நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

சிருங்காரி

Tuesday, 21 February 2017
நன்றி: http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html


தட்டுசுற்றா உடுத்தியிருக்கும்  செல்லம்மா-உன்
தலைச்சுமையா இருப்பதுவும் என்னம்மா
கோணக் கொண்டைக்காரி
கொள்ளைச் சிரிப்புக்காரி
கைவளை கலகலக்க
கட்டுடல் பளபளக்க
என் கண்ணைப் பறிக்குறடி கண்ணம்மா
உன் காலுக்கு செருப்பா நான் வரட்டுமா?

முதல் குண்டு கூழ்ப்பானை
அதுக்கு மேல மோர்ப்பானை
மூணாவதா நெல்லுச்சோறு
நெத்திலிக் குழம்பு அடுத்ததில
மிச்சத்துல வகையான வெஞ்சனம்
தலைக்கு மேல சுமக்கறது சொல்லிட்டேன்
மனசுக்குள்ள இருக்குறத சொல்லட்டா?

உச்சியில ஏறி உள்ளங்காலைக் கொதிப்பேத்தும்
ஒத்தைக் கண்ணன் சாயட்டும் மேற்கே
உழவும் பறம்படியும் முடிஞ்சிடும் அங்கே
பொழுதடங்க வந்துடுவோம் நாங்க
புடிச்சிருந்தா பொண்ணு கேட்டு
வீடுதேடி வாங்க
இப்ப வழிய விட்டு ஓரமாப் போங்க.

14 கருத்துரைகள்:

 1. நான் எடுத்த புகைப்படத்திற்கான உங்கள் கவிதை அருமை. பாராட்டுகள் சகோ.

 1. ’சிருங்காரி’ ..... மிகவும் சிருங்காரமான தலைப்பு.

  ஐந்து அடுக்குப் பானைகளுடன் படத்தேர்வு அட்டகாசம்.

  >>>>>

 1. ’தட்டுசுற்றா உடுத்தியிருக்கும்’ அழகான ஆரம்ப வரிகள்.

  எங்களில் பஞ்சகச்சம் இன்றி சாதாரணமாக வேஷ்டி கட்டுவதை ‘தட்டாடை’ என்றுதான் சொல்லுவோம்.

  >>>>>

 1. இவனின் கேள்விகளிலும், அவளின் அடக்கமான அற்புதமான பதில்களிலும் ஒவ்வொரு வரியும் யோசித்து மிக அழகாகவே பின்னப்பட்டுள்ளன.

  சூரியனை ’ஒத்தைக்கண்ணன்’ என்று சொல்லியிருப்பதும், அது அனைவருக்கும் (என்னைப் போன்ற வழுவட்டைகளுக்கும்கூட) புரியும் வகையில் முன்னே பின்னே போடப் பட்டிருக்கும் சொற்களும் சூப்பரோ சூப்பர் !

  பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

 1. ஆஹா... ரசனை... போறவளே போறவளே பொன்னுரங்கம்.. பாடல் நினைவுக்கு வருகிறது. :)) ஒத்தக்கண்ணன்.. நல்லாத்தான் இருக்கு எரிக்கிறவனுக்கு வச்சிருக்கிற பேர்.. அழகாய் அன்பை வெளிப்படுத்தும் பாமரக்கவிதைக்குப் பாராட்டுகள் தோழி.

 1. கவிதை அருமை! கீதமஞ்சரி எழுதியது போல ' போறவளே போறவளே பொன்னுரங்கம்' பாடல் தான் நினைவுக்கு வருகிறது! படத்தேர்வு அருமை! ஒருவேளை படத்தைப்பார்த்த பிறகு தான் கவிதை பிறந்ததோ?

 1. மிகவும் ரசித்தேன்...

 1. கிராமியக் கவிதை அருமை.
  வெங்கட் படமும் அதற்கு பொருத்தமான கவிதையும் அருமை.

 1. @வை.கோபாலகிருஷ்ணன்
  உடனடி வருகையும் கருத்துகளும் மகிழ்வு தந்தது. நன்றி சார்.

 1. @வெங்கட் நாகராஜ்

  மகிழ்ச்சி சகோ... காமிரா கவிதைகள் அல்லவா உங்க புகைப் படங்கள்!

 1. @கீத மஞ்சரி

  நன்றி தோழி. நீங்க சொன்ன பிறகு அந்தப் பாடலை நினைவு படுத்திக் கொண்டேன்.

 1. @மனோ சாமிநாதன்

  சரிதான் சகோ... வெங்கட்டின் படத்துக்கு தோன்றிய கவிதை.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

 1. @திண்டுக்கல் தனபாலன்

  மிகவும் மகிழ்ச்சி சகோ...

 1. @கோமதி அரசு

  மகிழ்வும் நன்றியும் தோழி!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar