தோட்டத்தில்
கிளைபரப்பி நிற்கும்
மாமரப் பொந்தில்,
உச்சிப் பொழுதின்
வெம்மையடங்கக் கரையும்
ஒற்றைக் குயிலின் மென் சோகம்...
நடுநிசியில்
அழுகையோய்ந்து கிடக்கும்
சாவு வீட்டின்
ஒற்றை விசும்பலாய்
மனதைப் பிசைகிறது...
ஞாபக அடுக்குகளின்
அடியாழத்தில்
அமிழ்ந்து போன
பலப்பல துயரங்களை
அசைத்து அசைத்து
மேலெழுப்பப் போதுமானதாகிறது அது...
அசைவற்ற மர இலைகளில்
கசிந்து பரவுகிறதென்
வன் சோகம்.
கிளைபரப்பி நிற்கும்
மாமரப் பொந்தில்,
உச்சிப் பொழுதின்
வெம்மையடங்கக் கரையும்
ஒற்றைக் குயிலின் மென் சோகம்...
நடுநிசியில்
அழுகையோய்ந்து கிடக்கும்
சாவு வீட்டின்
ஒற்றை விசும்பலாய்
மனதைப் பிசைகிறது...
ஞாபக அடுக்குகளின்
அடியாழத்தில்
அமிழ்ந்து போன
பலப்பல துயரங்களை
அசைத்து அசைத்து
மேலெழுப்பப் போதுமானதாகிறது அது...
அசைவற்ற மர இலைகளில்
கசிந்து பரவுகிறதென்
வன் சோகம்.
சோகத்தில், தனிமை வன் கொடுமைதன்.
ReplyDeleteபாசங்கின்றி பகிர தோல் வேண்டும் தான்.
மனது கரைகிறது அசைவற்ற மர இலைகளில்
ReplyDeleteகசிந்து பரவும் சோகம் கண்டு.எத்தனை நுணுக்கமான உணர்வும் கவனிப்பும்? சபாஷ் நிலாமகள்.
சோகத்தின் வெளிப்பாடு...
ReplyDeleteநடுநிசியில்
ReplyDeleteஅழுகையோய்ந்து கிடக்கும்
சாவு வீட்டின்
ஒற்றை விசும்பலாய்
மனதைப் பிசைகிறது...
இந்த வரியில் அப்படியே காட்சியாய் கண்ணுக்குள் புலப்பட்ட அதிர்வு.. ஹப்பா..
////நடுநிசியில்
ReplyDeleteஅழுகையோய்ந்து கிடக்கும்
சாவு வீட்டின்
ஒற்றை விசும்பலாய்
மனதைப் பிசைகிறது///
....என் தந்தை இறந்த பின் வந்த நாட்கள்... தேற்ற முடியா அம்மாவின் அழுகை.....திடுக்கிட்டு எழும் இரவுகள்....
மனதைப் பிசைகிறது கவிதை.
முரண் உத்தியில் நேர்த்தி வருகிறது. மென்மையான குயிலின் மென்மையான குரலில் வன்சோகம் காட்சிமைப்பட்டு மனசுலுக்குகிறது. அசைவற்ற இலைகளில் அடர்ந்த பச்சைகளினுர்டாகத் தெரியாத குரலைப்போலக் கசிகிறதுங்கள் சோகம்..வன்சோகம்.. கவிதையின் மொழி அழுத்தமுறுகிறது. துயரமும் ஒருவித சுகம்தான் நிலாமகள்.
ReplyDeleteவாசிக்கும் போதே துயர உலகில் காலடி எடுத்து வைத்த பிரமையை ஏற்படுத்துகிற உயிர்ப்பான கவிதை.
ReplyDelete"ஞாபக அடுக்குகளின்
ReplyDeleteஅடியாழத்தில்
அமிழ்ந்து போன
பலப்பல துயரங்களை
அசைத்து அசைத்து
மேலெழுப்பப் போதுமானதாகிறது அது"
உண்மை தான் நிலா, ஞாபக அடுக்குகளின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் சேதிகள் தான் எத்தனை எத்தனை? கசிந்து பரவும் வன் சோகம் நெஞ்சைத் தொடுகிறது...
சரியான தலைப்பு தான்.
ReplyDeleteநல்ல கவிதை. அருமை.
ReplyDeleteகவிதையின் ஒவ்வொரு சொல்லிலுமே வன்சோகம் அடர்ந்து அமுக்குகிறது.பெருவலி மனதில் !
ReplyDelete