நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

கண்டவர் விண்டிலர்...

Friday, 10 April 2015


சூரியப் பேரொளியில்
வானத்து நிறத்தையுடுத்தி
தகதகக்கிறது
அணைக்கட்டில் சுழித்தோடும் நதிநீர்.

பாதையில் முந்தைய நாள்
அடித்துப் பெய்த மழைச்சுவடு
சற்றுமற்று உருகிய தார்
செருப்பு தாண்டிச்  சூடேற்ற

நீர்த்தேக்க மதகுகளின் நிழல்விழும் பகுதியில்
நிற்குமென் பார்வையில்
மேம்பால ஏற்றத்தில்
மெதுமெதுவாய் ஊர்ந்திடுமோர்
ஊர்தியின் தூரக்காட்சி.

சுதந்திரதினக் கொண்டாட்டத்தில்
குழந்தைகள் குழாம் சேர்ந்தும் பிரிந்தும்
பல்லுருக் காட்டுதல் போல்
தொடுவானின் வெண்மேகங்கள்
கற்பனை கூட்ட

மதகுநிழலருகின் ஆழம்காணா நீரோட்டம்
மேற்பரப்பில் அலையடிக்கிறது சிலுசிலுப்பாய்
காற்றின் துணைகொண்டு...
சில பாய்மரப் படகுகளும் காற்றோட்டத்தில்
அசைந்தாடிச் செல்ல

எதிலிருக்கிறாய் நீ?
ஊர்தியின் எரிபொருளாகவா...
பாய்மரத் துடுப்பாகவா...
பஞ்சபூதங்களிலுமா?
தேடுமென்னுள்ளேயா..!


6 கருத்துரைகள்:

 1. //எதிலிருக்கிறாய் நீ?
  ஊர்தியின் எரிபொருளாகவா...
  பாய்மரத் துடுப்பாகவா...
  பஞ்சபூதங்களிலுமா?
  தேடுமென்னுள்ளேயா..!//

  தலைப்பைப்போலவே அருமையான முடிவு வரிகள்.

  கண்டவர் விண்டிலர்... :)

 1. வணக்கம்
  அம்மா

  செல்லி முடித்த விதம் வெகு சிறப்பாக உள்ளது..பகிர்வுக்கு நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 1. தொடுவானத்தின் வெண்மேகங்கள்,குழந்தைகள் சேர்ந்தும் பிரிந்தும் காட்டும் பல்லுருவாய்த் தோன்றுகிறதா ?! ... அபாரம்.... கவிதையின் காட்சி கண்ணுக்குள் விரிகின்றது... உங்கள் பார்வையாகவே....

 1. அற்புதமான கவிதை...
  (மூன்றாவது வரி: தகதக்கிறது - தகதகக்கிறது?)

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar