நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

தயக்கமெனும் சிறுமதி

Saturday, 18 April 2015


சந்தர்ப்பம் வரும்போது தயாராக இல்லாமல் தாமதிப்பது தோல்வியைத் தான் தரும். முதன் முதல் நிலவுக்குச் சென்ற அப்பல்லோ விண்கலத்தின் முதண்மை விமானி எட்வின் சி.ஆல்ட்ரின். இவர் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண்நடையில் அனுபவம் உள்ளவர் என்பதால் முதண்மை விமானியாக நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் கப்பல் படையில் பணிபுரிந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். நல்ல தைரியசாலி. இவர் துணை விமானியாக (கோ-பைலட்) நியமிக்கப்பட்டார்.

     விண்கலம் நிலவை அடைந்ததும் நாசா விண்வெளி மையத்திலிருந்து பைலட் (எட்வின் சி.ஆல்ட்ரின்) இறங்க கட்டளை பிறப்பிக்கப்பட்டது. புவி ஈர்ப்பு விசையற்ற நிலவில் புதைமணலோ, எரிமணலோ என்ற தயக்கத்தில் சில நொடிகள் எட்வின் தாமதிக்க, நாசாவிலிருந்து கோ- பைலட் இறங்க உத்தரவு வந்துவிட்டது. உலக வரலாறு ஒருநொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் ஆல்ட்ரினை இன்று யாருக்கும் தெரியவில்லை. முதலாவதாக வருபவரைத் தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல; தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கும் இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு.

ஒரு நிமிடத் தயக்கம் நம் மிகப்பெரும் வெற்றியை தடுத்துவிடும் அபாயம் நிறைந்தது. நம் சாதனையை முறியடிக்கும் முதல் எதிரி நம் தயக்கம் கூச்சம் பயம் இவையே. சுருதி மீட்டுவதிலேயே காலம் போகிறதோ... என்ற தாகூரின் வரிகள் சிந்தனைக்குரியது. நாதத்தின் தரத்தை காலம்தான் கணிக்க வேண்டும்.


12 கருத்துரைகள்:

 1. // ஒரு நிமிடத் தயக்கம் நம் மிகப்பெரும் வெற்றியை தடுத்துவிடும் அபாயம் நிறைந்தது. நம் சாதனையை முறியடிக்கும் முதல் எதிரி நம் தயக்கம் கூச்சம் பயம் இவையே.//

  ஆமாம் உண்மையே. நிலவில் முதன்முதலாகக் கால் வைக்க இருந்தவரின் வாய்ப்பு, அவரின் ஒரு நொடி தயக்கத்தால் தவறிவிட்டது என்பது நல்லதொரு உதாரணம்தான். பகிர்வுக்கு நன்றிகள்.

 1. வணக்கம்
  அம்மா
  சொல்லியது உண்மைதான் அதுவும் நல்ல கதைமூலம் சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 1. \\சுருதி மீட்டுவதிலேயே காலம் போகிறதோ... என்ற தாகூரின் வரிகள் சிந்தனைக்குரியது. \\ நினைவில் வைத்துக்கொண்டு செயலாற்றவேண்டியதற்கான உத்வேகம் தரும் வரிகள். பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

 1. ஒரு நிமிடத் தாமதம்..... எத்தனை பெரிய இழப்பு.....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நிலாமகள்.

 1. நிலா!

  மேலாண்மை மற்றும் தலைமைப் பண்புகளுக்கான வகுப்புகளில், இந்த சம்பவத்தை நான் மேற்கோள் காட்டுவதுண்டு. அதை நீங்கள் சொல்லும்போது கேட்டுக் கொண்டேன் சமர்த்துப் பிள்ளையாய்.

 1. @வை.கோபாலகிருஷ்ணன்

  தொடர் வருகைக்கு மகிழ்வும் நன்றியும் சார்.

 1. @ரூபன்

  நன்றி திரு.ரூபன்.

 1. @மோகன்ஜி

  குழந்தை எழுதிப் பழகும் காலம் பெற்றோரும் ஆசிரியரும் அதைப் பெரிதாகக் கொண்டாடுவது போல் தங்கள் வருகையும் கருத்தும் ஜி. தலைப்பை சற்று மாற்றி இருக்கிறேன்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar