நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

இது எப்படியிருக்கு...?!!!

Thursday, 7 October 2010
      எங்க வீட்டுகிட்ட செல்வ வினாயகர் கோயிலும், பெருமாள் கோயிலும் ஒரே இடத்துல பக்கம் பக்கமாயிருக்கு. தினசரி கோயிலுக்கு வர்றவங்களும், நாள்-கிழமையில வந்து தரிசிக்கிறவங்களும், மழைக்கு ஒதுங்குறவங்களுமா எப்பவும் நடமாட்டம் இருந்து கிட்டே இருக்கும்.


     இரண்டு கோயிலுக்கும் தனித்தனி பூசாரி. சேர்த்தாப்புல கணக்காளர், வேலைக்காரம்மா. இரவுக் காவல்காரரும் உண்டு.

    வியாழன், சனிக்கிழமைகளிலே நல்ல கூட்டமிருக்கும் பெருமாளை சேவிக்க. அதுவும் புரட்டாசி, மார்கழி மாதங்களில் கேட்கவே வேண்டாம்... வாசலில் காத்திருக்கும் கையேந்திகளுக்கு நல்லாவே கல்லா கட்டும்.அர்ச்சனைப் பொருட்கள், நெய்விளக்கு என கணக்காளருக்கும் தான். சிறப்பு ஆராதனைக்கு ஏதேனும் உபாயம் செய்து வருபவர்களை உபயக்காரர்களாக்குவதில் கைதேர்ந்தவர்கள். ஒரே நாளில் 3,4 பேரிடம் தொகை பெற்று, கணிசமாக ஒதுக்கிக் கொள்வதிலும்...!


    நேற்று மாலை வெகு நேரம் கோயில் வெளி வாசலில் படுத்திருந்த ஒருவர் எழுந்து வாசலை ஒட்டியிருக்கும் கணக்காளர் இருப்பிடத்தில் நின்று துழாவியிருக்கிறார். என்ன ஏது என கணக்காளர் விசாரிக்க,”ஐயா... காலையிலயிருந்து வெளிய தாங்க படுத்து கிடந்தேன்... கொஞ்சம் போதைங்க... நிதானமில்லாம சைக்கிள் சாவிய எங்கோ விட்டுட்டேன் போலயிருக்கு.. வீட்டுக்குப் போகனுங்கய்யா... அதான்... தேடிகிட்டிருக்கேன்” என்றிருக்கிறான். வாசலில் பூட்டியபடி நிற்கும் சைக்கிளைப் பார்த்துப் பரிதாபப் பட்ட கணக்காளர், தானும் சேர்ந்து தேடி, ஒருவழியாக திருப்புளி அது இது கொண்டு திறக்க உதவியிருக்கிறார். அவருக்கு பெரிய கும்பிடாக போட்டுவிட்டுப் போனான் குடிகாரன்.

    சற்றைக்கெல்லாம் சாமிகும்பிட்டு விட்டு வெளியே வந்த மற்றொருவர் வாசலில் வந்து சுற்றுமுற்றும் பார்த்துப் பதறி, ஐயோ... இங்க நிறுத்திட்டுப் போன என் சைக்கிளைக் காணலேன்னு கூப்பாடு போட, விக்கிரகத்து மேலிருந்த எண்ணெயெல்லாம் கணக்காளர் முகத்தில்! உள்ளே வெளியேயிருந்தவங்களெல்லாம் ஒன்றுகூடிட்டாங்க. கடைசியா, தன் கையை விட்டு புது சைக்கிளுக்கு பணம் தரும்படியாகிப்போச்சு கணக்காளருக்கு...!! கலைந்து போன பக்தர் கூட்டத்துக்கு வீடு போகும் வரை குடிகாரனின் நூதன திருட்டு பற்றியும், புது சைக்கிள் வாங்கும் வரை போராடி ஜெயித்தவன் பற்றியும் தான் பேச்சு. கணக்காளர் மேலான அனுதாபம் உதட்டளவில் தான் எல்லோருக்கும். தெய்வம் நின்று கொல்லுமாம்... பேசிகிட்டாங்க. அந்த குடிகாரனை என்றைக்கு...?

16 கருத்துரைகள்:

 1. வினோ said...:

  இது எப்படியிருக்கு...?!!! - நல்லா இருக்கு

  அந்த குடிகாரனை என்றைக்கு...? - இதையும் நீங்களே சொல்லிட்டா இன்னும் நல்லா இருக்கும்

 1. எல்லோர் கணக்கும் அப்பவே எழுதி வச்சாச்சு.. என்ன.. ஒரு சுதந்திரம் கொடுத்து திரிய விட்டிருக்கு.. புத்தில எட்டிச்சுனா கணக்கை நேர் செய்யலாம்.. இல்லன்னா.. புத்திக் கொள்முதல்தான்!

 1. ஐயோ!பாவம் அடப்பாவியானதோ? அதிர்ச்ச்ச்சி நிலாமகள்.

 1. கொடுமையே.. இந்த சம்பவத்துக்கு சிரிக்கிறதா, அழுகிறதான்னு தெரியலைங்க..

 1. ஹேமா said...:

  அட...எப்பிடியெல்லாம் திருடுறாங்க !

 1. vasan said...:

  குடி கொண்ட‌ க‌ட‌வுள்,
  குடிகார‌ன் வ‌டிவில் வ‌சூலித்து விட்டாரோ?

 1. suryajeeva said...:

  சைக்கிளையும் எடுத்துகிட்டு, சைக்கிளுக்கு காசையும் எடுத்துகிட்டு போனது எங்க? தன்னை காப்பாத்திக்க மனுஷனோட உதவியை தேடிகிட்டிருக்கிற கடவுள் கிட்ட இருந்து... ஆஹா... கடவுள் என்பது கற்பனை தான்னு எத்தனை தடவை எத்தனை பேர் வந்து சத்தம் போட்டாலும், செவிடா நடிக்கிரவன் கிட்டஎடுபடுமா?

 1. //விக்கிரகத்து மேலிருந்த எண்ணெயெல்லாம் கணக்காளர் முகத்தில்!//


  ஹ ஹ ஹா லிட்டர்கணக்கில் வழியுதுன்றதைத்தான் அப்படி சொல்றீங்களா சகோ?

  திருடணும்னா எப்படியெல்லாம் மூளை வேலை செய்ய்து பாருங்க அந்த ஐடியாவ ஏதாவது ஒரு தொழில்ல செய்றதுல காமிச்சிருந்தா பெருமைப்படலாம் ஹும்!

 1. @வினோ ...
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வினோ! அந்தக் குடிகாரனுக்கும் உண்டென்பதன் புரிதல் தரும் இறையச்சம் தானே நம் நேர்மையின் அடிவேர் ஆகிவிடுகிறது!!

 1. @ரிஷபன்...
  ரொம்ப ரசிச்சேன் உங்க பின்னூட்டத்தை! மிக்க நன்றி!!

 1. @சுந்தர்ஜி...
  அப்பாவி எல்லாம் அப்பாவியல்ல... இல்லையா ஜி...?

 1. @கமலேஷ்...
  வாங்க கமலேஷ்! மிக்க நன்றி!!

 1. @ஹேமா...
  ஆமா தோழி... தடுப்பூசியை விட பலமாயிருக்கு கிருமிகள்!!!

 1. @வாசன்...
  ஆமாங்க ... !

 1. @சூர்யஜீவா ...
  முதல் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...!

 1. @பிரியமுடன் வசந்த்...
  அதேதான் தம்பி.
  அவனுக்கு கிக் இதுல தான் போலிருக்கு!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar