நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பழமாகிறாய் நீ ... மரமாகிறேன் நான்!

Monday, 13 February 2017


விரிந்த தன் இலைகளில் பச்சையம் வற்றி
செம்மைதூக்கலான
மஞ்சள் நிறமடர்ந்த
வாதாம் மரத்தின் திலக வடிவ இலைகள்
தடக் தடக் என
இரவும் பகலும் உதிர்ந்தபடி இருக்க
மரத்தடியில்
கிளைபடர்ந்த தூரம் வரை
மண்மூடிக் கிடக்கும் இலைமெத்தையில்
ஒய்யாரமாய் அமர்ந்து
விருந்தாகிறாய்
என் புகைப்படக் கருவிக்கு.
வெற்றுக் கிளைகளின் இடைவெளியில்
எட்டிப்பார்க்கும் கதிரவனால்
ஒளி பிரகாசிக்கும் உன் வதனம்
இனி துளிர்த்துப் பூத்துக் காய்த்துக் கனியாகும்
வாதாம் பழ நிறத்தை நினைவூட்டி
வனப்புடையதாக்கியது புகைப்படத்தை.

10 கருத்துரைகள்:

 1. வெற்றுக் கிளைகளின் இடைவெளியில் எட்டிப்பார்க்கும் கதிரவனால் ஒளி பிரகாசிக்கும் அதன் வதனமும் இனி துளிர்த்துப் பூத்துக் காய்த்துக் கனியாகும் வாதாம் பழ நிறத்தை நினைவூட்டிடும் புகைப்படமும், கவிதை வரிகளும் ருசியோ ருசியாக உள்ளன. பாராட்டுகள்.

 1. நினைவுக்கு வந்த பாடல் :

  நீ காற்று... நான் மரம்...
  என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்...
  நீ மழை... நான் பூமி...
  எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்...
  நீ இரவு... நான் விண்மீன்...
  நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்...

  நீ அலை... நான் கரை...
  என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்...
  நீ உடல்... நான் நிழல்...
  நீ விழ வேண்டாம் நான் விழுவேன்...
  நீ கிளை... நான் இலை...
  உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்...
  நீ விழி... நான் இமை...
  உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்...
  நீ ஸ்வாசம்... நான் தேகம்...
  நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்...


  நீ வானம்... நான் நீலம்...
  உன்னி நானாய் கலந்திருப்பேன்...
  நீ எண்ணம்... நான் வார்த்தை...
  நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்...
  நீ வெயில்... நான் குயில்...
  உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்...
  நீ உடை... நான் இடை...
  உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்...
  நீ பகல்... நான் ஒளி...
  என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்...

  படம்: நிலாவே வா

 1. உங்கள் கவிதை அருமை.
  திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நினைவுக்கு வந்த பாடல் என் நினைவுக்கும் வந்தது.

 1. ரசனைப்பா.. வாசிக்கும்போதே வாதாம்பழத்தின் வாசம் நாசியோரம்.. சுவை நாவோரம்..

 1. @வை.கோபாலகிருஷ்ணன்
  உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

 1. @திண்டுக்கல் தனபாலன்
  மகிழ்வும் நன்றியும் சகோ...

 1. @கோமதி அரசு
  அன்பான வருகையும் கருத்தும் மகிழ்வு தந்தன சகோ...

 1. @கீத மஞ்சரி

  மகிழ்வும் நன்றியும் தோழி...

 1. நல்ல கவிதை. பாராட்டுகள். படமும் அழகு.

 1. @வெங்கட் நாகராஜ்

  மிக்க நன்றி சகோ...
  எங்க வீட்டு வாதாம் மரம்!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar