நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

ஆறாம் அறிவின் பாதகம்

Tuesday, 28 February 2017
நன்றி:
http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html

விதவிதமான வினாயகர் உருவங்கள்
சிரிக்கும் புத்தர் சிலைகள்
குபேர பொம்மைகள்
கொஞ்சும் சதங்கைகள்
வண்ணவண்ண மணித்திரள்கள்
இலைகள், பூக்கள், கனிக்கூட்டங்கள்
உலகின் ஒட்டுமொத்த
போன்சாய் உருவங்களாக
சாவிக்கொத்துகளின் ஆதிக்கங்கள்.

கோர்க்கப்படும் சாவிகளுக்கு
அணைவாய் இருக்க போட்டா போட்டிகள்
ஒவ்வொருவர் கையிருப்பிலும்
அவரவர் ஆளுகைக்கு உட்பட்டவற்றின்
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரணாய்
விதவிதமான பூட்டுகளின் திறப்பான்கள்

ஒரே வளையதிலிருப்பினும்
வெவ்வேறு மதிப்புகள் ஒவ்வொன்றுக்கும்
வீட்டுக்கு ஒரு பூட்டு
ஒவ்வொரு அறைக்கதவுக்கும் ஒவ்வொன்று
வாகனங்களுக்குத் தனித்தனி
சொந்த வியாபாரத் தலங்களுக்கும் அப்படியே
வேலையிடத்தின் பதவிக்குத் தக்கன
வங்கிகளில் வாயில்காப்போனிடம்
வாசல் கதவுக்கென்றால்
மேலதிகாரிக்கு அலுவலக மேசை மற்றும்
பெட்டக அறைத் திறப்பான்...

எல்லா சாவிகளுக்கும் போலிகள் உண்டு
உரிமையாளரிடம் மட்டுமல்ல
கண்ணி வைத்து திருடும் கயவர்களிடமும்.
கணினியுகத்தில் பாஸ்வேர்டுகளும்
அதையுடைக்கும் எத்தர்களும் ...

அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதவராக
அனைவருமிருந்தால் பூட்டுதானெதற்கு?
சாவியுமெதற்கு??

பிரபஞ்சத்தின் ஐந்தறிவு வரை ஜீவராசிகளுக்கு
பூட்டுமில்லை; சாவியுமில்லை; சாவிக்கொத்துகளுமில்லை!

10 கருத்துரைகள்:

 1. ஆறாம் அறிவின் பாதகத்தினால் மட்டுமே, அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படும் எண்ணமும் நிலையும் வந்து, அவரவர்கள் பொருளைப் பாதுகாத்துக்கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்துகொள்ளப்பட்டு வருகின்றன; அதற்கான பூட்டு சாவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; அவை ஒவ்வொன்றின் பாதுகாப்புகள் பலபடுத்தப் பட்டுவருகின்றன; அவற்றுக்கான மாற்றுச் சாவிகள்; திருட்டுச் சாவிகள் என எல்லாமே ஏற்பட்டுள்ளன என்பதை மிக அழகாக அருமையாக இந்த ஆக்கத்தினில் சொல்லியுள்ளீர்கள்.

  இதனால் உலகில் பூட்டு + சாவிகள் தயாரிப்போர்களுக்கும், அது சம்பந்தமான ஆலைகளுக்கும், ஊழியர்களுக்கும், ஆங்காங்கே பாதுகாவல் பணியில் உள்ளோருக்கும், துப்பறிவோருக்கும், திருடர்களுக்கும், போலீஸ்களுக்கும், நீதி மன்றங்களுக்கும், ஜெயில்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன என்பதைத் தவிர வேறு எந்தப் பிரயோசனமும் இல்லைதான்.

  யோசிக்க வைக்கும் அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

 1. சாவிக்கொத்துக்களைப் பார்த்ததும் இதுபோலதொரு கவிதை எழுத வேண்டும் என தங்களுக்கு சாவி கொடுக்கப்பட்டுள்ள உந்துதலையும் நான் எண்ணிப்பார்க்கிறேன். :)

 1. எல்லோரும் நல்லவர்களாக மாறி, ஒட்டு மொத்தமாகப் பூட்டு சாவிகளே இல்லாத பிரபஞ்சத்தைக் கொண்டு வந்து விட்டாலும்கூட, பாத்ரூம், பெட் ரூம் போன்றவற்றிற்கு தாழ்ப்பாள் மட்டுமாவது அவசியமாகத் தேவைப்படும் என நான் நினைக்கிறேன். :)

 1. ஆக எங்க ஊருக்கு வேலை இல்லை... ஹிஹி...

 1. ஒரு ஊரில் வீடுகளுக்கு கதவு, பூட்டு கிடையாது என்று படித்தேன். (கதவு இருந்தால் தானே பூட்டு)

  கவிதை அருமை.

 1. @வை.கோபாலகிருஷ்ணன்

  //உலகில் பூட்டு + சாவிகள் தயாரிப்போர்களுக்கும், அது சம்பந்தமான ஆலைகளுக்கும், ஊழியர்களுக்கும், ஆங்காங்கே பாதுகாவல் பணியில் உள்ளோருக்கும், துப்பறிவோருக்கும், திருடர்களுக்கும், போலீஸ்களுக்கும், நீதி மன்றங்களுக்கும், ஜெயில்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன//

  கரெக்ட் சார்!

 1. @வை.கோபாலகிருஷ்ணன்
  சாவிக்கொத்துக்களைப் பார்த்ததும் இதுபோலதொரு கவிதை எழுத//

  இதுவுமொரு திறப்பு!

 1. @வை.கோபாலகிருஷ்ணன்
  தாழ்ப்பாள் மட்டுமாவது //

  சாவிக்கொத்து படத்துக்கு பூட்டு, சாவி வரை போன கவிதையை தாழ்ப்பாள், கதவு, ஜன்னல் வரை இழுப்பதுமேன்?

 1. @திண்டுக்கல் தனபாலன்

  அட... ஆமாம்! ஆனால், 'ரவுடியிசம் இல்லாத அமைதிப் பூங்கா திண்டுக்கல்-தன் பெருமை குன்றா வைரக்கல்' என்ற கவிஞர் அம்ஜத் பாரதியின் புகழாரம் போதுமே... சரிதானா சகோ...

 1. @கோமதி அரசு
  ஆம் சகோ... நானும் படித்திருக்கிறேன். கதவு கூட இல்லாமல் மறைப்பாக சாக்கு கட்டி தொங்க விட்டிருக்கும் குடிசை வீடுகளைக் கண்டிருக்கிறேன்.

  பாராட்டுக்கு நன்றி!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar