கடந்த வாரம் நடந்தேறிய நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புதுப் புத்தகங்களைப் புரட்டினேன்.(ஆமாமாம்... சிபி நேற்றிரவு 11.30 பேருந்தில் கிளம்பியாச்சு.)
பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாய் ச. மாடசாமி என்பவரெழுதிய ‘பூமரப் பெண்' என்ற நாற்பத்தெட்டு பக்க (பத்தே ரூபாய் தானுங்க) நூலினை வாசித்த வியப்பு தங்களுடனான பகிர்தலைத் துரிதப்படுத்தியது. மார்ச்-2007-ல் முதல் பதிப்பும், 2009-ல் இரண்டாம் பதிப்பும் பெற்ற இந்நூல் நான் கண்டடைய இவ்வளவு காலமாகியிருக்கிறது!
முன்னுரை, அணிந்துரை... பதிப்புரை என ஒன்றுமேயின்றி தடாலெனத் துவங்கி விடுகிற சிறப்பென்னவெனில், உள்ளடக்கம் அதை எல்லாம் தாண்டிய காத்திரமாய் இருப்பது!
மற்றொன்று, நூலாசிரியர் கதைகளைத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் நம்மோடு அவ்வப்போது எதிரிலமர்ந்து கலந்துரையாடவும், விவாதிக்கவும், சிந்தனையைத் தூண்டவுமாயிருக்கிறார். அறிவொளி இயக்கத்தில் இயங்கிய அனுபவத்தில் எழுதப்பட்ட நூல்.நன்றாகவேயிருக்கிறது இந்த உத்தி.
சில நாட்டுப்புறக் கதைகள் பற்றிய தீவிர உரையாடலாகவும், குமுறும் விவாதமாகவும், ததும்பும் ஆச்சர்யமாகவும், வீழ்ந்த அவலத்தின் நிமிர்ந்த தீரமாகவும், பண்பாட்டின் இறுக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் நியாயமாகவும் அமைந்திருக்கிறது இந்நூலின் நுவல்பொருள்.
இனி, நூலின் தலைப்புக் கதையான ‘பூமரப் பெண்' திரு.ச. மாடசாமியின் சொற்களிலேயே உங்களுக்காக ஓரிரு நாட்கள்...
பூமரப் பெண்- ஏ.கே. ராமானுஜன் சேகரித்த கன்னட நாட்டுப்புறக் கதை.
இதைப் பெண் மையக் கதை (Women Centred Tale) என்பார் ராமானுஜன். அதாவது, பெண் மையப் பாத்திரமாக அமைந்த கதை. பெரும்பாலும் பெண்கள் மத்தியில் பிரபலமாகி வழங்கப்படுகிற கதை.
பெண் மையக் கதைகளுக்கும், பிற கதைகளுக்கும் வித்தியாசமிருக்கிறது என்பது ராமானுஜன் கருத்து. பிற கதைகள் திருமணத்தோடு முடியும். பெண் மையக் கதைகள் திருமணத்தில் இருந்து தொடங்கும். அல்லது கதைத் தலைவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கும். அதாவது, திருமணத்தோடு தொடங்கும் பிரச்சினைதான் பெண் மையக் கதைகளின் கருவாக இருக்கும்.
குறியீடுகளும் கதைக்குக் கதை வேறுபடுகின்றன. ஆண் மையக் கதைகளில் (Male Centred Tale) பாம்பு எப்போதும் எதிரிப் பாத்திரமே எடுக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண் மையக் கதைகளில் பாம்பு தோழமைப் பாத்திரம் எடுப்பதாக ராமானுஜன் கருதுகிறார்.
பெண் மையக்கதைகளில் நிகழும் மிக முக்கியமான திருப்பமாக ராமானுஜன் கருதுவது- பெண் தன் துயரத்தை, தன் சொந்தக் கதையைப் பேசுவதும் அதை இதயமுள்ள மனிதர் கேட்பதும்தான். பெண்ணின் பேச்சு பெண்ணுக்கு விடுதலை தருகிறது. அதிகாரத்தின் அடையாளமான ‘பேச்சு', பாதிக்கப்பட்டவருக்கான வாய்ப்பாகும் போது இந்த விடுதலை நேர்கிறது.
‘பூமரப் பெண் சற்று நீளமான கதை. நீளத்தைப் புரிந்து கொள்ள முடியும். இது அதிகம் பேசிப் பேசி, பலரின் கற்பனையும் பங்கேற்று நீண்ட கதை.(கதை முடிவில் உங்களுக்கும் வேலையிருக்கிறது. எனவே, முழுக் கதையும் கவனமாக ஆழ்ந்து படியுங்கள்)
ஒரு சிறிய நாடு. அதில் ஒரு ஏழைக் குடும்பம். தகப்பன் இல்லை. தாயும் இரு மகள்களும். இருவரும் வயதுக்கு வந்த பெண்கள்.
தாய் பெரும்பாடு பட்டு குடும்பத்தை நகர்த்துகிறாள். இது பெண்களின் மனதைச் சுடுகிறது. சிறியவள் அக்காளை அழைத்து ஒரு நாள் சொல்கிறாள்: “யக்கா! அம்மா படுற பாட்டை ஒரு முடிவுக்குக் கொண்டுவர எனக்கொரு மந்திரம் தெரியும்!”
கேட்டதும் அக்கா பரபரப்படைகிறாள். புரியாமல் விழிக்கிறாள். தங்கை சொல்கிறாள்:
“போ, அக்கா! வீட்டு முற்றத்தைக் கழுவிச் சுத்தம் பண்ணு! நீயும் குளிச்சு சுத்தமாகு! நீரில் விரல் படாமல் ரெண்டு பூவாளிகளில் தண்ணி கொண்டு வா! நான் உட்கார்ந்து மந்திரம் சொல்லிட்டிருப்பேன். மெதுவா என் மேல ஒரு வாளித் தண்ணி ஊத்து. நான் மரமா மாறிப் பூவாப் பூத்துக் குலுங்குவேன். நல்லா ஞாபகம் வெச்சிக்க. பூக்களை மட்டும் பறி. இலையையோ கணுவையோ, கிளையையோ சேதப்படுத்திராதே! பூக்களைப் பறிச்சதும் திரும்பவும் இன்னொரு வாளி தண்ணிய மரத்தில தெளி. நான் மறுபடி பெண் ஆயிருவேன்”
அக்கா நீர் கொண்டு வரட்டும். நானும் பெண்ணை பள்ளிக்குத் தயார் செய்துவிட்டு வருகிறேன். நீங்களும் பதிவு மாற்றியதும் உடனே வாங்க!

நானும் வேலைக்குக் கிளம்ப வேண்டும், இருந்தாலும் இப்படிப் பாதியில் விடக் கூடாது, போங்க நிலாமகள்.. கூடவே கிரீஷ் கர்னாடின் நாக மண்டலா நாடகமும் நினைவுக்கு வருகிறது. பத்தியில் உள்ளது போல பாம்பிற்கும், பெண்ணிற்குமான உறவு குறித்த கதை. படமாகவும் மூன்று மொழிகளில் வந்தது. அதையும் வாசியுங்கள். மீண்டும் பிறகு எழுதுகிறேன்.
ReplyDeleteநல்ல பகிர்வு சகோ... நெய்வேலியில் நான் இருந்தபோது இந்தப் புத்தகக்கண்காட்சிகள் நடந்ததில்லை. புத்தகங்கள் வாங்குவதற்காகவே கூட கடலூர் அல்லது பாண்டி செல்வோம் சில நண்பர்கள் சேர்ந்து. தவிர விடுமுறை நாட்களில் நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்து வருவோம்... ம்ம்ம்...
ReplyDeleteநல்லவேளை.. அடுத்த பகுதி போட்டபிறகுதான் வந்தேன்.. எனக்கு சஸ்பென்ஸ் என்றாலே தலை வெடிச்சுரும்
ReplyDelete