நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி

Wednesday, 10 July 2013
   
   
         14.03.1948-ல் மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகச் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியதிலிருந்து ...


       "100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் டெக்ஸ்ட் புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்களாவதை விட, 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்று தான் கூறுகிறேன். திருக்குறள் ஒன்றே போதும் உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்க; உலக ஞானம் மேம்பட. அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இதுவரை அலட்சியப் படுத்தி வந்திருக்கிறோம். ஒரு தாசில்தார், ஒரு மாஜிஸ்ட்ரேட்,  ஒரு நீதிபதி, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களுக்குக் கூட திருக்குறள் ஒன்றே போதும் தமது வேலையை சரியாகச் செய்ய. அவர்களை உத்தியோகத்துக்கு தேர்ந்தெடுக்க பரீட்சை வைக்கும் பொது கூடத் திருக்குறளிலிருந்து தான் கேள்விகள் கேட்கப் பட வேண்டும். திருக்குறளை நன்கு உணர்ந்திருந்தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்கப் பட வேண்டும்... அனைவரும் திருக்குறளைப் படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டுமென்பதுதான் எனது ஆசை." (திருக்குறளும் பெரியாரும்... பக்கம்:33,34)

திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி: (10 படிகள்)

முதற்படி:
       
      முதலில் திருக்குறள் முழுவதையும் முதலிலிருந்து முடிவு வரை பல முறை முறை படித்து விட்டு, 133 அதிகாரங்களின் தலைப்புகளையும் மனனம் செய்யுங்கள். 40வது அதிகாரம் 'கல்வி', 73வது அதிகாரம் 'அவையஞ்சாமை' என எண்ணுடன் அதிகாரத் தலைப்பினை நினைவில் நிறுத்துங்கள்.

இரண்டாம் படி:

       முதல் அதிகாரத்திலிருந்து முறையாகக் குறட்பாக்களை மனப்பாடம் செய்யத் தொடங்குங்கள். ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம் மனனம் செய்யலாம். தங்களது ஆற்றலுக்கேற்ப அளவை வரையறை செய்து கொள்ள வேண்டும் . ஒருநாளும் தளராமல் பயிற்சி செய்ய வேண்டும். காலையில் மனனம் செய்த பகுதியை இரவு வரை ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

      ஒரு நானூறு பக்க ஏட்டினை வாங்கி முதற்படியாக மனனம் செய்த திருக்குறள் அதிகாரத் தலைப்புகளை வரிசையாக எண்ணுடன் நினைவுபடுத்தி எழுதுங்கள். சரிபார்த்துக் கொள்ளுங்கள். மனனம் செய்த குறட்பாக்களை ஒவ்வொரு அதிகாரமாக தலைப்பிட்டு ஒவ்வொரு பக்கத்துக்கு ஒவ்வொரு அதிகாரமாக மனனம் செய்த அன்றே எழுதுங்கள். குறள் வரிசை எண் , முதல் சீர், இறுதி சீர் இவற்றை எழுதினாலே போதும். ஏனெனில் முதல் சீரைப் பார்த்தவுடன் குறள் முழுவதும் இயல்பாகவே நினைவில் வந்துவிடும். இவ்வாறு எழுதும் ஏட்டைத் திருப்பிப் பார்த்து ஆற்றலை வளர்த்துக் கொள்ள உறுதுணையாகும்.

மூன்றாம் படி:

     ஒவ்வொரு அதிகாரமாக மனனம் செய்யும் போது இரண்டாம் அதிகாரம் மனனம் செய்தவுடன் முதல் அதிகாரத்தையும் சேர்த்துச் சொல்லி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். 133-வது அதிகாரம் மனனம் செய்யும்போது திருக்குறள் முழுவதையும் சொல்லிப் பார்க்க வேண்டிய நிலை வந்து விடும். இதற்கு ஆகும் நேரம் ஒரு மணி அளவில்தான் இருக்கும். இவ்வாறு பயில்வதால், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்தக் குறளைக் கேட்டாலும் சொல்லக் கூடிய வைல்வான நினைவாற்றல் உங்களிடம் வளர்ந்து விடும்.

நான்காம் படி:

     தற்போது திருக்குறள் அதிகாரத் தலைப்புக்கள் எண்ணுடன் தெரியும். திருக்குறள் முழுவதும் தெரியும். எண் சொன்னால் குறள்  சொல்லுவதற்குரிய படியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி: திரு. அ . ஆறுமுகம், திருமழபாடி .

  

11 கருத்துரைகள்:

 1. Very Good Useful Post to increase Memory Power. Thanks for sharing.

 1. திருக்குறளை மனனம் செய்ய, அதனிடம் நெருங்கச் செய்ய அவசியமான, நன்கு திட்டமிடப்பட்ட நான்கு படிகள் அவை.

  எல்லாப் படிகளையும் கடக்க முடிந்த எல்லோராலும் கடக்க முடியாது வழுக்கும் படிதான் இப்படி அக் கடைசிப் படி அமைந்திருக்கிறது.

  கற்க கசடறக் கற்றவை - கற்றபின்
  நிற்க அதற்குத் தக.

 1. நல்லதோர் பகிர்வு. திருக்குறள் மனனம் செய்ய ஏதுவான வழிகளை பகிர்ந்ததற்கு நன்றி.

 1. சிறப்பான வழியாகத்தான் சொல்லி இருக்கீங்க....

  பள்ளி காலத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கு படித்தது நினைவுக்கு வருகிறது.

 1. திருக்குறள் ஒலிக்கச்செய்யும்
  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

 1. விநாயகர் அகவல் கிடைத்ததா???

 1. நானும் திருகுறள் மனனம் செய்ய ஆரம்பத்தில் முயற்சி செய்து தினம் ஐந்து குறள் படித்தேன். ஆனால் தொடர்ந்து கடைபிடிக்க முடியவில்லை.
  உங்கள் பதிவை படித்தவுடன் மீண்டும் முயற்சி செய்ய ஆசை ஏற்பட்டு விட்டது.
  நல்ல பதிவு.

 1. திருக்குறளைப் படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டுமென்பதுதான் எனது ஆசையும் கூட...

 1. படி
  படி படி படி
  திருக்குறளினைப்
  படி
  படி படி படி

 1. மிக்க பயனுள்ள தகவல் நிலா.குறிப்பாகப் பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு அது ஒரு சிறந்த வழிகாட்டி. நமக்கும் தான். ஆனால் என்ன கொஞ்சம் வயசு போய் விட்டது. நினைவில திடமா நிக்காது.:)

  முகவுரையில் சொல்லியுள்ள படி பதவிகளுக்கான தேர்வுகள் நடாத்தப் பட்டால் எவ்வளவு அழகான சமூகம் ஒன்று உருவாகும்!

  மக்கள் எவ்வலவு இன்புற்று வாழ்வர்!!

 1. parhti zplus said...:

  நான் தினமும் பார்க்கும் இணையத்தளம் http://www.valaitamil.com/thirukkural.php திருக்குறளை மிக சிறப்பாக தொகுத்துள்ளது. பார்த்து மகிழவும்

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar