ஒளவியம் மிஞ்சியே அரசியல் நாறுது
ஓட்டு வேட்டையோ கன ஜோரா நடக்குது
ஒவ்வொருவர் பேச்சிலும் கயமை தெரியுது
ஐயா சாமி... இனியிங்கு என்ன இருக்குது?!
ஏமாந்தவன் குடிமகன் நல்லா தெரியுது
எதிர்த்தவன் குடி அழிஞ்சி போகுது
ஊழல் மட்டுமே ஒளிர்ந்து மினுக்குது
உயிர் பயத்தில் உண்மை அஞ்சி நடுங்குது
ஈ எறும்புக்குத்தான் சுதந்திரம் இருக்குது
இல்லாதவன் பாடு திண்டாட்டமாகுது
ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகம் மறக்குது
அறமோ அடுக்குமோ இது?!
ஓளவியம் மிஞ்சியே அரசியல் நாறுது//
ReplyDeleteஔவியம் என்று வர வேண்டும் என நினைக்கிறேன்.
கவிதை சந்த நடையில் இன்றைய அரசியல் யதார்த்தத்தைப் பேசி நிற்கிறது.
//
உயிர் பயத்தில் உண்மை அஞ்சி நடுங்குது//
இவ் இடத்தில் பண பலத்தினால் உண்மை அஞ்சி நடுங்குது என்று போட்டால் இன்னும் நிதர்சனமாக இருக்கும். கவிதை த்ற்கால யதார்த்தத்தைச் சுட்டி நிற்கிறது.
அட..அரசியலைப் பற்றி பேசினாலே, உயிர் எழுத்துக்கள் கூட,
ReplyDeleteதடுமாறி, தலைகீழாய் நிற்குதே!
ஆரண்யம் முந்திக் கொண்டார்!
ReplyDeleteஎல்லாமே தலை கீழ் என்று சொல்ல வந்தேன்..படித்ததும்.
கவிதை சீற்றம் நேராக்கட்டும்..
அதென்ன சகோதரி...
ReplyDeleteஒளவியம்
கீழ இருந்து வாசிச்சா நல்லதொரு கவிதை.அரசியல் அடி !
ReplyDeleteஹேமா கவிஞை என்பதால் இரண்டு பக்கமாகவும் பாத்திருக்கிறா போல! அதற்குப் பிறகு தான் நானும் இந்தக் கவிதையை மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் வாசித்துப் பார்த்தேன்.அட, இரண்டிலும் கருத்து மாறா அழகு, மற்றும் சிதைந்து போகாத நயம் இரண்டும் இருக்கிறது.
ReplyDeleteகவிதா சித்திரம் அழகு.
நல்ல முயற்சி ..
ReplyDeleteஅருமை !
நாடும், அதன் ஆளுமையும் தலைகீழாகி விட்டதை
ReplyDeleteஆத்திசூடியையே "ஒள"வில் தொடங்கி "அ"வில் முடித்து
உங்களின் நுட்பத்தை, அரசியல் வெப்பத்தை வெளிப்ப்டுத்தி விட்டீர்கள்.
தலைகீழ் மாற்றம், தேர்தல் முடிவில் கிடைக்குமா? கிடைக்கும்.
ஆண்டான் சிறையிலும், எளியவர் ஆட்சியிலும், அபகரித்தவையெல்லாம்
நாட்டிற்கும் வரும் மாற்றம் வரும். சுரண்டல் ஒழிக்க சுயாட்சி, மீண்டும் ஒரு சுதந்திர போராய் ஏப்ரல் 13. வாக்குச்சாவடியில் வருமா?
”ஔ” விலிருந்து “அ” வரை நச்! அரசியலில் எல்லாமே தலைகீழாய் நடப்பதை நன்றாக தெரியப்படுத்துகிறது உங்கள் கவிதை!!
ReplyDeleteஅற்புதமான கவிதை. உயிரும் உணர்வும் இல்லாதவர்கள் செய்யும் அரசியல் தொழிலை உயிர் எழுத்துக்களால் உணர்வுடன் சொல்லி இருப்பது அருமை.
ReplyDeleteஒரு விண்ணப்பம்: மேலிருந்து கீழாக படித்தால் ஒரு பொருளும், கீழிருந்து மேலாக படித்தால் வேறு ஒரு பொருளும் தருவது போன்ற ஒரு கவிதை எழுதுங்களேன்..... ஹேமாவுக்கு இரண்டு கவிதை படித்த திருப்தி ஏற்படும்?