28 March 2011 21:19
இரா.எட்வின் said...
வணக்கம் நிலா,
இப்படி ஒன்று நடந்திருக்கவே நடந்திருக்காது என்று சொல்வதற்கில்லை. இது நடந்திருக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆசிரியர் என்றால் புனிதர், தெய்வம் மாதிரி (தெய்வம் என்பதே கற்பிதம் ) என்பன போன்ற மிகை மதிப்பீடுகளை எடுத்த எடுப்பிலேயே எறிந்துவிட வேண்டும். தாராள மயமும் உலகமயமும் தேசத்தின் தரைப் பரப்பெங்கும் கும்மாளமாய் குதித்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆசிரியனும் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் ஒரு சராசரி ஊழியனே. நாளைய உலகச் சமூகத்திற்கான மனித சக்த்தியை தயாரித்து தருபவன் என்கிற அளவில் இவன் மற்ற ஊழியர்களிடமிருந்து மிக அதிகமாய் வேறுபட்டு நிற்க வேண்டும் என்று இந்தச் சமூகம் எதிர்பார்ப்பதில் நியாயமிருக்கவே செய்கிறது.
தாராள மயத்தின் கோர விளைவுகளின் உச்சம் இன்னும்கூட கொடூரமாக இருக்கவே செய்யும். கல்வியும் நுகர் பொருளாகிப் போனதன் விளைவுதான் இது. தாராளமயத்தை சம்மட்டி கொண்டு போடும் வரைக்கும் இது தவிர்க்க முடியாததுதான்.
வணக்கம் தோழர்...
தமிழச்சி போன்ற படைப்புலக வெளிச்சங்கள் வியக்கும் படைப்பாளுமை பெற்ற' தங்கள் முதல் வருகைக்கு வந்தனம். ஆசிரியப் பணியை அறப் பணியாகக் கருதி சேவை செய்யும் தங்களைப் போன்ற, சகோதரர் சுகன் போன்ற, எனது தகைசால் ஆசான்கள் பலரையும் போற்றிக் கொண்டாடுவதை ஒருபோதும் கைவிடேன். சாப்பாட்டில் தென்படும் ஒன்றிரண்டு கற்களை சமைப்பவரிடம் அறிவுறுத்துதல் ஒட்டுமொத்த சமையல் சுவையை குற்றம் சாட்டுவது ஆகாது தானே... தோழி மணிமேகலை எனது எண்ணவோட்டத்தை பிரதிபலித்து விட்டார் எனினும் முல்லையும் கீர்த்திக்குட்டியும் நினைவிலிருப்பதால் தங்கள் கருத்துரையால் ஏற்பட்ட எனது சிந்தனை ஓட்டத்தை ஒரு பதிவிடுமளவு பேச உரிமை எடுத்துக் கொள்கிறேன். 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற பரிதவிப்பு தெரிகிறது தங்கள் கருத்துரையில்.
குறிப்பிட்ட சம்பவங்களிரண்டும் கோர்க்கப் பட்டதல்ல... கேள்விப்பட்டது தான். புனைவல்ல... நிஜமே. எங்களின் அனுபவமாயிருந்தால், என்ன செய்யலாமென்று கைபிசைந்து நின்றிருக்க மாட்டோம். என்ன செய்ய முடியுமென்று ஒரு கை பார்த்திருக்கலாம். சம்பந்தப் பட்டவர்களின் நேரடி அறிமுகமில்லை. கேள்விப் பட்டதும் பொய்யில்லை. எழுந்த குமுறல் தான் பதிவானது. மேலும் சட்டப் பூர்வமாய் ஏதேனும் செய்ய முடியுமா என்ற அறிதலுக்காகவும், அறிவுறுத்தலுக்காகவும் தான். ஒரு நல்லாசிரியராக, பாட திட்ட வரைவில் பங்கேற்கும் அளவு பொறுப்பிலிருக்கும் தாங்கள் அப்படியான ஆலோசனைகளை தந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்.
எங்கள் ஊராயிருந்தும், புகழ் வாய்ந்த தனியார் கல்வி நிறுவனமாயிருப்பதும், வெளிப்படையாய் பெயர் கூறுவது வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாமென்ற காரணத்தாலும் தவிர்க்கிறேன். நிறுவனத்துக்கு இதில் சம்பந்தமில்லை. கண்காணிப்பாளர் வெளிப் பள்ளியிலிருந்து வந்தவர். சுய விருப்பத்திலும் ஆணாதிக்க போக்கிலும் (பின்னணியில் என்ன பலமிருக்கிறதோ யாரறிவர்?) செய்தது என்பது புரிகிறது. இதில் ஆணாதிக்கம் எங்கு வந்தது தோழர் ? எனக் கேட்டு விடாதீர்கள். தங்கள் கருத்துரையில் உலக மயமாக்கலும், தனியார் மயமாக்கலும் பற்றி கேட்க எனக்கும் தோன்றியது. தோழர் சொன்னால் எதோ உள்ளரசியலிருக்கும் என விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறேன்.
ஆனால், இந்த சம்பவத்தில் அதே வயது மாணவ மாணவிகளின் கருத்து என்னவென்றால்... பையன்களிடம் ஆசிரியர்களுக்கு உள்ளூர பயமிருக்கிறது. வெளியில் போனால் கூட்டு சேர்ந்து தாக்கப் படுவோமோ என்று... பெண் பிள்ளை என்றால் மிரண்டுவிடும். புகாருக்கும் போராடவும் துணியாது என்ற தைரியம். அறிமுகமற்ற கவசம். அடையாளம் காட்டப் பட மாட்டோம் என்ற நம்பிக்கை. நெருக்கடியான நேரத்தின் பாதுகாப்பு.
கேட்டவுடன் இப்படி நடந்தால் என்ன செய்யலாமென எங்களுக்கு தெரிந்ததை பிள்ளைகளுக்கு எடுத்து சொன்னோம். பதட்டப் படாமல் தேர்வு முடிந்ததும் தலைமைக் கண்காணிப்பாளரையோ, தலைமை ஆசிரியரையோ அணுகி நடந்ததை சொல்லி புகார் செய்யவும்( தேர்வறையில் சக மாணாக்கர்கள் சாட்சிதானே ) பெற்றோரிடம் பகிரவும் செய்யலாம் என்று. சக அலுவலருக்காக அவர்கள் இரக்கப்பட்டு குற்றத்தை திசை திருப்பினாலும் வியப்பதற்கில்லை. பெற்றோர் உணர்வர். அரசுத் தேர்வுக்காக மாணாக்கர்கள் ஒன்றுக்கு இரண்டு ஆண்டுகள் படும் அல்லாட்டதை, கடும் உழைப்பை.
இதுபற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருக்கும் போது, 'ஏன் நேரமில்லை என மறுத்து அந்த அக்கா அவர் கோபத்துக்கு ஆளாகணும்...? வாங்கி தப்பும் தவறுமா பதில் குறித்து தந்துட்டு வேலையைப் பார்க்க வேண்டியது தானே...' என்கிறது ஒரு பொடிசு.
இன்றைய கால கட்டத்தில் கல்வியின் அத்தியாவசியமும் உச்சபட்ச உழைப்பும் பெரும் பணச் செலவும் எல்லாத் தட்டு மக்களுக்கும் தவிர்க்க முடியாத சுமைதான். இந்த இடத்தில் தங்கள் 'உலக மயமாக்கலும் தாராள மயமாக்கலும்' பற்றிப் பொருத்திப் பார்க்கலாமென நினைக்கிறேன்.
பெற்றோரின் அறிவார்ந்த வழிகாட்டல் வாய்க்காத மாணாக்கர்களுக்கும், வகுப்பாசிரியர்களின் நல்லறிவுரைகளும் தனிப்பயிற்சி ஆசிரியர்களின் அக்கறையான அனுபவப் பகிர்தல்களும் பெருந்துணையாய் இருப்பதை நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.
இந்தப் பதிவேற்றும் நேரம் கிடைத்த தகவலின்படி மருத்துவக் கல்வி குறித்த கனவோடு உழைத்த அப்பேதையும், தோள்கொடுத்த பெற்றோரும் இளங்கலை அறிவியல் படிக்க மனச் சமாதானப் படுத்திக் கொண்டு அதற்கு எந்த கல்லூரி சிறந்தது என்ற தேர்வில் இறங்கியுள்ளனராம் ...
இந்த மனப்பான்மையை என்ன செய்யலாம்...?
மனித மனங்களின் கருத்தியல்புகளும், அவர்களின் விருப்பு வெறுப்புக்களும் அவர் தம் குண இயல்புகளையும் மன ஓட்டத்தையும் அடிப்படையாக வைத்தே வேறுபடுகின்றன. இவ் வகையில் நீங்கள் பதிவிச் கூறியிருக்கும் எதிர்கருத்துக்கள் இக் காலப் பெற்றோரின் யதார்த்த நிலையினை உணர்த்தி நிற்கின்றன,
ReplyDeleteஇவ் இடத்தில் கல்லூரிகளின் நிலையினையு, புகழினையும் கருத்திற் கொண்டு மாணவர்கள் தத்தமது துறைகளைத் தேர்வு செய்கையில் உள்ளூர் கல்வி நிலையங்களின் வளர்ச்சி, காத்திரத் தன்மை என்பன புறக்கணிக்கப்படுகின்றன.
மாணவர்களின் சுய புத்தியில் உருவாகும் விருப்புக்களே சாலச் சிறந்தவையாகும். இதற்கு பெற்றோரோ, அல்லது ஆசிரியர்களோ அம் மாணவர்களை வற்புறுத்தித் அவர்களை ஒரு துறையினுள் இறக்கினால் அது கண்ணை மூடிக் கொண்டு குழியில் வீழ்வதற்கு ஒப்பாகி விடும் என்பதே என் கருத்து.
உங்களது காத்திரமான எதிர்க் கருத்துகளுடன் நானும் ஒத்துப் போகிறேன்.
நல்லாசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.. இப்போதும் இருக்கிறார்கள்.. நீங்களே சொல்வது போல் ஓரிரண்டு கற்களுக்காக குறை காண்பதில் அறிவுடைமை இல்லைதான்.. நாம் இப்போது நல்லனவற்றை அடையாளம் காண்பதிலும் காட்டுவதிலும் பின் தங்கிப் போனோமோ.. என்கிற ஐயம் எனக்குள்.. மீடியாக்கள் எல்லாமே முரண்களை மட்டுமே வெளிச்சம் காட்டுகின்றன..
ReplyDeleteரிஷபன் சொல்வது சரி நிலா.இப்போ எங்கும் எதிலும் வியாபாரம்தானே.அந்த ஆசிரியர் யாரிடம் பணம் வாங்கினாரோ !
ReplyDeleteஇந்த மாதிரி தில்லுமுல்லுகள் எல்லாகாலத்திலும் நடைபெறுகின்றன. அந்த காலத்தில் 'தேர்வில் தேறினால் போதும்' என்கிற மனநிலையில் இருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது தவறாக தெரியவில்லை. இந்த போட்டி மிகுந்த உலகத்தில் நடுத்தர வகுப்பிலிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தங்கள் மதிப்பெண்களால் மட்டுமே நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமென்ற நிலை இருக்கிறது. நிறைய மாணவர்கள் சாப்பிடவும், தூங்கவும் மட்டுமே வீட்டிற்கு வருகிறார்கள். மீதி நேரமெல்லாம் தங்களின் இலட்சியத்திற்கு கடுமையாக உழைக்கிறார்கள். பெற்றோர்கள் கட்டாயப்படுத்திய காலமெல்லாம் சென்றுவிட்டது. ஆறாவது படிக்கும் மாணவனொருவன் தன் காலாண்டுத்தேர்வுக்கு வலைத்தளங்களில் மாதிரி வினாத்தாள் பார்த்துக்கொண்டிருக்கிறான். எனவே, பதினான்கு (இப்போது பதினைந்து) வருடங்கள் அவர்கள் உழைத்த உழைப்பை பதினான்கே நொடிகளில் வீணாக்கும் சுயநலவாதிகளை நாம் எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்கக் கூடாது.
ReplyDeleteஎல்லா ஆசிரியர்களும் இதுபோல இல்லை என்பது அப்பழுக்கில்லாத உண்மை. தன் மாணவர்களின் படிப்புக்காக உற்றார் உறவினர்களை இழக்கும் ஆசிரியர்களையும் நாம் பார்க்கிறோம். ஆனால் குவளை நிறைய இருக்கும் பாலில் ஒருத்துளி விஷம் சேர்ந்தாலும், 'விஷத்தை தவிர மிச்ச பால் நல்ல பால்' என்பவர்களும் இருக்கிறார்கள்... என்ன செய்ய...
கீழேயுள்ள சவுக்கு தளத்தில், தினமணியில் வந்த மதி அவர்களின் கருத்து(கேலி) சித்திரம், உங்களின் சில கேள்விகளுக்கு, முழுமையான பதில் அளிக்கும் என நம்புகிறேன்.
ReplyDeleteதலைப்பு "திரும்பிப் பார்க்கிறோம் (28.07.2007)
http://savukku.net/index.php?option=com_content&view=article&id=633:2011-03-31-02-52-51&catid=9:2010-07-22-06-30-17&Itemid=7
@நிரூபன், ரிஷபன், ஹேமா, சிபிகுமார்...
ReplyDeleteதங்கள் அனைவரின் தொடர்ந்த வருகைக்கும் விரிந்த சிந்தனைப் பகிர்வுக்கும் நன்றியுடையவளாகிறேன்.
@வாசன்...
ReplyDeleteவருகைக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி ஐயா. தொடர்கிறேன்.
யாராக இருந்தாலும் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் முறையீடு செய்திருக்கலாம் தங்களுக்கான நியாயத்திற்கும், இனி வரும் மாணவர்களின் வாழ்கைக்காகவும். குறைந்த பட்சம் ஒரு கடிதமாவது சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அக்கறையுள்ளவர்கள் அனுப்ப வேண்டும். மிகுந்த மனச் சுமையை ஏற்படுத்திய பதிவுகள் தோழி. அந்த பிள்ளைகளின் மனக் கொதிப்பும், வேதனையும் நன்கு புரிகிறது.அவர்களுக்கு இனி சமூகம் மேல் என்ன கருத்து மிஞ்சக் கூடும்?
ReplyDelete@ சைக்கிள்...
ReplyDeleteவாங்க மிருணா... புரிதலுடனான தங்கள் மறுமொழி ஆறுதல் படுத்துகிறது.