நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

' யா தேவி சர்வ பூதேஷூ: சக்தி ரூபேண...

Friday, 26 July 2013


அம்மன் கோயில்கள் அநேக இடங்களில் அநேக சிறப்புகளோடு நீங்க பார்த்திருக்கலாம். முகப்பு வாயிலில் பாரத மாதா சிலையோடு கண்டதுண்டா? உலக மாதாவாகட்டும் பாரத மாதாவாகட்டும்... பராசக்தியின் வேறு உருவம் தானே...!

தில்லை அம்பலராம் சிவகாமி சமேத நடராஜர் குடியிருக்கும் சிதம்பரம் நகரிலிருந்து கடலூர் செல்லும் பாதையில் புவனகிரி வரும். (ஸ்ரீ ராகவேந்திரர் அவதார இடமிருக்கும் புவனகிரி தான்!) 

புவனகிரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் (அரசுப் பேருந்து எண்கள்: 8, 8A, 36, மற்றும் தனியார் சிற்றுந்து (Mini Bus)போன்றவற்றில் பயணிக்கலாம்) உள்கிராமங்களான  ஆயிபுரம், குறியாமங்கலம், எல்லை முடிவில் கீழமணக்குடி கிராமம் துவங்கியதுமே ஸ்ரீ தீப்பாய்ந்தாள் முத்துமாரியம்மன் கோயில் கோபுரம் உங்கள் கண்களுக்குத் தென்படும். 

முடிந்தால் இந்த ஆடிமாத இறுதியில் நடைபெற இருக்கும் 50-வது ஆண்டு தீமிதித் திருவிழா காண வாருங்களேன்... 

இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்று, வெளிப் பிரகாரத்தில் பிரதிருஷ்டை செய்திருக்கும் சப்த கன்னியர் ஒரே சிலையாக வடிக்கப் பட்டிருப்பது. 


(தாணுமாலயன் கோயில்,(பார்க்க: http://jaghamani.blogspot.com/2013/07/blog-post_11.html ),

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த நெருஞ்சிப்பேட்டை காவிரியாற்றின் நடுவே உள்ள கன்னிமார் திட்டு 

மற்றும் சேலம் அம்மாப்பேட்டை காளி கோயிலில் இவ்வாறு ஒரே கல்லில் வடிக்கப் பட்டிருப்பதாக  அறிகிறோம்)

ஸ்ரீ தீப்பாய்ந்தாள் முத்துமாரி அம்மன் வரலாற்றையும் சிறப்புகளையும் மற்றொரு பதிவில் சொல்கிறேன். 7 கருத்துரைகள்:

 1. //இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்று, வெளிப் பிரகாரத்தில் பிரதிருஷ்டை செய்திருக்கும் சப்த கன்னியர் ஒரே சிலையாக வடிக்கப் பட்டிருப்பது.//

  ஆஹா, இங்கும் அப்படியா என நினைத்தேன். ஆனால் நீங்களே சொல்லிட்டீங்க: http://jaghamani.blogspot.com/2013/07/blog-post_11.html ;)))))

  நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள் நன்றிகள்.

 1. தின்னவரும் புலியையும் பராசக்தி வடிவில் பார்த்த பாரதியைக் கொண்டாடும் நாட்டில் மண்மாதாவை பராசக்தியாய்க் கொண்டாடுவதில் வியப்பென்ன? தீப்பாய்ந்தவளின் திருத்தல சிறப்புகளை அறியக் காத்திருக்கிறேன். தொடருங்கள் நிலாமகள்.

 1. கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி...

 1. உலக மாதாவாகட்டும் பாரத மாதாவாகட்டும்...
  பராசக்தியின் வேறு உருவம் தானே...!

  அருமையான ஆலயம் ..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

 1. என்ன ஆடி மாத ஸ்பெஷல் ! நல்ல தகவல்.

 1. கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

 1. உலக மாதாவாகட்டும் பாரத மாதாவாகட்டும்... பராசக்தியின் வேறு உருவம் தானே...!//

  உண்மைதான்.
  ஸ்ரீ ராகவேந்திரர் அவதார இடமிருக்கும் புவனகிரி போய் இருக்கிறேன். அம்மன்கோவில் பார்த்தது இல்லை அடுத்தமுறை வரும் போது பார்க்க வேண்டும்.
  நன்றி.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar