நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பெண் கவிஞர்களுக்கு ஒரு செய்தி...

Tuesday, 14 December 2010
அன்புடைய பெண் கவிஞர்களே...
என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு  இரா.பிரேமா என்கிற பேராசிரியர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அது கீழ்வருமாறு;
"அன்புடையீர்,
வணக்கம். நான் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். பெண்ணியம் குறித்துப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். அவற்றுள் பல தமிழக பல்கலைக் கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாடமாகவும் நோக்கு நூல்களாகவும் உள்ளன. தற்போது பல்கலைக்கழக மான்யக் குழுவிற்காக ‘உலகத் தமிழ்ப் பெண் கவிஞர்கள்-யார்? எவர்?’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். புலம் பெயர்ந்து உலகம் முழுதும் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் கவிஞர்களைத் தொகுக்கும் முயற்சியாகவும் அடையாளம் காணும் முயற்சியாகவும் இது அமையும். உலகத் தமிழ்ப் பெண் கவிஞர்களே! இதற்குத் தங்களின் இதயபூர்வமான ஒத்துழைப்பு தேவை. நான் இத்துடன் இணைத்துள்ள தன்விவரக் குறிப்புகளை நிரப்பி எனக்கு மின் அஞ்சல் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.பலருடைய குறிப்புகள் என்னிடம் இருந்தாலும் அவை முழுமையாக இல்லை. சில தகவல்களை வலைப்பூக்கள் மூலம் அறிய இயலவில்லை. எனவே தயவு செய்து இந்த முயற்சிக்குப் பூரண ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களுக்குத் தெரிந்த பிற பெண் கவிஞர்களுக்கும் இதை மின் அஞ்சல் செய்து தகவல்களைப் பெற உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி.

அன்புடன்,
இரா.பிரேமா.
premakarthikeyyan@gmail.com "

தன்விவரக் குறிப்பு:

1.பெயர்/புனைபெயர்;


2.பிறந்த தேதி;

3.பிறந்த இடம்;

4.பெற்றோர்;

5.குடும்பம்;

6.கல்வித்தகுதி;

7.தொழில்;

8.கவிதை வெளியீடுகள்(ஆண்டுகளுடன்);

9.கவிதைகள் வெளி வந்த இதழ்கள்;

10.பிற வெளியீடுகள்;

11.விருதுகளும் பரிசுகளும்;

12.இயக்கம்/இலக்கிய அமைப்பு சார்பு(இருந்தால்);

13.முகவரி;

14.மின்னஞ்சல் முகவரி;

15.தொலைபேசி எண்/கைபேசி எண்;

16.புகைப்படம்(சமீபத்தியது);

17. தங்கள் வலைப்பூ முகவரி;
----------------------------------------------------------------------------------------

15 கருத்துரைகள்:

 1. தங்கள் முயற்சி வெற்றியடைவ வாழ்த்துக்கள்

 1. dineshkumar said...:

  பகிர்வுக்கு நன்றி சகோ

 1. பாராட்டுகள் உங்களின் நல்ல எண்ணம் வ்ற்றியடையட்டும் பாராட்டுகள்

 1. @தமிழ்த்தோட்டம் ...

  @தினேஷ் குமார் ...

  @போளூர் தயாநிதி...

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தெரிந்த பெண் கவிஞர்களை பேராசிரியர் பிரேமா அவர்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்களேன்...

 1. மின் அஞ்சலுக்கு நன்றி திரு.நிலா மகள்.

 1. நல்ல முயற்சி. நல்வாழ்த்துகள்.

 1. Priya said...:

  பகிர்வுக்கு நன்றி!

 1. ஆண் கவிஞர்கள் என்ன பாவம் செய்தார்களோ?

 1. இது உங்களுக்கான பிரத்யேகக் கடிதம்.

  நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நிலாமகள் மற்றும் பாரதிக்குமார்.

  யாரின் பின்னும் இனிச் செல்லாது நாம் முன்நின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

  எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக் காலங்களிலோ ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

  அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையும் லாப நோக்கற்ற நெடுந்தூரப் பயணத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

  மதம் மொழி இனம் ஜாதி இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

  நம் கவனம் இனி திசைதிருப்புதல்களுக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் தமிழகத்திலிருந்து இந்தச் சுடரை ஏற்றுவோம்.

  பிற மாநிலங்களுக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

  முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

  காத்திருக்கிறேன் அருமை நிலாமகள் மற்றும் பாரதிக்குமார்.

 1. முயற்சி வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரி

 1. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
  இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
  மகிழ்வான முத்தாண்டாய்
  மனங்களின் ஒத்தாண்டாய்
  வளங்களின் சத்தாண்டாய்
  வாய்மையில் சுத்தாண்டாய்
  மொத்தத்தில்
  வெத்தாண்டாய் இல்லாமல்
  வெற்றிக்கு வித்தாண்டாய்
  விளங்கட்டும் புத்தாண்டு.

 1. எங்கே வானத்தில் நிலாவை ஒரு மாதத்துக்கு மேலாய் காணோம்?

  என்னவாயிற்று நிலாவுக்கு?

 1. என்ன ஆயிற்று தோழி?

 1. Karnyan k said...:

  உங்கள் கருக்துகளை நானும் வரவேற்கிறேன்

 1. Karnyan k said...:

  உங்கள் கருக்துகளை நானும் வரவேற்கிறேன்

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar