8 கருத்துரைகள்
  1. நம் உடல் ஒரு வாடகை வீடு.அதை நன்கு பேணி பாதுகாக்க வேண்டும். எல்லா கெட்ட பழக்கமும் தவிர்த்து, உடலையும், மனத்தையும் பேணி, நம்மால் முடிந்த வரை அடுத்தவர்க்கு உதவி செய்கிறோமோ,இல்லையோ,தொந்தரவு செய்யாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். நம் கர்ம வினைகளை கழிக்கத் தான் நாம் வந்திருக்கிறோம் என்று நினைப்பு இருந்தாலே, மரண பயத்தை வெல்லலாம்.அது மரணத்தை வென்றது மாதிரி!
    அது சரி, எத்தனை நாள் தான் வாடகை வீட்டில் குடி இருக்க முடியும்? பொறுப்பாக ‘உரியவரிடம்’ ஒப்படைக்க வேண்டாமா?

    ReplyDelete
  2. மரணம் உண்மையில் மிக ஆனந்தமானது. ஆனால் அது வரும் நேரம் வரட்டும் அதுவரை கிடைத்த நாட்களை எப்படி செலவழிப்பது என்பது அதைப் போலவே ஆனந்தம். தவறான புரிதல்களினால் சிலர் தப்பான முடிவுகளுக்குப் போய் விடுகிறார்கள்.

    ReplyDelete
  3. மனதுக்கு இதம் தரும் அழகான பகிர்வு தோழி.

    வலியான இதயத்துக்கு இதமான ஒத்தடம்.மனதை மெல்ல வருடிக் கொண்டு போகிறது மென் தென்றல்.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு. மரணம் தவிர்க்க இயலாதது. இருக்கும் வரை அடுத்தவர்களுக்கு உபத்திரவம் தராமல் உபகாரம் செய்து கொண்டு இறைவனிடம் அடிபணிந்தால் நல்லது.

    ReplyDelete
  5. மரணம் பற்றிய பக்குவப்பட்ட பதிவு.மரணம் நிச்சயமானாலும் வாழும்வரை நல்ல மனிதனாக, அடுத்தவர்களுக்கு உதவியாக வாழ்ந்து இறப்பதே மேல் !

    ReplyDelete
  6. அவர் இறக்கும் போது பயத்திலோ, பேராசையிலோ இறப்பாரேயானால், அக் கடைசி தருணத்தில் அவர் மனம் எப்படியிருந்ததோ அதுதான் அவருடைய இயல்பாக அவர் இறந்தபின் செயல்படும்.//

    என்ன பயமுறுத்துறீங்க.

    ஆன்மிகம், மன ஒருமைப்பாடு பற்றி உள் உணர்வையும், மன அமைதி பற்றிய தேடலையும் உங்கள் பதிவு சொல்லி நிறப்தோடு வாழ்வின் இறுதி நேரங்களையும், மரணம் பற்றிய மனப் பயத்தையும் பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்- நீங்கள் படித்த புத்தகங்கள் மூலம் நிறையவே அலசியிருக்கிறீர்கள்.

    என்னைப் பொறுத்தவரை சகோதரி, துன்பத்தில் உழன்று, அல்லற்பட்டு இறப்பதை விட சந்தோசமாக இருக்கும் போதே வலிகள் ஏதுமின்றி உயிர் பிரிந்து விடும் பிரிவே மேலானது என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  7. நல்ல பதிவு நிலாமகள்.

    அடிப்படையில் எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான். பிறப்பைக் கொண்டாடும் உரிமை கொண்ட நாம் இறப்பையும் கொண்டாடும் பக்குவம் வேண்டும். நிலையாமை என்பதுதான் உலகின் நிலைபெற்றது. திருமந்திரத்தில் திருமூலர் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, உயிர் நிலையாமை, செல்வம் நிலையாமை என்று பேசுவார். எட்வின் அவர்கள் சொன்னதுபோல இருக்கும் வரை போராடுதல், போராடி வாழ்தல் என்பதுதான் சுகமானது.
    நாம் உயிருடன் இருக்கும் தருணம் வரை நாம் இறக்கவில்லை. மரணம் இல்லை. நாம் இறந்துவிட்டாலோ நாம் மரணம் பற்றி அறிவதில்லை. பின் எதற்கு மரணம் பற்றி பயப்படவேண்டும்? என்று எங்கோ படித்த ஞாபகம்.
    பயத்தை ஒழித்தல் வேண்டும். என்னைப் பொறுத்தளவில் தற்கொலை என்பது குற்றவாளியின் தப்பித்தலைப் போலத்தான். எதிர்கொள்வதுதான் எப்போதும் சுவையானது.

    உடம்பு மயானத்திற்கு விளகேற்றுகிறது. நாம் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ ஒளிவிளக்குகளை உலகில் ஏற்றவேண்டும் என்று என்னுடைய பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் ஒரு நுர்லில் குறிப்பிட்டுள்ளதை எண்ணி இருக்கும்வரை அடுத்தவருக்கும் நமக்கும் பயனாக இருப்போம். வாழ்வோம் எல்லா பயமும் ஒழித்து.

    ReplyDelete
  8. வணக்கம் தோழர். வலை இத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். ஒரு மகானாய் கொண்டாடப் படுபவரோடு என்னையும் இணைத்துப் பார்க்கும் உங்கள் பெருந்தன்மைக்கு எப்படி நன்றி சொல்வேன்

    ReplyDelete