நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

இடருய்தி

Saturday, 5 March 2011
தள்ளாத வயோதிகர்க்கு
நடக்கவும்
பின்தொடரும்
நாயைத் துரத்தவும்
தெருவோர அரளிச் செடியில்
சிவன் தலைக்கு
ரெண்டு பூப்பறிக்கவும்
பிற்பகலில் கண்ணசர விடாம
சேட்டை செய்யும்
பொடிசுகளை விரட்டவும்
தோட்டத்துச் சருகடியில்
நெளியும் பூச்சி பொட்டை
சட்டுன்னு அடிக்கவும்
உட்கார்ந்து எழ
ஒரு பிடிமானமாகவும்
எந்நேரத்துக்குமான
இடருய்தியா
மூணடியில் நுனி வளைஞ்ச
ஒரு கைத்தடி-
எளிதாக்குது அவர் வாழ்வை...

அரசியலும்
ஆட்சிக்கு வரும் கட்சியும்
சாமான்யன் வாழ்வை இலகுவாக்குதா?

சனநாயக நாட்டின்
'பண'நாயகங்கள்
பதுக்கலும், சுரண்டலும்
'ஊழ்வினை' பயமற்ற ஊழலுமாக
கொழுத்துத் திரிய
கழகங்களா...
காங்கிரஸா...
கம்யூனிஸ்ட் பார்ட்டிகளா...
'திடும்'மெனக் களமிறங்கும்
புத்தம்புது அவ(ரி)தாரமா...?
எது நம்மை உய்விக்கும்...?
இடருய்தியாகும்?!
இடர் களையும் ஈசனவிழ்ப்பானா
இப்புதிரை...?!

உறைகள் பலப்பல
உள்ளிருக்கும்
சரக்கெல்லாம் ஒன்றேதான் ...!
உணர்வாய் பராபரமே!!

(இம்மாத (மார்ச் - 2011  )  யுகமாயினி இதழில் பிரசுரம்)

14 கருத்துரைகள்:

 1. Vel Kannan said...:

  நல்ல கவிதை .. நிலா மகள்
  யுகமாயினியில் வந்தமைக்கு வாழ்த்துகள்

 1. அற்புதமான முதல் பத்தியோடு துவங்கும் இக்கவிதை இரண்டாவது பத்தியின் விசாரத்தில் நீர்த்தது போல் ஒரு தோற்றம் தருகிறது நிலாமகள்.

  அந்த முதியவருக்கு இடருய்தியளவுக்குக் கூட ஒரு தலைவன் நாட்டிற்கில்லை என் முடித்திருக்கலாம்.

  மறுபடி எழுதிப் பாருங்கள்.

  ஒரு நல்ல கவிதை காத்திருக்கிறது நிலாமகள் உங்களின் பேனா முனையில்.

 1. அருமையான கவிதை...

 1. ஹேமா said...:

  இடருய்தி...திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன்.முதல் பந்தியிலேயே கவிதை அழகாயிருக்கு நிலா !

 1. உங்கள் கவிதை, தாத்தாவின் கையிலுள்ள பிரம்பின் ஊடாக இன்றைய உலகிலுள்ள பலரையும் பல விதமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக அரசியல் வாதிகள் மீது நீங்கள் காட்டியுள்ள கோபம் கவிதையின் + பொயின்ற்.

 1. manichudar said...:

  `கவிதையின் ஆரம்பம் அளவாய் அசத்தலாய் இருக்கிறது . கைதடியை பற்றி கொண்டு போக முற்படுகையில் தளர்வது இயல்பு ஏனெனில் சொல்ல வந்த செய்தியின் அடக்கம் அப்படி. அனாலும் நன்றாகவே இருக்கிறது.

 1. இடருய்தி.. புதிதாய் எனக்கு சொல் வரவு..
  கவிதை காட்டுகிற காட்சிகளும் உணர்ச்சிகளும் அப்படியே வாசிக்கிற மனசிலும் பற்றிக் கொள்ளும் தீ.

 1. ஆஹா!!என் இனிய தோழியின் கவிதை! எனக்குப் பிடித்த இலக்கியப் பத்திரிகையில், இடருய்தியாய்!! என்ன ஒரு அழகான இணைப்பு!!!மகிழ்வால் நிறைகிறேன்.வாழ்த்தி மகிழ்கிறேன்.

  சொற்களின் அழகு அவற்றைப் பாவிக்கும் போது எத்தனை அற்புதமாய் பிரகாசிக்கிறது!’தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போலே’!!

  ஆரம்பக் கவிதைக் கட்டு நல்ல அழகு!!

 1. கவிதை சிறப்பா இருக்குங்க பாராட்டுக்கள்.

 1. நல்ல கவிதை. பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.

 1. Harani said...:

  அருமையான கரு நிலாமகள். இடருய்தி. வெகு நேர்த்தியான சொல்லாட்சி. இன்னும் கவிதையை இறுக்குங்கள் சிவனின் ருத்ர வடிவம்போல. அற்புதமான சிலையைப்போல வரும்.

 1. இடருய்தி அருமையான சொல்லாட்சி.

 1. vasan said...:

  The first half is the BETTER HALF.

 1. vasan said...:

  வ‌யோதிக‌ர்க‌ளுக்கு 'கைத்த‌டி' ச‌ம‌யத்துக்கு 'இடருய்தியாய்'
  வ‌லியோனின் "கைத்த‌டிக‌ள்" ச‌முதாய‌த்துக்கு 'இடையூறாய்'

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar