பேராசிரியர் த. பழமலய் சொல்கிறார்... “மனித வரலாற்றில் மகாகவி, சாதனை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சூழல், தொடர்ந்த பயிற்சி இவற்றின் தொடர்ச்சி தான் படைப்பாளி, படிப்பாளி எல்லாம்.
வாய் காய்ந்தவர்கள், தலைகாய்ந்தவர்கள் என்று ஏளனத்துக்கு உள்ளானாலும் மனம் காயாத பொட்டங்காட்டு மனிதர்களின் காய்ந்த கதைகள், காயாத கதைகளை எழுதியும் சொல்லியும் இவர்களுக்கிடையில் ஈரம் வளர்பவன் கண்மணி குணசேகரன். என்றுமுள்ள தெந்தமிழ் தன் மேனியில் ஆசையோடு குத்திக் கொள்ளும் பச்சையில் இவனுமொரு புள்ளி.”(கண்மணி குணசேகரனின் ‘தலைமுறைக் கோபம்' கவிதை நூலின் அணிந்துரையில்...)
புதுமைப் பித்தனும், ஜெய காந்தனும், இராமலிங்க அடிகளும், ராகவேந்திரரும் பிறந்த தென்னார்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்தின் மணிக்கொல்லை எனும் செம்மண் பூமி இவரைப் பெற்ற பேறு பெற்றது.
“அவருடைய பெயர் என் இதழ்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது” என்று கீட்ஸ் கூறுவது போல விளிம்பு ஓர மக்களின் வாழ்க்கையும் கதையும் கண்மணி குணசேகரனின் இதயத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தொடுவதற்கு எளிதாக அவருக்குள் கிடக்கிறது. அவலங்களாக, கொதிக்கும் குமிழ்களாக தாகம், ஆத்திரம், சோகத்துடன் எடுத்துத் தருகிற போது கையாளும் லாவகம் ஆகியன படபடவென்று மேலே வருகிறது.” (கண்மணி குணசேகரனின் ‘உயிர்த் தண்ணீர்' சிறுகதைத் தொகுப்பு அணிந்துரையில், சூரியதீபன்...)
கவிதை, கதை, நாவல் என ஒரு சுற்று வந்த பின் வேறொரு வடிவத்தில் நுழையும் மனச்சூழலில் மண்ணுக்குச் செய்த புண்ணியமாக அகராதிப் பணியில் இறங்கினார் கண்மணி. ஆம், அதுதான் ‘நடுநாட்டு சொல்லகராதி.' (டிச.2007ல் தமிழினி வெளியீடு.)
செம்மண் செழிப்பும், முந்திரி, மள்ளாட்டை சுவையுமாக அவரது அகராதி தயாரிப்பின் அல்லாட்டத்தை ‘மள்ளாட்டை மனிதர்கள்' என்றதொரு முன்னுரையில் வாசிக்கும் போது அவரின் நுட்பமும் திட்பமும் நம்மை வியப்பின் உச்சத்திலாழ்த்த வல்லது.
“மள்ளாட்டைக்குப் பேர் போனது தென்னார்க்காடு மாவட்டம். மள்ளாட்டைப் பயிறு விற்பனைக்கும் பேர் போனது விருத்தாசலம் கமிட்டிதான். எள், கொள், நெல், உளுந்து என எல்லாவற்றிற்கும் சேர்ந்து தான் விற்பனை மையம் என்றாலும், ‘மள்ளாட்டை கமிட்டி' என்றுதான் சொல்வார்கள்.
வடக்கில் மடப்பட்டு, அரசூர்; மேற்கில் கண்டப்பங்குறிச்சி, சின்ன சேலம்; தெற்கில் ஆண்டிமடம், செயங்கொண்டம்; கிழக்கில் குறிஞ்சிப்பாடி என எட்டிய தூரத்திலிருந்தும் இங்குதான் விற்பனைக்கு எடுத்து வருவார்கள். இங்கு மட்டும் தான் ‘கடிச்ச வாய் தொடைச்ச மாதிரி' ராத்திரி பத்து மணிக்குக் கொடுத்தாலும், அன்றே பணம் கொடுப்பது.
கிடங்கில் எடை போட்டுக் கொண்டிருப்பார்கள். பிரித்து ‘லாட்டுக் குச்சி'கள் குத்திய மூட்டைகள் வரிசையாக இருக்கும். சில பயிறு மூட்டைகளில், உடைபடாமல் கிடக்கும் ‘ஒத்தாங்கொட்டை'களில் கருப்பாய் ‘கருவடை' மண் ஒட்டியிருக்கும். கருப்பு மண் கட்டிகளும் கிடக்கும். அந்த மூட்டைக்கு நேராய் நிற்கிற ஒரு சில பெண்கள் பேசிக்கொள்வார்கள். “கீகாட்ல போட்ட கள்ள எங்குளுக்கு சரியில்ல...”
அவர்கள் எல்லோரும் முந்தானையின் நுனியை மட்டும் தளர்வாய் செருகி முன்னால் முழுவதும் படர்வாய் தொங்க விட்டிருப்பார்கள். கொண்டையாகப் போடாமல், இரண்டு பிரிவாய் அள்ளி அவசரச் செருகலாய், கொஞ்சம் இழுத்தபடி பேசும் அவர்களை இந்தப்பக்கத்திய எம் சனங்கள் வினோதமாய் பார்க்கும்.
“இது என்னா ஊரு சனம் அம்மாள! காடுங்குதுவோ, கள்ளங்குதுவோ” மயிரை அவிழ்த்து உதறி இறுகலாய் வளைத்து கொண்டை போட்டபடி கேட்பார்கள். இவர்களின் மூட்டை பயிறுகள் சுத்தமாக மண்கட்டி இல்லாதிருக்கும்.
“அதுவோலாம் மேற்கித்தி சனங்க. வேப்பூரு, சின்ன சேலம் பக்கமெல்லாம் கொல்லிய காடுங்கும், மள்ளாட்டைய கள்ளங்கும்...” முந்தானையைக் கோர்த்து வளைத்து, சற்று குஞ்சம் விட்டு செருகியபடி பதில் வரும் இவர்களுக்குள்”
அகராதிக்குரிய எத்தனை எத்தனை அவதானிப்புகளடங்கிய உரையாடல்! படிக்க சுவையேற்றும் அவரது உற்று நோக்கும் தன்மையும் வெளிப்படுத்தும் பாங்கும் என்னை ஆச்சர்யப்பட வைத்தது. வட்டாரமும் மொழியும் பழக்கவழக்கங்களும் மாறுபடுவதை, எத்தனை நுட்பமான வேறுபாடுகளை எழுத்தில் சித்திரமாக்க முடிந்திருக்கிறது இவரால்!
இந்த வட்டார வழக்கு அகராதி தயாரிக்க எண்ணம் முளைத்ததிலிருந்து எப்படியெப்படி பிரயாசைப்பட்டாரென்பதை விலாவரியாக சொல்லிச் செல்வார் இம் முன்னுரையில். தமிழ் ஆய்வாளர்களைப் பற்றிய இவரது கருத்து நம்மை நகைப்பூட்டக் கூடியவை.
“பெருமாள் முருகன் சொல்வது போன்று வழக்குச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் பெற முடியும், தமிழின் வளர்ச்சிக்கு தனிமனித முயற்சிகளே காரணமாக இருக்கின்றன என்றெல்லாம் சொல்வதில் எனக்கு ஆசையில்லை. இது ஏதாகிலும் பிற்காலத்தில் மொழி ஆய்விற்குப் பயன்படும் என்பதிலும் கூட எனக்கு நம்பிக்கையில்லை.
ஏனென்றால், தற்போதைய நவீன தமிழ் ஆய்வாள ‘டாக்டர்களை'ப் பற்றி எனக்கு உவப்பேயில்லை. எனது நாவல் ஒன்றைப்பற்றி ஆய்வு செய்த விரிவுரையாளர் ஒருவரே, “நீங்கள் அந்த நாவலைப் பற்றி என்னவெல்லாம் சொல்ல ஆசைப்படுகிறீர்களோ, அதை கேள்விகளுக்குட்படுத்தி பேட்டியாக எழுதிக் கொடுத்து விடுங்கள். நான் ஆய்வேட்டில் சேர்த்துக் கொள்கிறேன்” என்றார்.
மற்றொரு ஆய்வாளர் ‘நேரம் காலை 9 மணி. இடம்: நூலாசிரியர் வீடு. பேட்டியைத் தொடங்குகிறேன்' என ஆரம்பித்து, கேள்விகளை எழுதி அஞ்சலில் அனுப்பி, பதிலை வாங்கி, என்னவோ ‘நேரில் போய் பேட்டி கண்ட உண்மையை நிலைநாட்டி' டாக்டராகிறார்.
குறைந்தபட்சம் ஆய்வேட்டின் நகல் ஒன்றை நமக்கு அனுப்புவதற்குக்கூட இந்த டாக்டர்கள் தயங்குகிறார்கள்.
அண்மையில் புதுவையில் நடைபெற்ற கிளைமொழியியல் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர்கள் அகராதியை இப்படி வடிவமைக்கலாம், அப்படி வடிவமைக்கலாம். எந்த இடத்தில் ‘த'ன்னகரம் போட வேண்டும், ‘ற'ன்னகரம் போட வேண்டும் என அறிவுறுத்திப் பேசினார்கள்.
“ஒரு நாளைக்கு பல சொற்கள் செத்துக் கொண்டிருக்கின்றன. ‘த'ன்னகரமோ ‘ற'ன்னகரமோ முதலில் சொற்சேகரத்திற்கான வேலையைப் பாருங்கள்” என்றேன்.
முகவுரை, இயல், முடிப்புரை, பொழிப்புரை, துணை நூல்கள், எடுநூல்கள் என வளையங்களுக்குள் சிக்கிக் கிடக்கும் இந்த ‘டாக்டர்கள்' தமிழுக்கு முட்டுக் கொடுப்பார்கள் என்றெல்லாம் ஒன்றுமில்லை.
ஏதாவது பெரிய நிறுவனங்கள் ‘மொய்' அடிக்கிற மாதிரியிருந்தால் நடக்கிறான் என்பதை ‘நடக்கறான், நடக்குதான், நடக்குது' என எழுதி அதையே வட்டார வழக்குச் சொல் என கட்டுரை வரைந்து கொண்டிருப்பார்கள்.”
“சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களின் மொழியில் எதையும் அப்பட்டமாகச் சொல்லுதல், ஆளும் கருத்தியல் மீதான நையாண்டி, சிறுதெய்வ வழிபாடு, வாய்மொழி மரபு, நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களை மீறுதல், தங்களின் அடிமைத்தனத்தின் மீதுள்ள வெறுப்பு, அதற்கான பழிவாங்குதல் போன்ற இன்னபிற பண்புக்கூறுகளைக் கொண்டதாக, காலங்காலமாக அடக்கப்பட்டவர்களின் குரலைக் கொண்டதாக விலக்கப்பட்டவர்களின் மொழி நடையில் கண்மணி குணசேகரனின் படைப்புகளின் உருவம், உள்ளடக்கம் எல்லாம் புதிதாக இருக்கின்றன” என ப.திருநாவுக்கரசு தன் பதிப்புரையில் (‘உயிர்த் தண்ணீர்'-தாமரைச் செல்வி பதிப்பகம்) தெளிவுறுத்துவது சரிதான்!
(இப்போதும் ‘தொடர் பதிவு' வினைத்தொகையாகவே எனக்கிருக்கிறது. தொடர்கிறேன்...)

ReplyDeleteஅட.. எல்லோருக்குமே இதே நிலைதானா?!
விளிம்பு ஓர மக்களின் வாழ்க்கையும் கதையும் கண்மணி குணசேகரனின் இதயத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தொடுவதற்கு எளிதாக அவருக்குள் கிடக்கிறது.
சத்தியமான வார்த்தை. அவரது படைப்புகளைப் படிக்கும்போது நிச்சயமாய் அதை உணர முடியும்.
உங்கள் முன்னுரை முடிவுரை ஆகாமல் பல பதிவுகளுக்கு தொடர்ந்தால் எங்களுக்கு நல்ல நல்ல வாசிப்பு அனுபவம் கிடைத்துக் கொண்டிருக்கும்.
@ ரிஷபன்...
ReplyDeleteதலைவணங்கத் தக்க உற்சாகமூட்டல்...! மிக்க நன்றி!
//உங்கள் முன்னுரை முடிவுரை ஆகாமல் பல பதிவுகளுக்கு தொடர்ந்தால் எங்களுக்கு நல்ல நல்ல வாசிப்பு அனுபவம் கிடைத்துக் கொண்டிருக்கும்.//
ReplyDeleteதிரு. ரிஷபன் அவர்கள் அழகாகச் சொல்லியுள்ளதையே நானும் வழி மொழிகிறேன்.
சூப்பர். Waiting for the next post
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteஅன்பு நி.ம ! சுவையான பதிவு. நானும் தென்னார்க்காட்டுக்காரன் என்பதால் கூடுதல் ஸ்வாரஸ்யம். என் சொந்தஊரான கடலூருக்கு சென்ற பொது நெய்வேலி வழியாய் சென்று வந்தேன்.. நம்ம ஊர் நம்ம ஊர் தாங்க!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஒரு புத்தகத்துக்கு முகம் ’முக உரை’.மிக முக்கியமாக நாம் வாசிக்க வேண்டியதும் கூட.அதனைச் சிறப்பாக முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள் நிலா.
ReplyDeleteதொடர்ந்து உங்களைக் கவர்ந்த முன்னுரைகளை எழுதுங்கள். வாசிக்க மிக ஆவல்.
// நிலாமகள் said...
ReplyDeleteஎது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.//
அருமை அருமை .
//எரிந்த அதன் சாம்பலில்அழகும் இல்லைஅருவருப்பும் இல்லை.//வாஸ்த்தவமான பேச்சு.
வாழ்த்துகளும் நன்றிகளும்!
மொழிபெயர்த்தவரின் பெயரையும் நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?//
என் வலைப்பூவில் தங்களின் சமீபத்திய அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் கதையை கன்னடத்தில் மொழிபெயர்த்த அவர்கள் பெங்களூரில் வாழும் ஒரு பிரபல கர்நாடக இசைக்கலைஞர்.
MUSIC TEACHER ஆக இருக்கிறார். கர்நாடக அரசு நிகழ்த்தும் MUSIC EXAMINATIONS களுக்கு CHIEF EXAMINER ஆகச்செல்பவர்.
பெயர்: ”சங்கீத விதூஷி” திருமதி S. பிரமராம்பா சுப்பராமூ
மேலும் அவர்கள் பற்றிய விபரங்களுக்கு எனக்கு மெயில் செய்தால் தருகிறேன். என் மெயில் விலாசம்: valambal@gmail.com
தங்கள் பதிவுகள் குறித்து வலைச்சரத்தில் இன்று குறிப்பிட்டுள்ளேன்
ReplyDelete@நிலாமகள்,
ReplyDeleteதேதிகளில் ஏதோ கோளாறு. மன்னிக்கவும். இந்தப் பதிவைப் பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_6683.html
சிரமத்திற்கு வருந்துகிறேன்.
@நிலாமகள், இப்போதுதான் என்ன காரணம் என்று தெரிகிறது.
ReplyDeleteவலைச்சரத்தில் நான் பதிவுகளைக் காலை வேளைகளில் இட்ட போதிலும், அது முந்தைய தின இரவின் நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சரி செய்யாமல் / கவனிக்காமல் நான் பதிவுகளை இட்டிருக்கிறேன்.
பின்னூட்டமிட்ட அன்றே உங்களுக்கு சுட்டியையாவது கொடுத்திருக்கலாம்.
இவை என் தவறுகள். இன்னமும் கவனத்துடன் இருக்கவேண்டும் இனி.
சிரமம் கொடுத்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
கோபி 'சார்' எல்லாம் வேண்டாம். கோபி என்று அழையுங்கள். நன்றி.
அப்ப சரி கோபியண்ணா... நாம ரெண்டு பேரும் பழம் விட்டுக்கலாம். சரியா...!
ReplyDeleteஉங்களால ஒரு அறிமுகம் கிடைக்குற குஷியோட வலைச்சரத்துக்கு ஓடிப்போய் உங்க ஒருவாரத்து பதிவுகளையும் அலசினேன். 'காதுல புகை வரது' கண்ணுல பட்டது; என் பெயர் கண்ணாமூச்சி காட்டிடுத்து. என் ஏமாற்றத்தின் சாயல் ஏறிய வார்த்தைகள் மனசைக் கீறியிருந்தா தயவு செய்து மன்னிச்சுடுங்க.
உங்க அறிமுக வரிகள் எனக்கு கொம்பு முளைக்கச் செய்துவிட்டது.உடைத்து ஒரு பக்கம் பத்திரப் படுத்தி விட்டேன். வேண்டிய போது எடுத்துப் பார்த்து உற்சாகமேற்றிக் கொள்ள.
:-))
ReplyDeleteGood one