கடந்த வாரம் நடந்தேறிய நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புதுப் புத்தகங்களைப் புரட்டினேன்.(ஆமாமாம்... சிபி நேற்றிரவு 11.30 பேருந்தில் கிளம்பியாச்சு.)
பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாய் ச. மாடசாமி என்பவரெழுதிய ‘பூமரப் பெண்' என்ற நாற்பத்தெட்டு பக்க (பத்தே ரூபாய் தானுங்க) நூலினை வாசித்த வியப்பு தங்களுடனான பகிர்தலைத் துரிதப்படுத்தியது. மார்ச்-2007-ல் முதல் பதிப்பும், 2009-ல் இரண்டாம் பதிப்பும் பெற்ற இந்நூல் நான் கண்டடைய இவ்வளவு காலமாகியிருக்கிறது!
முன்னுரை, அணிந்துரை... பதிப்புரை என ஒன்றுமேயின்றி தடாலெனத் துவங்கி விடுகிற சிறப்பென்னவெனில், உள்ளடக்கம் அதை எல்லாம் தாண்டிய காத்திரமாய் இருப்பது!
மற்றொன்று, நூலாசிரியர் கதைகளைத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் நம்மோடு அவ்வப்போது எதிரிலமர்ந்து கலந்துரையாடவும், விவாதிக்கவும், சிந்தனையைத் தூண்டவுமாயிருக்கிறார். அறிவொளி இயக்கத்தில் இயங்கிய அனுபவத்தில் எழுதப்பட்ட நூல்.நன்றாகவேயிருக்கிறது இந்த உத்தி.