவு 11.00 மணிக்குத் தொடங்கும் இதன் இயங்கு சக்தி, நள்ளிரவு 12.00 மணிக்கு உச்சமடைந்து அதிகாலை 1.00 மணிக்குக் கல்லீரலையடைகிறது.

10. கல்லீரல்:

இதன் இயங்கு சக்தி 1.00 மணிக்குத் தொடங்கி, 2.00 மணிக்கு உச்சமடைந்து 3.00 மணிக்கு நுரையீரலை அடைகிறது.

11. நுரையீரல்:

ஆஸ்த்துமாவினால் துன்புறும் நோயாளிகளுக்கு அதிகாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகிறது மூச்சிறைப்பு. நுரையீரலுக்கு போதிய இயங்கு சக்தி கிடைக்காமல் மூச்சுத் தொந்தரவால் எழுந்து விடுவர். எனவே, நுரையீரல் வலுவடைய அதன் அதிகபட்ச இயங்குநிலையான விடியற்காலை 4.00 மணிக்கு சுத்தமான சூழ்நிலையில் சுவாசப் பயிற்சி செய்வது இன்றியமையாதது.

12. பெருங்குடல்:

இதன் இயங்குசக்தி விடியற்காலை 5.00 மணிக்குத் தொடங்கி 6.00 மணிக்கு உச்சமடைந்து 7.00 மணிக்கு இரைப்பையை அடைகிறது. அதனால்தான் காலை எழுந்ததும் 5-7 மணிக்குள் காலைக் கடன்களை முடித்தல் நல்லது.


     (நன்றி: பல ஆண்டுகளுக்கு முந்தைய ‘மங்கையர் மலர்')
15 கருத்துரைகள்
  1. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. நிஜம்தான். சில அவதிகளைப் பார்த்தால் அப்படியே ஒத்துப் போகிறது. யோகா, பிராணாயாமம் செய்வதில் உடல் சற்று கட்டுப்படுகிறது. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  3. ஆகா, என்னவெல்லாம் சொல்றீங்கப்பா.... முடியல.

    ReplyDelete
  4. நான் இதைப் படிக்கும்போது எம் பெரியவர்களைத்தான் யோசித்துக்கொண்டேன்.படிக்காமலேயே இதைத்தானே சொல்லித் தந்தார்கள்.நல்ல விஷயங்கள் நிலா !

    ReplyDelete
  5. இன்றைக்கு டாக்டர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எத்தனை பேருக்கு உடம்பின் இந்த திட்டமிட்ட அட்டவணை தெரியும்?

    ஹேமா சொன்னதுபோல எல்லாம் படிக்காதவர்கள்தான் எல்லாம் படித்தவர்கள்.

    மிக அவசியமான பதிவு.பகிர்வு.

    நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  6. மிகப் பயனுள்ள குறிப்புகள் நிலா. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

    சில காலங்களுக்கு முன்னர் பதார்த்தகுண சிந்தாமணி என்ற அரிய நூலைப் படித்தேன்.

    பல உபயோகமான குறிப்புகள் அதிலும் உள்ளன.

    ReplyDelete
  7. @ வெங்கட் நாகராஜ் & கோவை 2 டெல்லி ...

    தங்கள் தொடர்ந்த வருகையும் வாசிப்பும் எனக்கு உற்சாக டானிக்... தோழமைக்கு மகிழ்கிறேன் !

    ReplyDelete
  8. @ரிஷபன்...

    தங்கள் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன் ஐயா.

    ReplyDelete
  9. @கிருஷ்ணப்பிரியா ...

    எப்பேர்ப்பட்ட திறமைசாலியான நீங்க என்னை தட்டிக் கொடுத்து உற்சாகம் பெருக்குவது மகிழ்வே எனக்கும். (மருந்துகள் சூழ் உலகை கட்டியாளும் உங்களுக்கு இப்பதிவு ,'திருநெல்வேலிக்கே அல்வா' கதைதான்... சரிதானே தோழி!)

    ReplyDelete
  10. @ ஹேமா...

    பெரியவங்க சொல்வதை மதித்து நடக்கும் மனிதர்கள் மருந்தின்றி நோய் வென்று வாழ வகையிருக்கிறது அல்லவா தோழி...

    தொடர்ந்த பாராட்டுகளால் ஊக்கமளிக்கிறிர்கள்... நட்பின் பலம் உரமேற்றுகிறது என்னை!

    ReplyDelete
  11. @சுந்தர்ஜி...

    'எல்லாம் படிக்காதவர்கள்தான் எல்லாம் படித்தவர்கள்'

    ஒரு வாசகமானாலும் திருவாசகம்!

    தங்கள் அங்கீகரிப்பு எங்களை மெருகேற்றுகிறது... நன்றி ஜி.

    பதிவிட்டு பலநாட்களான பதற்றத்தில் வழக்கம் போல் கிடங்கிலிருக்கும் கவிதைகள் சிலவற்றை 'பயணச் சுவை'யாக்க, "50 -வது பதிவை சற்று அடர்த்தியாகப் போடலாமே " என்ற சிபியின் கருத்தை ஆமோதித்து, இப்பதிவை ஏற்றினேன். எனவே, எல்லாப் புகழும் அவனுக்கே...

    ReplyDelete
  12. @ மணிமேகலா ...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி...!

    தாங்கள் கூறியவுடன் 'பதார்த்த குண சிந்தாமணி'யின் மறுவாசிப்புக்கு மனம் பறந்தது. இருப்பிலிருந்து தேடிப்பிடித்து படித்தாயிற்று. அதிலிருந்து ஒரு இடுகை போட்டால் போகிறது. காலங்கள் பல கடந்தாலும் என்றும் வாழும் நன்னூல்கள் நமது பொக்கிஷம்தான்

    ReplyDelete