'கிரகச்சாரம்' தொடர்ச்சி....
இரவு வீடு வந்ததே இரண்டு மணிக்கு மேல். எஞ்சிய பொழுது எளிதாக இல்லை. கடத்தினேன் கடத்தினேன்... ஒவ்வொரு வலிக்குமான இடைவெளியை கண்களை மூடி, வலிக்குமிடத்தில் மனதை நிறுத்தி, வலி பரவுவதை வேடிக்கை பார்த்து...
எல்லோருக்கும் விழிப்பு வரும் ஐந்து ஐந்தரைக்கு உறக்கம் வந்தது எனக்கு அரைகுறையாய்... அதுவரை மணி என்ன இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆவல் தலை தூக்கும் போதெல்லாம் கண் திறந்து தலைதூக்கி கடிகாரமிருக்கும் திசை பார்ப்பேன். விரும்பிக் களிக்கும் பொழுதுகளில் ஓட்டமாய் ஓடும் வினாடி முள், நகர்ந்தது நத்தைக்குப் போட்டியாய்.
குளிக்கும் போது ‘நமக்கு ஏன் இப்படியான சோதனை?' என்ற வேதனையில் நீருடன் கலந்தது கண்ணீர். பெருகிய கண்ணீர் மூக்கிலும் சேர, ஒரு மூக்கு மூடி மறு மூக்கை சிந்தியபோது காதுக்குள் வண்டு ஆழத்திலிருந்து மேற்புறம் வருவது போல் உணர்வு. சற்று நேரம் வலியும் வேதனையும் குறைந்தது. பிறகு மறுபடியும் வலி. மறுபடி சிந்தினால் மீண்டும் சற்று வலியில்லை. காது துவாரத்தை மேலாக துணியால் துடைத்தால் வண்டின் கால்கள்! ‘ஆகா'வென பரவசத்தோடு இவரிடம் ஓடிவந்து, ‘வண்டு மேலாக வந்து விட்டது; பாருங்களேன்' என்றால், டார்ச் அடித்துப் பார்த்து, ‘தெரியவில்லையே' என்றவர், சோதனை முயற்சி ஏதும் வேண்டாம். மருத்துவரிடமே காட்டிக் கொள்ளலாம் என்கிறார். இடைவெளி விட்டு திரும்பவும் வலி தான்.
வடலூர் ஈ.என்.டி. டாக்டரிடம் முதல் ஆளாய் போயாச்சு. அப்போதுதான் கதவைத் திறந்திருப்பார்கள் போல. இயல்பு நிலைக்கு வந்து எங்களை அழைக்க அரை மணி ஆனது. வலியின் அளவும் வரும் கால இடைவெளியும் பழகிப் போனதால் பொறுத்திருப்பது சிரமமில்லை. மருத்துவரின் உதவியாளர் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தார். கருவி சரிவர வேலை செய்யவில்லை. 24 மணி நேர மருத்துவரின் இரவுக் குறிப்பையே மறுபதிவு செய்து கொண்டார்.
சாவதானமாக எங்கள் பிரச்சினையைக் கேட்டுக் கொண்ட மருத்துவர், டார்ச் அடித்துப் பார்த்துவிட்டு ‘வண்டு புகுந்திருக்கலாம். அது கடித்ததும் தெரியுது. ஆனா, இப்ப உள்ள எதுவுமில்லை' என்கிறார். அப்போ வலி? அது கடித்ததன் விளைவாம். ஒரு டி.டி. போட்டார். ஒரு சொட்டு மருந்து, வலிநிவாரணியுடன் கூடிய பேராசிட்டமால், ஆண்டிபயாடிக் எல்லாம் மூன்று நாளைக்கு. பிறகு வந்தால் வாட்டர் வாஷ் செய்து பார்க்கலாம்; வண்டு இருந்தால் இறந்தாவது வந்து விடும் என்றவர், எங்கிருக்கிறோம், என்ன வேலை, குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், ஏன் மகளை ஆங்கில மருத்துவம் சேர்க்கவில்லை என பலமாகக் கலந்துரையாடிய பின் 355 ரூபாய் பெற்றுக்கொண்டு வழியனுப்பி வைத்தார்.
இரண்டு முறை சொட்டுமருந்து போடும் வரை நிமிடத்துக்கொரு கொட்டும் வலி இருந்தது. வண்டு காதினுள் சமாதியானதா அல்லது அன்றிரவே பிய்ந்த கால்களை விட்டு நொண்டிக் கொண்டு சென்றுவிட்டதா தெரியவில்லை. கொட்டும் வலி நின்று, காதுப்பக்கம் கைவைத்தால் மட்டும் இலேசான வலி மிச்சமிருந்தது.
வழக்கமான வேலைகளுடனும் வீட்டுக்கு வந்த விருந்தினர்களுடனும் மூன்று நாள் கழிந்தது. வெகு சிரத்தையுடன் மறுபடி அவரிடமே சென்றோம். அதுவொரு ஞாயிற்றுக் கிழமை. அன்றும் மழை தன் வியாக்கினத்தை வைத்துக் கொண்டிருந்தது.
போனவுடன் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு, காதைப் பரிசோதித்தார். ‘சிவந்து கிடக்கே... மாத்திரை சாப்பிட்டீங்களா? பட்ஸ் வைச்சு கொடைஞ்சிங்களா?'
ஆம், இல்லை என்றேன் இரண்டுக்குமாக. எதிரேயிருந்த டி.வி.யை ஆன் செய்தார். அது பாடி ஆடியதில் ஒரு கண் வைத்துக் கொண்டே, உதவியாளரிடம் கை நீட்டினார். அவர் தந்த உபகரணங்களால் காதை மறுபடி உற்று நோக்கினார்.
“ரெண்டு நாள் கழிச்சு வர்றோம். ஆறிய பின் வாட்டர் வாஷ் செய்துக்கலாமா?” என்றோம் இருவரும் அடுத்தடுத்து.
உதவியாளரிடம் கை நீட்டினார். அவர் தயாராக வெதுவெதுப்பான நீரை ஒரு குழலில் நிரப்பித் தந்து விட்டு காதருகே ஒரு பேசினை பிடித்துக் கொண்டார். ‘சர்ர்... சர்ர்...' என்று இரண்டு மூன்று தடவை குழலின் மூக்கு வழியே காதினுள் நீரைப் பீய்ச்சினார். இரு நாட்களாக நின்றிருந்த வலி கிளம்பி விட்டது. கடவுளே... சாய்த்த நீரில் பேசினில் இரத்தத் துணுக்குகளும் சொட்டு மருந்தின் மிச்சங்களும் வந்ததேயொழிய வண்டின் அடையாளமே இல்லை. வண்டு வருமென்ற நம்பிக்கையில் தான் இன்று இவரிடம் வந்ததே.
‘அழுகிப் போன சதைத் துணுக்குகள்... ஜவ்வு ஓட்டையாகிடுச்சு. இனிமே ஐம்பதிலிருந்து எழுவது சதவீதம் தான் உங்களுக்கு காது கேட்கும்' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
‘போதும் தண்ணி அடிக்காதீங்க' என்று கெஞ்சியும் வலுக்கட்டாயமாக மீண்டும் இரு தடவை அடித்தவரை (மானசீகமாகத் தான்) ஓங்கி அறையணும் போலொரு கோபம் என்னுள். வலி மிகக் கடுமையாக தாக்குகிறது. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதென்பது இது தான் போலும். மறுபடி நாலு தினுசு மாத்திரைகள், ஆண்டிபயாடிக் ஊசி ஒன்று. 455 ரூபாயை விட்டெறிந்து விட்டு வீட்டுக்கு வந்தோம். நான்கு நாள் கழித்து வரச்சொன்னார். இனியும் ஏமாறுவதா?
ஜவ்வு ஓட்டையாகுமளவு ஒரு வண்டு கடித்த சம்பவம் ஆகிவிட்டதே... என்பது தான் பெரிய வேதனையாக இருந்தது. அந்நிலையிலும் எல்லா ஓசைகளும் என்னிரு காதுகளிலும் ஒரே மாதிரிதான் கேட்டன என்பது ஆறுதலாகவும் இருந்தது.
ஞாயிற்றுக் கிழமை வரும்படிக்காகவும் வாடிக்கையாக்கி வருமானம் பார்க்கவுமாக பலிகடா ஆக்கப் பட்டிருப்பதாக தோன்றியது. ‘படித்தவன் சூது வாது செய்தால் அய்யோன்னு போவான்' சொன்னவர் வாக்கு சத்தியம். தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்களே... இவரை என்ன செய்யுமோ?! சபித்த மனசின் இயலாமையை என்ன சொல்ல?
வீட்டுக்கு வந்து இரண்டு நாள் ஆனது கிளப்பி விட்ட வலி தணிய. மனசு ஆறவேயில்லை. வேறொரு ஈ.என்.டி. மருத்துவர் குழந்தைகள் வைத்தியம் செய்வதில் பிரபலம். மந்தாரக்குப்பத்தில் எங்கள் பிள்ளைகள் குழந்தைகளாயிருந்த போதே அறிமுகம். அவர் டவுன்ஷிப்பில் மெடிக்கல் ஷாப் ஒன்றில் தினசரி வருகிறார் எனக் கேள்விப்பட்டு ஜவ்வு ஓட்டை ஆகியிருக்கிறதா என அவரிடம் காட்டிக் கேட்கலாம் என முடிவு செய்தோம்.
அவரிடம் பார்க்க டோக்கன் வாங்கிப் போனோம். இன்னும் எங்களை நினைவு வைத்திருந்தவர் காதைப் பரிசோதித்துவிட்டு, ஜவ்வு புண்ணாகியிருக்கு தான். சொட்டு மருந்தைக் கூட நிறுத்தி விடுங்கள். தண்ணீர், காற்று படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போது தேங்காய் எண்ணெயில் பஞ்சை நனைத்துப் பிழிந்து வைத்துக் கொண்டு குளியுங்கள். வெளிக்காற்றில் செல்லும் போது காதில் பஞ்சு வைத்து செல்லுங்கள். அதிகபட்சம் மூன்று மாதத்தில் ஆறிவிடும். மாத்திரைகள் மீதியே போதுமானது என்றார் புண்ணியவான். மருந்து சீட்டு எழுதாததால் கட்டணம் வாங்காமல் டோக்கனை மட்டும் வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டார் உதவியாளர்.
‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது மருத்துவர்களுக்குக் கூட பொருத்திப் பார்த்த தருணம் அது.
மூன்று நான்கு நாளில் சுத்தமாக வலி நின்றதும் பஞ்சு வைத்துக் கொள்வதைக் கூட நிறுத்தி விட்டேன். எல்லா ஒலிகளும் இரு காதுகளிலும் தேனாகப் பாய்கின்றன.
பிறகு, கூகுளில் தேடினால், கரப்பான் பூச்சி புகுந்த கதை, எறும்பு, வண்டு எல்லாம் புகுந்த கதைகள் அறியக் கிடக்கிறது. குப்பைமேனி இலைச் சாறை இதுபோன்ற சமயம் காதில் விட வேண்டும் என்றிருக்கிறது. நடு இரவில் குப்பைமேனியை பறிப்பது நம் சமர்த்து.
இவரின் சினிமாத் துறை நண்பர்கள் வீட்டுக்கு வந்து தங்கி இருந்த போதுதான் இவ்வளவு அமளி துமளியும். வலியும் வேலையும் போட்டி போட்டுக் கொண்டு என் சமர்த்தை சோதித்த பொழுதுகள். அவர்களுள் ஒரு இளைஞன் சொன்ன ஆறுதல்... "எனக்கும் இதுபோல் ஒரு தடவை ஆனது. ஒண்ணும் செய்யலை. தானாப் போயிடுச்சு. காதுக்குள்ள அழுக்கிருந்தா அதை சாப்பிடத் தான் ஏதாவது நுழையும்ன்னாங்க."
"அடேய்.. அடேய்... இதுக்கு நீ எதுவுமே சொல்லாம இருந்திருக்கலாம்." இனியும் யார் கிட்டேயாவது புலம்புவேன்?
தோழி ஜுலியட் ராஜிடம் பேசிய போது, தனக்கு ஒரு தடவை ஒரு வண்டு புகுந்தபோது உள்ளே இறக்கை படபடக்க பறந்த கதையை நினைவு கூர்ந்தவர், அப்போது ஸ்டவ்வில் கொதிவந்து வெந்திருந்த சாதத்தை வடித்தபோது யதேச்சையாக நீராவி அக்காதில் பட, குடுகுடுவென ஓடிவந்த வண்டு அவர் கையில் தஞ்சமானதை பகிர்ந்து கொண்டார்.
இது நல்ல யோசனையாக இருக்கிறதே...
அடுத்த முறை ஏதேனும் புகுந்தால், வெந்நீர் கொதிக்க வைத்து ஆவியில் காதை சாய்த்து வைத்துப் பார்க்கணும்.

இந்தக் கொடுமை இனியொரு முறை உங்களுக்கு நிகழ வேண்டாம். வண்டுகள் வரும் வாய்ப்பு உள்ள வீடு என்றால் முடிந்த மட்டும் காதுகளைப் போர்த்தியபடி படுங்கள். எனக்கு இப்படி ஆனபோது காதுகளில் எண்ணெய் ஊற்றவும் பூச்சி மேலே வந்துவிட்டது. ஆனால் இது சரியான முறையாவெனத் தெரியவில்லை.Take care and get well soon.
ReplyDeleteவண்டுகள் வரும் வாய்ப்பிருந்தால் காதில் சிறிது பஞ்சு வைத்துக்கொள்ளலாமே..
ReplyDeleteயார் பேசினாலும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லையே..
@மிருணா...
ReplyDeleteநல்லாயிட்டேன் மிருணா. இவர் நண்பர் மனைவி கூட வெதுவெதுப்பாக சுட வைத்த எண்ணெய் ஊற்றுவார் தன் அம்மா என்றார். பதிவில் விடுபட்டு விட்டது. 'நெகிழ்ச்சி' எனப்படும் காது கட்டிக்கு தான் எங்கள் பக்கம் அப்படிச் செய்வார்கள். மேலும் முருளு என்றொரு செடியை சூடு காட்டி அதன் சாற்றை பிழிவார்கள்.
@ இராஜ இராஜேஸ்வரி ...
ஆம்! இரட்டைப் பலன்:)
மிகவும் சிரமம்... ஆமாம் வண்டு எங்கே தான் போச்சி...?
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்...
ReplyDeleteஅப்போ வலி? அது கடித்ததன் விளைவாம்.//
//வண்டு காதினுள் சமாதியானதா அல்லது அன்றிரவே பிய்ந்த கால்களை விட்டு நொண்டிக் கொண்டு சென்றுவிட்டதா தெரியவில்லை. //
புரியாத புதிர் தான் சகோ. தோழர் செந்தமிழன் சொன்னது போல் தானாக வெளியேறி விட்டதோ என்னவோ...
என்னப்பா இது இவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருக்கீங்க? காதுக்குள் நீர் பீச்சியடிப்பது காது ஜவ்வைப் பாதிக்குமென்று பல ஈஎன்டி மருத்துவர்களே எச்சரிக்கிறார்கள். இப்படி புண்ணாக இருக்கும்போது காதில் நீர் பீச்சுவது எவ்வளவு வலியும் வேதனையும் தருவதாக இருக்கும்? காதுக்குள் சிறிய உயிரினங்கள் புகுந்துவிட்டால் உப்பு நீரே போதுமானது என்று சொல்வார்கள். எவ்வளவோ மருத்துவ முன்னேற்றம் அடைந்துவிட்ட போதும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் போவது மிகவும் வருத்தம் தரும் விஷயம் நிலாமகள். எப்படியோ அந்த கொடுமையான தருணத்தைக் கடந்துவந்தீர்களே அதுவே நிம்மதி.
ReplyDeleteநமக்கு நடக்கிற எல்லா சம்பவத்திலும் நமக்கொரு அனுபவம் / பாடம் இருக்கும் என்று சொல்வார்கள்.’ ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டிருக்கிறது’ போலும்.
ReplyDeleteஉங்கள் இரு பதிவுகளையும் வாசித்த போது அப்படியே கண்முன்னால் ஒரு காட்சி விரிந்தது.
இனி பூச்சிகள் வருகிற பொழுதுகளில் காதுகளுக்குள் மென்மையான பஞ்சினை மேலாக வைத்துக் கொள்ளுங்கள் நிலா. ( ஆக உள்ளே தள்ளி விடாதீர்கள். பிறகு அது வேறு பிரச்சினை ஆகி விடும்.:)
கஸ்ரம் வந்தால் ஒரு புல்லுக் கூட நம் பல்லை உடைக்கும் என்றார் கண்ணதாசன். நம்மை விழுத்த ஒரு புல்லு போதுமாக இருக்கும். அப்படித்தான் நிலா இதுவும். பாருங்கள் ஒரு சிறு பூச்சி என்ன எல்லாம் செய்து விட்டது!
@கீத மஞ்சரி...
ReplyDeleteஆம் தோழி. எல்லாவற்றிலும் 'நேரம் காலம்' என்று ஒன்றும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எதிர்பாரா நேரத்தில் வரும் இது போன்ற இடையூறுகளில் பயமும் பதட்டமும் நம்மை ஆட்கொண்டு விடுவதால் தாறுமாறாக முடிவெடுத்து விட்டு தடுமாறுகிறோம். ஆறுதலான தங்கள் கருத்துக்கு நன்றி!
@ மணிமேகலா...
சரிதான் நீங்க சொல்வதும். விதி 'வலி'யது தான்:))
'துன்பம் வரும் வேளையிலே சிரிங்க' என்றார் போல் வலியுடன் பயணம் செய்த வேளையிலும் செய்வதறியாமல் எனது மாமியாரும் கணவரும் தவித்ததை எண்ணி சிரித்துக் கொண்டே சென்றேன். திகைப்புடன் என்னைப் பார்த்துப் பார்த்து வண்டி ஓட்டிய கணவர் என்ன நினைத்திருப்பாரோ...
நடந்து முடிந்த பின் பல துன்பங்களும் சிரித்து ஆற்றிக் கொள்ளும் படி இருந்து விடுகின்றன.
சில அனுபவங்கள் பாடமாகும் போது விலையாக வலியும் வேதனையும்.
ஆனாலும் இப்படி வலியைக் கூட விலாவரியாக விளக்கி எழுதும் உங்கள் எழுத்து வன்மைக்கு ஒரு சபாஷ் நிலா....
ReplyDeleteஉண்மையைச் சொல்வதென்றால், இதைப் படித்ததும் முதலில் நீங்கள் எழுதியிருக்கும் விதம் படித்து சிரிப்பு வந்தது. உங்கள் வேதனையை அடியில் தள்ளி, எழுதிய விதத்தால் ஒரு நல்ல நகைச்சுவைக் கட்டுரையாகி விட்டது . பாராட்டுக்கள் நிலா....
ஆனால்,என் பணி அனுபவத்தில் இருந்து ஒரு சின்ன அறிவுரை. ஒரு வண்டு நுழைந்து அதிலும் அது படபடக்கும் வரை தெரிகிறது என்றால், அப்போதே ஒரு நல்ல மருத்துவரைப் பார்ப்பது தான் முறை. நம் கை வைத்தியம் எல்லாம் செய்து, எசகு பிசகு ஆக்கிக் கொண்டு பின் மருத்துவரிடம் போய் ....வேதனை அதிகம் தான் .
இப்படி ஒரு ஈசல் போன்ற பூச்சி காதில் போய் அது பறக்கிறது என்று நான் சொல்ல, தண்ணீர் ஊற்று தண்ணீர் ஊற்று என்று எல்லோரும் சொல்லி நான் முடியாது என்று மறுத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஓடியது நினைவுக்கு வருகிறது. நீங்கள் எழுதியிருப்பது மாதிரி ஒரு இரவு நேரம்தான். ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அந்த மருத்துவர், சிரிஞ்சில் தண்ணீர் அடித்து உயிரோடு அந்த பூச்சியை என் கையில் விட்டார். அட, இன்னும் உயிரோடு இருக்கே என்று நான் அந்த டென்ஷனிலும் ஆச்சரியப் பட, திரும்பி காதிலே விடவா என்று அவர் கிண்டலடித்ததும் நினைவுக்கு வருகிறது.
காதில் எறும்பு போவதற்கும், வண்டு போவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அத்தியாவசியத்திற்கு தகுந்த மாதிரி தான் முதலுதவிகளைச் செய்ய வேண்டும்.இது என் கருத்து மட்டுமே. இப்படி முதலுதவி என்ற பெயரில் பலதையும் செய்து, பிறகு தவிப்போடு வருகின்ற பலரையும் என் பணிச்சூழலில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.
அதனால் மறுபடி இப்படி எதுவும் விருந்தாளிகள் வந்தால்,(வரவே வேண்டாம் என்று கிருஷ்ணனை வேண்டிக் கொள்கிறேன்) ஆவி பிடிக்கக் கிளம்பி விடாதீர்கள்...