பிடி

தவறி விழுந்து தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு பிடிமானமாக துரும்பேனும் கிடைப்பது பெருவரமன்றோ உயிர்தனைக்  காக்க... பிடிவாதம் செய்யும் சிறுபிள்ளையின் அறியாமை போக்க தளராமல் புத்தி சொல்லும் பெற்றோர் மனப்பாங்கில்  அறநூல்கள் நம்மை வழிநடத்தும் தாயின் கண்டிப்பு பூனைப்பிடி போல் அறிவை விரிவு செய்ய  குரங்குப் பிடியாய்  நூல்பல...