நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

இரட்டைக் கொலை

Monday, 10 November 2014
வாகனக் கொட்டகை கதவை விரித்து வைத்து
ஒதுங்கி நின்றேன்
பின்னோட்டமாக நகரத் தொடங்கியது வண்டி
ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டு
விறுவிறுவென வந்த
மழைக் காலக் கருப்பு மரவட்டைகளை
கண்ட கணநேரத்தில் காலால் தள்ளியேனும் இருக்கலாம்.
சரேலென நசுக்கிக் கடந்தது வண்டிச் சக்கரம்
இறுக மூடிக் கொண்டன என்னிரு கண்கள்.
உரு எதுவானால் என்ன? உயிர் தானே...
இரட்டைக் கொலைக்கான தண்டனை யாருக்கு?


5 கருத்துரைகள்:

 1. நானும் இவ்வாறு உணருவதுண்டு சில நேரம்.

  ’நசுக்கிய பின்பு தான் தெரிந்தது
  கரப்பான் பூச்சி கர்ப்பமென்று’

  என்று யாரோ எழுதி இருந்த வரிகளும் கூடவே!

 1. கரப்பான், பூரான், பாச்சை போன்றவற்றை கண்டவுடன் போட்டுத் தள்ளும் இரக்கமில்லா அரக்கிதான் நானும்.

  எறும்பு, மரவட்டை போன்றவற்றிடம் ஏதோவொரு இரக்கம்...

  மழைக் காலங்களில் மரவட்டைகள் பெருகிவிடும் எங்க மண்ணில். வீட்டுக்குள் நுழைந்தால் விளக்குமாறால் அழுத்திப் பிடித்து வெளியேற்றி விடுவேன்.

  இ.பி.கோ.வில் இடமில்லைஎன்றாலும் நம் ஜீவ காருண்ய உணர்வை 'அசை'ப்பதால் இப்பகிர்வு.

  நன்றி தோழி. தேறுதல் மொழிக்கு.

 1. நசுக்கிய பின்பு தான் தெரிந்தது
  கரப்பான் பூச்சி கர்ப்பமென்று’

  ஆஹா.. உலுக்கிய வரி.

 1. உரு எதுவானால் என்ன? உயிர் தானே...

  உண்மைதான்.. மனசு சங்கடப்படும் அப்போதெல்லாம்.. ஆனால் என்ன செய்ய.. சில சமயம் நம்மை மீறிய செயலாகி விடுகிறது

 1. vasan said...:

  மகனை தேர்காலில் இட்டது போல்
  சக்கரத்தை, சக்கரத்தின் கீழ் வைத்து
  நசுக்கி சமன் செய்யலாம் பாவ கணக்கை

  கரப்பான் முட்டையிடும் ரகம் தானே?
  அதையும் கர்ப்பமென்றே அழைப்பார்களா?

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar