நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

முகிலில் மறைந்த நிலா

Tuesday, 7 February 2017
பட உதவி: வெங்கட் நாகராஜ் 
உடைக்குப் பொருத்தமாய்
வளையல், நகப்பூச்சு, கொண்டையூசி
எல்லாம் அழகுதான்.
உன் வெள்ளைப் பல்லிலும்
பஞ்சு முட்டாய் தின்று படிந்த
பக்கி ரோஸ் கலர் பிரமாதமென்றேன்
நாணிக் கவிழ்கிறாய் தோழியின் தோளில்.  10 கருத்துரைகள்:

 1. அழகான கவிதையொன்றை எழுதி இங்கு பதிவாக வெளியிட்டு ........

  ‘நம்மால் இதுபோலதொரு கவிதை எழுத நமக்கு எப்போதுமே தோன்றுவது இல்லையே என்ற வெட்கத்தில்’

  நாணி கவிழ வைத்து விட்டீர்கள் ..... கடைசியில்.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

 1. அருமை... ரசித்தேன்...

 1. படமும் கவிதையும் அருமை.

 1. வெக்கத்தப் பாருங்கப்பா...
  விடலப் பொண்ணு சிரிக்கும் அழகு நம் கற்பனைக்கு....
  திரும்புடீ கொஞ்சம்; பாக்கணும் உன்ன...

 1. @வை.கோபாலகிருஷ்ணன்
  உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

 1. @திண்டுக்கல் தனபாலன்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 1. @கோமதி அரசு
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 1. @மணிமேகலா

  எழுதத் தூண்டியது வெங்கட் நாகராஜ் அவர்களின் புகைப்படத் திறன் தோழி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

 1. நான் புகைப்படம் எடுக்க காமிராவை எடுத்தவுடன் வெட்கத்தில் தோழியின் தோளில் முகம் புதைத்த அழகு எனக்குப் பிடித்திருந்தது! அப்பெண்ணிடம் இந்தப் புகைப்படம் காட்ட முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு!.....

  பொருத்தமான கவிதை சகோ. பாராட்டுகள்.....

 1. @வெங்கட் நாகராஜ்

  முகம் மறைத்தாலும் அவள் உடல்மொழியின் குறிப்புகள் பேரழகி ஆகவே நமக்குக் காட்டுவது வியப்பு தான் சகோ... இயல்பானதொரு தருணத்தின் மிக அழகான பதிவு உங்கள் புகைப் படம்.

  அவரவர் புகைப்படங்களை ஆயிரமாயிரமாக தினந்தோறும் வெளியிட்டுக் கொல்லும் முகநூல் கலாச்சாரத்தைப் போலல்லாமல் உங்க பதிவுகளை என்றேனும் ஒருநாள் அப்பெண் கண்டு மகிழ்வாள் என நம்புவோம்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar