27 கருத்துரைகள்
 1. சபாஷ்! காரியம் நடக்கும் வீட்டை, அதற்கு போக வேண்டி செய்யப்படும் ஆயத்தங்களை, அந்த மொத்த சூழலையும் கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். நானும் ஒரு சுவரோரமாய் , வெதுவெதுப்பான சர்க்கரைத் தூக்கலான காப்பியை கையிலேந்தியபடி வெறித்துக் கொண்டிருந்த உணர்வு. ஓடிப்போய் அக்காவுக்கு தைலம் வாங்கிட்டு வந்திருவோமான்னு ஒரு பரபரப்பு.

  இக்லிக் குழந்தையின் அழுகை விலைபேசும் அத்துணை துக்கங்களையும்....

  நெய்வேலி வந்தா ரசம் வச்சு கொடுத்து,, ஒரு ஆட்டோகிராப்பும் போட்டுத் தருவீங்களா நிலா?

  ReplyDelete
 2. வணக்கம்
  கதை மிக அருமையாக உள்ளது தொடங்கிய விதமும் முடித்த விதமும் சிறப்பு...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. காட்சிகள் அப்படியே கண்முன் தெரிந்தன....

  ReplyDelete
 4. துக்கம் கேட்க செல்லும் ஒரு பெண்ணை
  உங்கள் எழுதோவியத்தில் காட்சிபடுத்தி விட்டீர்கள்
  அட்சர பிழையில்லாமல் ஒரு முழு அவதானிப்பு
  உங்கள் சித்தப்பா பூஜைக்கு நானும் உங்கள் எழுத்தை தொடர்ந்து
  உள்கேட்டை திறந்து, சூடம் சேர்த்து வந்துவிட்டேன்...
  அவரது பேத்தி அழுதது தாத்தா செகத்தில் தான்
  என வெளியில் இருந்த நாங்கள் நினைத்திருந்தோம் இதுவரை..
  அது இக்லிக்கா..எப்படியோ பூஜைக்கு பின் ஒரு ஒப்பாரி...

  ReplyDelete
 5. @மோகன்ஜி

  //ஓடிப்போய் அக்காவுக்கு...//

  :))

  //ரசம் வச்சு கொடுத்து,, ஒரு ஆட்டோகிராப்பும்//

  :))

  கதையை பதிவேற்றிய பின் தான் அ.மு.வின் 'இரண்டு சிறுகதைகள்' கட்டுரை வாசித்தேன் ஜி.
  ஒன்று விறுவிறுப்பாக செல்லும் கதை முடிந்ததும் வாசகனுக்குள் பல கேள்விகளையும் மனவெழுச்சிகளையும் தந்தது. இன்னொன்று, வர்ணனைகள் மிகுந்து வாசகன் மனதில் அழியாத சித்திரத்தை உண்டாக்கும்.

  "இரண்டிலுமே வெவ்வேறு அழகு உண்டு" என்று கட்டுரையை முடித்திருப்பார் அ.மு.

  ReplyDelete
 6. @ரூபன்

  தொடர் வருகையும் உற்சாகம் தரும் கருத்தும் மகிழ்வளிக்கிறது சகோ.

  ReplyDelete
 7. @vasan

  மிக்க மகிழ்ச்சி ஐயா! தாங்கள் கருத்திடும் அளவில் கதை இருப்பதற்கு.

  இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு தூரத்து உறவினர் காரியத்துக்கு சென்ற போது கணவர் இழந்த விதவை வாழுங்காலத்தில் அடையும் பல்லாயிரம் துன்பங்களுக்கு இணையாக மனைவி இறந்த ஆண்மகன் தன் சாவுக்கு அழக் கூட ஆளற்ற அவலம் மனசை உறுத்தியது.
  இதை அழுத்தமாக சொல்லத் தவறிய தோல்வி என்னுடையதாகிறது இக்கதையில்.


  நிஜ நிகழ்வில் குழந்தையின் தாய் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டின் மூலம் சமாளித்தார்.

  அவர் அழுததும் இன்னபிறவும் புனைவில் நான் அமைத்தது.

  ReplyDelete
 8. இயல்பாய் நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள் நிலா. நீங்கள் சொல்ல வந்தது தெளிவாகவே இருக்கிறது. சில வாழ்க்கைகள் இப்படித்தான். யார் கண்ணிலும் படாமல் ...இன்னும் எழுதுங்கள் நிலா.

  ReplyDelete
 9. தங்கள் தளம் முதல் முறை வருகிறேன்.நாமும் அந்த இடத்தில் இருந்தாப்போல நினைக்கும் விதத்தில் சொல்லி சென்ற விதம் அருமை. வாழ்த்துக்கள். பாலமகிபக்கங்கள் வந்து செல்லவும்.

  ReplyDelete
 10. அங்கே நானும் நின்று நடப்பதைப் பார்த்தது போல ஒரு உணர்வு. சிறப்பான கதை சகோ. பாராட்டுகள்.

  ReplyDelete
 11. யதார்த்த நிலையை வெகு அழகாக எழுதியுள்ளீர்கள் நிலா! பாராட்டுக்கள்! சமீபத்தில் தான் ஒரு பெரிய துக்கத்தில் கலந்து கொண்டு இங்கே வந்து சேர்ந்தேன். அதை அப்படியே ரிவைண்ட் செய்தது போல இருந்தது!

  ReplyDelete
 12. தங்களுக்கு என்றோ ஏற்பட்டுள்ள இந்த அனுபவத்தை மிகவும் அருமையாக இயல்பாக யதார்த்தமாக எழுதி அசத்தியுள்ளீர்கள். ஏனோ இதனை இன்றுதான் என்னால் படிக்க முடிந்துள்ளது. வெளியிட்டவுடன் படிக்காமல் எப்படிக் கோட்டை விட்டேன் என எனக்கும் புரியவே இல்லை.

  ’செத்த அன்று போகமுடியாமல் பத்து அன்று போவதுபோல’ என்று சொல்வார்கள். அதே போல இந்தப்பதிவினைப் பார்க்கவும் படிக்கவும் எனக்கும் 10-11 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ஒவ்வொரு பாராவையும் ரசித்து, ருசித்து இரண்டு இரண்டு முறை படித்து மனதில் வாங்கிக்கொண்டே படித்து முடித்துள்ளேன். அமர்க்களமானதோர் சம்பவத்தை மிகவும் அமர்க்களமாகவே எழுதியுள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
 13. //சாவு வீடுகளில் மொத்தமாக கலந்து வைத்ததை திரும்பத் திரும்ப சுட வைத்து கொடுத்துத் தீர்க்கும் காபி எனும் தண்டனை இருக்கிறதே...//

  //வீட்டுக்கு போய் பின்கட்டு கதவு திறந்து தலையில தண்ணீ ஊத்துறப்ப தான் எல்லாரையும் பார்த்துப் பேசிக் களைச்ச கண்ணெல்லாம் கபகபன்னு எரிய ஆரம்பிக்கும் எனக்கு. ஈரத் துணியை தலையிலயிருந்து அவிழ்த்துட்டு, பாரமா கனக்கிற தலைய சமாளிக்க ஒரு ரெங்கான டீயை சுடச்சுட ஊத்தியாகணும்.//

  :)))))

  ReplyDelete
 14. // சாவு வீட்டுக்கு தனியா போறது தைலமில்லாம போறது போல இன்னொரு கொடுமை. சாவு அன்னைக்கு எடுக்கிற நேரம் விசாரிச்சு அதுக்கேத்த மாதிரி போய் கும்பலோட கும்பலா நின்னு சொல்லாம கொள்ளாம பாடை கிளம்பியதும் கிளம்பிடலாம்..//

  // பஸ்காரர் கியரை போடுபோடுன்னு போட்டுகிட்டுல்ல ஆக்சிலேட்டரை அழுத்தின மேனிக்கு போறாரு! சகல வளைவு நெளிவுகளிலேயும் குறையாத வேகம். ஆட்டமா ஆடி ஒடம்பெல்லாம் வலியெடுத்துடுச்சு.//

  இந்த இடங்களில் வர்ணிப்புகள் மிக மிக அருமை.

  >>>>>

  ReplyDelete
 15. //குழைய வெந்த பாசிப் பயறும், தூக்கலான வெல்லமும், அளவான ஏலப் பொடி மணமும் அப்பவே ரெண்டு டம்ளர் குடிக்க ஆசையை தூண்டுச்சு. //

  //ஆனா பயத்தம் பாயசம் ஒரு வாய் தான் கிடைச்சுது.//

  :)))))

  ReplyDelete
 16. //சித்தி இருந்து சித்தப்பா போயிருந்தால் அவளது ஒற்றைக் குரலாவது அவரது இழப்பை அர்த்தப்படுத்தியிருக்கும். அவளுக்காக அழுபவர்களேனும் உடன் அழுதிருப்பர். தொடக்கப் புள்ளியற்ற அலங்கோலமாய் ஆனது சூழல் //

  சூப்பரோ சூப்பர் .... நேரேஷன்ஸ்.

  >>>>>

  ReplyDelete
 17. // “முடியாது. முடியாது. எனக்கு இக்லி தா.”
  ஸ்மிருதி குரலெடுத்து அழத்துவங்கி விட்டாள்.
  செய்வதறியாமல் செளம்யாவும் அழ, குறட்டை விட்டுக் கொண்டிருந்த ஜனமெல்லாம் வாரிச் சுருட்டி எழுந்தனர்.//

  ஆங்காங்கே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மிக நல்லதொரு ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 18. @மிருணா

  நன்றி மிருணா!
  தங்கள் படைப்புகளும் என்னை எழுத ஊக்கப் படுத்துவதில் முன்னணியில் இருப்பவை.

  ReplyDelete
 19. @mageswari balachandran

  முதல் வருகையும் ஊக்கப்படுத்தும் கருத்துரையும் மகிழ்வளிக்கிறது தோழி.

  ReplyDelete
 20. @வெங்கட் நாகராஜ்
  மகிழ்வும் நன்றியும் சகோ.

  ReplyDelete
 21. @மனோ சாமிநாதன்
  மகிழ்வும் நன்றியும் தோழி.
  அடுத்த தஞ்சை பயணம் எப்போது?

  ReplyDelete
 22. @yathavan nambi
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 23. @வை.கோபாலகிருஷ்ணன்

  //வெளியிட்டவுடன் படிக்காமல்//

  //ஒவ்வொரு பாராவையும் ரசித்து, ருசித்து //

  //மனதில் வாங்கிக்கொண்டே படித்து//

  இதெல்லாம் உங்களால் மட்டுமே முடியும் சார். பாரபட்சமின்றி செல்லுமிடமெல்லாம் தன்னியல்பில் இருக்கும் நீருக்கு நிகர் நீங்க தான் சார்!

  சக மனிதர்களைப் பாராட்ட வாய்ப்பு தேடும் நல்ல உள்ளம் படைத்தவர் தாங்கள்!


  ReplyDelete
 24. நான் உங்கள் தளத்திற்கு வருவது இதுவே முதல் தடவையாகும். கதை மிக அருமை. நேரம் கிடைக்கும் பொழுது எனது வலைப்பூவையும் பார்வையிட வாருங்கள்.

  ReplyDelete
 25. @Saratha J

  முதல் வருகையும் கருத்தும் மகிழ்வை தருகிறது தோழி. சில மணிகளுக்கு முன் பாலமகி பக்கத்திலிருந்து தங்கள் தளத்தில் சில பதிவுகளைப் பார்வையிட்டேன் தோழி!

  ReplyDelete
 26. மிக்க நன்றி . எனது இன்றைய பதிவு தக்காளி கூட்டு ! நீங்கள் பார்வையிட்டு கருத்து கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன்.

  ReplyDelete