25 கருத்துரைகள்
 1. அப்பேர்ப்பட்ட ஆசிரியர்களை தடை செய்ய வேண்டும்........ஆனால் எப்படி!

  ReplyDelete
 2. என்ன செய்யலாம் இவர்களை?

  முதல்முறைவருகிறேன் தளம் அருமை..

  ReplyDelete
 3. மாதா..
  பிதா...
  குரு தெய்வம்.

  இதை என்னனு சொல்றது.
  தெரிஞ்சிக்கும் போது கோபம் தான் தலைக்கேறுது.

  ReplyDelete
 4. "பேய்க‌ள் அர‌சாண்டால் பிண‌ம்தின்னும் சாஸ்திர‌ங்க‌ள்."
  தீர்க்க‌த‌ர‌சியின் சொல் தீப்புழ‌ம்பாய்.
  ப‌ணப் பேய்க‌ளின் ஆட்சியில் இறைவ‌னுக்கும் மேலான குரு என்ன‌?
  இறைவ‌னின் த‌ர‌க‌ர்க‌ள் (கார்ப‌ரேட் சாமிக‌ள்), ம‌ருத்துவ‌ர்க‌ள், ஏன் சில பெற்றோர்க‌ளே
  ப‌ண‌த்திற்காய் பாத‌க‌ம் செய்கின்ற‌ன‌ர். சாமியே ப‌ண‌ம் தருப‌வனுக்கு முத‌ல் த‌ரிச‌ன‌ம் வ‌லிய‌ வ‌ந்து த‌ருகிறாராம். ச‌முதாய‌ம் எப்போது பொருளாதார‌ நிலையை ம‌ட்டுமே வ‌ள‌ர்ச்சியின் அள‌வுகோலாய் கொண்டு, ம‌னித‌ வ‌ள‌த்தை ம‌திப்பிடுகிற‌தோ அப்போதே
  ப‌ணம் த‌விர‌ ம‌ற்ற அனைத்தும் பொதுவாழ்வில் மதிப்பிழ‌க்க‌த் தொட‌ங்கி விடும்.
  பின் அன‌வ‌ரும், ச‌மூக‌ம் அங்கீக‌ரிக்கும் ஒரே அல‌கான பண‌த்தின் ஆதிக‌த்திற்குள் க‌ட்டுப்ப‌ட்டுவிடுவார்க‌ள். நீதி, நேர்மை, ம‌னித‌ம், ம‌னச்சாட்சி போன்ற‌ நல்நெறிக‌ள் கால‌த்தால் ம‌றைந்துவிடும்.

  ReplyDelete
 5. நிலாமகள்..

  சொற்கள் இல்லை நெஞ்சு கொதிப்பதை எழுத. மன்னிக்கவும். அந்த இரு கயவர்களும் பிறந்த முறை சரியில்லை. இது வெளியே தெரிந்துவிட்டது. ஆசிரியர் எனும்போர்வையில் 70 விழுக்காடு இப்படிப்பட்டவும்...இதைவிட வக்கிரகமாகவும் கயவர்கள். சரியானவர்கள் என்றால் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கட்டும். இனி அவர்கள் ஆசிரியர் பணி செய்யக்கூடாது. அதேசமயம் கொலைக்குற்றவாளிகளாகக் கருதி சிறைத்தண்டனையும் அளிக்கவேண்டும்.

  ReplyDelete
 6. அசிங்கமா இருக்கு.இப்படியெல்லாம் நம்ம நாடுகளில் மட்டும்தான் !

  ReplyDelete
 7. மாதா, பிதா குரு, தெய்வம் என்று, குருவை தெய்வத்திற்கும் முன்னால் வைத்து போற்றியது அந்தக் காலம்!
  கயமைகளின் இருப்பிடமாய் குரு உலவுவது இந்தக் காலம்! இந்த நிகழ்வுகள் மட்டும்தானா? இன்னும் எழுதக்கூடாத கயமைகள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டுதானிருக்கின்றன! சுதந்திரம் மட்டுமிருந்தால், நீங்கள் தலைப்பில் எழுதியதையே தண்டனையாகத் தந்து விடலாம்!

  ReplyDelete
 8. என்ன அநியாயம் இது.. மனம் பொறுக்கவில்லை.. குமுறல் அந்தப் பாவிகளைச் சும்மா விடாது..

  ReplyDelete
 9. வணக்கம் நிலா,
  இப்படி ஒன்று நடந்திருக்கவே நடந்திருக்காது என்று சொல்வதற்கில்லை. இது நடந்திருக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆசிரியர் என்றால் புனிதர், தெய்வம் மாதிரி (தெய்வம் என்பதே கற்பிதம் ) என்பன போன்ற மிகை மதிப்பீடுகளை எடுத்த எடுப்பிலேயே எறிந்துவிட வேண்டும். தாராள மயமும் உலகமயமும் தேசத்தின் தரைப் பரப்பெங்கும் கும்மாளமாய் குதித்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆசிரியனும் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் ஒரு சராசரி ஊழியனே. நாளைய உலகச் சமூகத்திற்கான மனித சக்த்தியை தயாரித்து தருபவன் என்கிற அளவில் இவன் மற்ற ஊழியர்களிடமிருந்து மிக அதிகமாய் வேறுபட்டு நிற்க வேண்டும் என்று இந்தச் சமூகம் எதிர்பார்ப்பதில் நியாயமிருக்கவே செய்கிறது.

  தாராள மயத்தின் கோர விளைவுகளின் உச்சம் இன்னும்கூட கொடூரமாக இருக்கவே செய்யும். கல்வியும் நுகர் பொருளாகிப் போனதன் விளைவுதான் இது. தாராளமயத்தை சம்மட்டி கொண்டு போடும் வரைக்கும் இது தவிர்க்க முடியாததுதான்.

  ஆனால் தோழர் ஹரணி அச்சப்படும் அளவு எழுபது சதம் ஆசிரியச் சமூகம் இன்னமும் அழுகிவிடவில்லை. ஆனால் இப்படியே விட்டால் அது நிச்சயம் நிகழும். ஆமாம் இது எங்கு நடந்தது ?

  ReplyDelete
 10. சும்மாவா விட்டார்கள் அவர்களை ?

  ReplyDelete
 11. இரண்டு சம்பவங்களிலும் ஆசிரியர்களின் தலைவலியான பணி தெரிகிறது. 90% நல்லாசிரியர்களாக இருக்கும் இடத்தில் மீதமிருக்கும் 10% இதுபோன்ற தரங்கெட்ட ஆசிரியர்களினால் மாணவர்களின் தரமிழப்பது நிச்சயம் . இது போன்ற ஆசிரியர்களை முற்றிலும் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

  ReplyDelete
 12. நண்பர் எட்வின் சொல்வது போல அவர்கள் சாதாரண ஊழியர்கள் அல்ல.அவர்களுக்கென்று தனியான சமூகப் பொறுப்புணர்வு வேண்டும்.அவ்வாறு இருப்பதையே சமூகமும் எதிர்பார்க்கும். ஏனென்றால் அவர்களை நம்பியே பிள்ளைகளை அவர்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.தேசத்தினதும் பிள்ளைகளினதும் எதிர்காலம் ஆசிரியகளின் கையில் இருக்கிறது.

  பெரும்பாலான ஆசிரியர்கள் அவ்வாறு பொறுப்போடு நடப்பவர்கள் தான். இவர்கள் சிலவேளை புறநடையாக இருக்கக் கூடும். இவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு நிறுத்தி தகுந்த நீதியைப் பெற்றுக் கொள்வது ஏனையவர்களுக்கு நல்ல முன்மாதிரியாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்.

  எட்வின், ’யுமாயினியில்’ கண்டுகொண்ட உங்களை இங்கு கண்டு கொண்டதில் மகிழ்ச்சி.உங்கல் 10 கிலோ ஞானம் படிக்க ஆவலுடையேன்.

  ReplyDelete
 13. @விக்கி உலகம்...

  அதுதான் எனக்கும் தெரியலை. சம்பந்தப் பட்டவங்க உடனே ஏதாவது நடவடிக்கையில் இறங்கினாதானே அடுத்தவங்களுக்கு ஒரு எச்சரிக்கையா இருக்கும்...!

  ReplyDelete
 14. @அன்புடன் மலிக்கா...

  வாங்க மலிக்கா... முதல் வருகைக்கு எனது முகமன்.

  ReplyDelete
 15. @ கமலேஷ்...

  அப்படின்னுதான் நாம நினைச்சிட்டு இருக்கோம்...

  ReplyDelete
 16. @vasan....

  //நீதி, நேர்மை, ம‌னித‌ம், ம‌னச்சாட்சி போன்ற‌ நல்நெறிக‌ள் கால‌த்தால் ம‌றைந்துவிடும்.//

  இழக்கக் கூடாததை எல்லாம் எதைப் பெற...? தீர்க்க தரிசியின் சொற்கள் தீப் பிழம்புதான். ஒரு சொடுக்கலில் எல்லாவற்றையும், எல்லாரையும் சரிசெய்துவிட ஒரு மாயாஜாலக் காரனை மனம் அவாவுகிறது. பேராசையோ...

  ReplyDelete
 17. @Harani...

  //கொலைக்குற்றவாளிகளாகக் கருதி சிறைத்தண்டனையும் அளிக்கவேண்டும்.//

  அதற்கெல்லாம் வாசன் ஐயா சொல்வது போன்ற துரதிர்ஷ்டம் பிடித்த இந்த நாட்டில் நாம் பிறந்தே இருக்கக் கூடாது. அடிப்படை தவற்றால் அரசும், அரசின் தவற்றால் அனைத்தும் குட்டிச் சுவராகிறது.அவரவர் தம் மனசாட்சிக்கு பயந்து மனிதம் குறையாமல் வாழ வேண்டுமென்ற சங்கல்பமெல்லாம் சக மனிதர்களின் போக்கில் சிதைகிறது. மீட்டெடுக்க வேண்டும்.

  ReplyDelete
 18. @ஹேமா...

  சட்டங்களைக் கடுமைப் படுத்தவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் ஆட்சி அமைப்பிலிருப்போர் சுயநலமற்று நாட்டை வீடாக பாவித்தால் இத்தகைய அசிங்கங்கள் நம்மை நெளிய வைக்காதோ தோழி...

  ReplyDelete
 19. @ தமிழ்த்தோட்டம்...

  வாங்க தமிழ்த் தோட்டம்... முதல் வருகைக்கும் ஆதரவுக்கும் நெகிழ்ச்சி.

  ReplyDelete
 20. @ மனோ சாமிநாதன்...

  //இன்னும் எழுதக்கூடாத கயமைகள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டுதானிருக்கின்றன!//

  ஆம் சகோதரி... மாணவர்களை அடிக்கக் கூடாது என்ற சட்டம் வந்ததும் மனம் வெதும்பி புலம்பிய ஆசிரியரையும் கண்டிருக்கிறேன். இதுநாள் வரை அவருக்கு வெளியிடத்து (வீட்டு) மன அழுத்தங்களின் வடிகாலாயிருந்த அம்மாணவச் செல்வங்களின் உடல், மனம் குறித்த அனுதாபமெழுந்தது எனக்குள். வேலையிலிருந்த போது பாலியல் கொடுமைக்காகப் பேப்பர் வரை செய்திகள் அம்பலமாகி, ஓய்வுக்குப் பின் கோயில் கோயிலாக தானும் சுற்றி தன்னுடன் பக்தர்களையும் வழிநடத்தும் பணியில் ஈடுபட்டு பாவம் கழிக்க அலையும் ஆசானையும் அறியக் கிடக்கிறோம் நாம்.

  ReplyDelete
 21. @ரிஷபன்...

  படைத்தவன் மேல் பாரத்தைப் போட்டு மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

  ReplyDelete
 22. @சிவகுமாரன் ...
  வேறென்ன செய்வது... சூழ்நிலைக் கைதிகளாய் தானே பெரும்பாலானோர்...?

  ReplyDelete
 23. @ப்ரியமுடன் வசந்த்...
  உங்க கருத்து எனக்கு முற்றிலும் உடன்பாடே வசந்த்... தலையாய பணியை தலைவலியாக்கிய கடுப்பின் தெறிப்பே இது.

  ReplyDelete
 24. மணிமேகலா said...:
  29 March 2011 04:39

  //நண்பர் எட்வின் சொல்வது போல அவர்கள் சாதாரண ஊழியர்கள் அல்ல.அவர்களுக்கென்று தனியான சமூகப் பொறுப்புணர்வு வேண்டும்.அவ்வாறு இருப்பதையே சமூகமும் எதிர்பார்க்கும். ஏனென்றால் அவர்களை நம்பியே பிள்ளைகளை அவர்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.தேசத்தினதும் பிள்ளைகளினதும் எதிர்காலம் ஆசிரியகளின் கையில் இருக்கிறது.

  பெரும்பாலான ஆசிரியர்கள் அவ்வாறு பொறுப்போடு நடப்பவர்கள் தான். இவர்கள் சிலவேளை புறநடையாக இருக்கக் கூடும். இவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு நிறுத்தி தகுந்த நீதியைப் பெற்றுக் கொள்வது ஏனையவர்களுக்கு நல்ல முன்மாதிரியாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்.//

  எனது என்ன ஓட்டங்களை அப்படியே பிரதிபலித்து இருக்கிறீர்கள் தோழி... மிக்க நன்றி... சரியான புரிதலுக்கு.

  ReplyDelete