கடந்த வாரம் ஒருநாள் இரவு மணி 11.30. படிக்கும் போது படுத்துக் கொள்வதும் (ஒய்வு+வாசிப்பு ) படுக்கும் போது படிப்பதும் எனக்கிருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று.
மழைக் காலங்களில் இரவில் விளக்கொளிக்கு சிறு பூச்சி வகைகள் சுற்றுவதுண்டு. ஈசல் வந்தால் விளக்கணைப்பது; அசுவினிப் பூச்சி மேலே விழுந்தால் நசுக்கி விட்டு வருந்துவோம். அதன் நாற்றத்துக்காக. சிறிய எலுமிச்சை அளவில் தென்னைமரக் கருப்பு வண்டுகள் (அதன் பெயர் காண்டாமிருக வண்டாம். கூகுலார் சொல்கிறார்) கூட சாளரம் வழியே முன்னிரவுகளில் வரும். அவற்றின் 'கிர்ர்' ஒலியில் சுதாரித்து அடித்து வெளியேற்றுவோம். முழுத் துவரை அளவில் கண்ணங்கருப்பாக ஒன்று வரும். பறந்து பறந்து மேலே விழுந்தால் ஊர்ந்து கொண்டே இருக்கும் நம் மேல். இரு விரலால் பிடித்து ஒரே அழுத்தத்தில் உயிரெடுத்து கையெட்டும் தூரத்தில் கிடாசுவோம்.
முசுடு எனப்படும் சிவப்பு எறும்புகள் (அரிசி போன்று முட்டை இடுவன) ஏராளமாக இரவு நேரத்தில் வீட்டுக்குள் வந்து விரும்பிய இடத்தில் அடைந்து இனப்பெருக்கம் செய்யும். நம் மேல் ஏறி தாவிக் குதித்து அனாயசமாகச் செல்லும். பெரும்பாலும் கடிக்காது என்பதால் நாங்களும் பயமின்றி ரொம்பக் கூசினால் விரலால் நசுக்காமல் பிடித்துப் போடுவோம். புதிதாக வரும் விருந்தினர் தரையில் படுக்க நேர்ந்தால் அவர்களுக்கும் தைரியம் சொல்வோம். நாய் வளர்ப்பவர்கள் சொல்வதுபோல்...
சம்பவ நாளன்று சின்னக் கருப்பு வண்டு (துவரையத்தினி) ஒன்று ஒருக்களித்துப் படுத்திருந்ததால் மேல் பக்கமிருந்த வலக்காது மடலினுள் தொப் என விழுந்தது.எழுந்து பறக்க எத்தனமாய் குட்டிச் சிறகுகளை விரித்து கிர் கிர் என்றது. சுதாரித்து பிடித்தேன்... அதன் 'மொழுக்' என்ற மேற்பரப்பில் விரல் வழுக்க தடக்' என்று காது துவாரத்துக்குள் விழுந்தது.
'படக்' என எழுந்து பட்ஸ் எடுத்துக் குடைந்தேன். அதுவோ இன்னும் ஆழமாய் போகவும் பயந்து தண்ணீர் எடுத்து காதில் ஊற்றினேன். அதற்குள் 'வெடுக் வெடுக்' எனக் கடிக்கத் தொடங்கி விட்டது வண்டு.
வலியோடும் பயத்தோடும் கணினி முன் அமர்ந்திருந்த கணவரிடம் ஓடி "காதுக்குள் வண்டு புகுந்து விட்டது. கொஞ்சம் உப்பு போட்டு கரைத்த தண்ணீர் ஊற்றுங்களேன் " என்றேன் பதட்டமாக. அவரும் பரபரப்பாக சமையலறைக்கு ஓடி உப்பை தேடுகிறார். பின்னாடியே ஓடிய நான் உப்பு டப்பாவைக் காட்ட தடதடவென கையில் கிடைத்த கிண்ணத்தில் அதையள்ளிப் போட்டு கரைக்கிறார். அதற்குள் வண்டுக்கு தாங்கவில்லை. கிடைத்த இடமெல்லாம் கடித்து வைக்கிறது.
நான் போட்ட கூப்பாட்டுக்கு அடுக்கக வீடாயிருந்தால் அக்கம்பக்கத்தினர் ஏதோ கொலை நடப்பதாக பதறி ஓடி வந்திருக்கலாம். நல்லவேளை... தனி வீடு. ஒரு நிமிட நடையில் வரும் பக்கத்து வீட்டிலும் ஆளில்லை அன்று.
நான் பறந்த பறப்புக்கு அவருக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. அவசரமாய் உப்புத் தண்ணீரைக் கொட்டிக் கவிழ்க்க, களேபாரத்தில் கலந்து கொண்ட மாமியார் என் தலையை பேயோட்டுவது போல் குலுக்குகிறார். உண்டியலாயிருந்தால் ஒருகாசும் மிஞ்சியிருக்காது. அவரிடமிருந்து தலை தப்பினால் போதுமென்று ஆனது.
கரையாமல் மிச்சமிருந்த உப்பு எரிச்சலையும் தர ஆரம்பித்தது. ஆ... எரியுது காதெல்லாம். வண்டோ ஜவ்வைத் துளைத்து விட்டு தான் மறுவேலை என்பதாக கொட்டிக் கொண்டே இருக்கிறது. 'வெறும் தண்ணி.. வெறும் தண்ணிய ஊத்துங்க...' கதறினேன். சாய்த்திருந்த காதில் சிவனுக்கு அபிஷேகம் போல் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றினார், உடையெல்லாம் நனைய. "வா... வா... கிளம்பு. டாக்டர் கிட்ட போகலாம்" ஓடிப்போய் வேறு புடவை எடுத்து வந்து என்னிடம் வீசி விட்டு உடை மாற்றுகிறார் அவசரமாக.
எங்கள் நிறுவன ஊழியர்களுக்கான மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு உண்டு.
கூடிக் கதையடித்துக் கொண்டிருந்த இரவுப் பணியாளர்கள் பதட்டமின்றி கேட்டுக் கொண்டனர். டார்ச் அடித்துப் பார்த்து விட்டு ஒண்ணுமில்லையே ... என்றனர் அலட்சியமாக. வண்டு ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை கடிக்கும் போதெல்லாம் துள்ளிக் கொண்டிருந்தேன் நான். 'அழுக்கு சேர்ந்துடுச்சு போல' என்றார் சமாதானமாக செவிலி. இல்லைங்க அது கருப்பு வண்டு என்றேன் நான். நம்புவதற்கு அவர்கள் தயாரில்லை. மருத்துவர் துண்டுக் காகிதத்தில் கிறுக்கி, அதோ அந்த ரூம் போங்க. கம்பவுண்டர் இருப்பார். சிரிஞ்சால் தண்ணி அடிச்சு விடுவார் என்றவர் விட்ட இடத்திலிருந்து கதையை தொடர்ந்தார்.
கம்பவுண்டர் நாலு முறை சிரிஞ்சால் நீர் எடுத்து காதுக்குள் வேகமாக பீய்ச்சினார். வண்டு மிதந்தபாடில்லை. இதற்கு முன் எறும்பு புகுந்த அனுபவமுண்டு எனக்கு. மூக்கையும் வாயையும் இறுக மூடி எறும்பு புகுந்த காதை தலையணையில் அழுத்தி தம் பிடித்தால் எறும்பு போன வழியே வரும். வராவிட்டால் தண்ணீர் ஊற்றுவது. மேலே மிதந்து விடும். இந்த வண்டென்னடா என்றால் அதுவும் பயந்து போய் தம் வலுவான கால்களால் இறுகப் பிடித்துக் கொண்டு வருவேனா என்கிறது. கடிக்காமல் இருந்தாலும் 'தொலைந்து போ' என இருந்து விடுவேன். சிரிஞ்ச் அழுத்தியது வேறு வலிக்கிறது .
வெளியில் E N T டாக்டரை பார்ப்போம் என ஆர்ச் கேட்டில் மருத்துவமனை வைத்திருக்கும் டாக்டர் நண்பருக்கு அலைபேசியில் அழைக்கிறார் இவர். வடலூரில் இரண்டு இடங்களை சொல்கிறார் அவர். நண்பர் செந்தமிழனிடம் வேறு ஏதேனும் நாமே செய்ய வழி இருக்கிறதா எனக் கேட்டுப் பார்க்கலாம் என்கிறேன். நேரமோ இரவு ஒரு மணி . அவர் மரபு வழி மருத்துவ நிபுணர். இருப்பதோ தஞ்சையில். அழைப்பு எடுக்கப் படவில்லை.
வீட்டுக்கு வந்து மறுபடி பயணம். E N T டாக்டர் கிடைக்கவில்லை. (பகல் நேர மருத்துவம்.) அடுத்து 24 மணி நேர மருத்துவமனை தேடிக் கண்டுபிடித்தோம். அந்நேரத்திலும் ஒரு கைக்குழந்தை, ஒரு முதியவர், மற்றும் ஒன்றிரண்டு நோயாளர்கள் மருத்துவர் அறைக்கு முன். காத்திருந்த நேரத்தில் தோழர் செந்தமிழன் தானாகவே அழைத்து என்ன விபரமென கேட்கிறார். சொல்லவும்,
"பயப்பட வேண்டாம். ஓரளவுக்கு மேல் உள்ளே போய்விடாது. நம் உடல் அமைப்பு அதுபோலில்லை. உப்புக் கரைசல் தான் சிகிச்சை. அதையும் திரும்பத் திரும்ப செய்ய வேண்டாம். பாதிக்கப் பட்ட காதை தலையணையில் வைத்துப் படுத்து இரவைக் கடத்துங்கள். அதுவாக வெளியேறிவிடும்." என்றார்.
பேசிக் கொண்டிருந்த போதே காத்திருப்பில் எங்கள் முறை வர, வந்தது தான் வந்து விட்டோம் பார்த்து விடலாம் என உள்ளே நுழைந்தோம். அரைத் தூக்கத்தில் ஒரு இளம் மருத்துவர். எங்கள் பிரச்சினையைப் புரிந்து செய்வதறியாமல் ஸ்தம்பித்தார். உதவியாளரை அழைத்து சிரிஞ்சும் டிஸ்டில்ட் வாட்டரும் கேட்டார். டார்ச் அடித்து காது மடலை இழுத்து அறுங்கோணத்திலும் உற்று நோக்கினார். அவர் விரல் நகமெல்லாம் என் வெளிக்காதைப் பதம் பார்த்தன. (இன்னும் பிறை பிறையாக வெளிமடல் சுற்றி வடுவிருக்கிறது) திரும்பவும் தண்ணியடி. சிரிஞ்சை முடிந்தவரை உள்ளழுத்தி தன்னால் ஆனமட்டும் புண்ணாக்கிய புண்ணியவான் அவர்! உதவியாளரிடம் போர்சிப் கேட்டு ஒரு சுரண்டு. வலி தாங்க முடியாமல் 'வேணாம்,
விட்டுடுங்க. காலையில் பார்த்துக்கலாம்' என்றேன். என் பயம் அவர் தன்மானத்தை சுரண்ட, ஜவ்வெல்லாம் இன்னும் தூரத்தில் பத்திரமாத் தான் இருக்கு.' என்றார்.
திரும்ப டார்ச் அடிப்பு. காது இழுப்பு. ஒண்ணும் தெரியலியே... என்றபடி என் முகத்தைப் பார்ப்பார். பிரசவ வலி போல் விட்டு விட்டு நான் துடிப்பேன். நெஜம்மா புகுந்துதா? என்றவர், அவசர சிகிச்சையில் கேட்டதைப் போலவே, 'காதில் வேறு பிரச்சினை, சளித் தொந்தரவு ஏதாவது... ' வலியில் நான் துள்ளுவதைப் பார்த்து பரிதாபப் பட்டு, ஊசி போட்டுக்கறீங்களா? என்றார். 'போட்டுக்கோ, போட்டுக்கோ' என்றார் கணவர். அதற்கு முன் மாட்டேன் என்று தலையாட்டினேன் பலமாக.
இரத்த அழுத்தக் கருவியை எடுத்து எனக்கு சோதித்தார். (காதில் வண்டு புகுந்ததற்கு கூடவா இரத்த அழுத்தம் பார்க்கணும் பகவானே...) வேறு ஏதேனும் உடல் தொந்தரவு இருக்கிறதா என்று கேட்க ஒன்றுமில்லை என்று மறுபடியும் தலையாட்டல். வாங்கும் கட்டணத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என யோசித்தாரோ என்னவோ... தயங்கித் தயங்கி
Voveran, Rantec, Fourt B மூன்றும் இரண்டு நாளைக்கு எழுதித் தந்தார். கட்டணம் இரு நூறு, மருந்து நாற்பத்தைந்து. விட்டால் போதுமென வந்தோம்.
வலி விட்டு விட்டு இருந்தபடியே தான்.தோழர் செந்தமிழன் சொன்னது போல் கடத்தினேன் இரவின் மிச்சத்தை. தத்துவ விசாரத்தில் மனசை
செலுத்தி வலி பொறுக்கப் பழக பயிற்சியாகவும் இருந்தது அப்பொழுது. ஏதோ பெரிய துன்பத்துக்கு பதிலாக தாங்குமளவு வேதனை வந்திருக்கிறது.
மறு நாள் காலை 9 மணிக்கு மறுபடி வடலூர் பயணம். காது மூக்கு தொண்டை நிபுணரிடம். அவர் கிளப்பிய வயிற்றெரிச்சலை அடுத்த பதிவில் ஆற்றுவேன்.

இந்தியாவிலிருந்து இதை இப்போது படித்ததும் என் காதில் வண்டு புகுந்துவிட்டதுபோன்றதொரு வலியை ஏற்படுத்தியுள்ளது.
ReplyDelete>>>>>
எதற்கும் காது இரண்டிலும் பஞ்சை அடைத்துக்கொண்டு, நாளை விமானத்தில் வெளிநாடு பறக்க உள்ளேன்.
ReplyDeleteவண்டு தங்கள் காதிலிருந்து கடைசியாக வெளியேறியதா என்பதை அங்கிருந்துதான் நான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.
>>>>>
காது வலியைப்பற்றிய தங்களின் எழுத்துக்களில் வலிமை அதிகம் உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். :)
ReplyDeleteஇது கிரக்சாரம் தான்.
ReplyDeleteஇருப்பினும் எதிலும் ஓர் நன்மை உண்டு எனச் சொல்லுவார்கள்.
தங்கள் காதினில் வண்டு புகுந்ததில் என்ன நன்மை என்று யோசித்தால், அது சம்பந்தமாக த்ரில்லிங் அனுபவமாக 2-3 பதிவுகள் எழுதி, அனைவருக்கும் ஓர் விழிப்புணர்வு அளித்துள்ளீர்கள் என்று சொல்லலாம். :)
So sad. Take care.
ReplyDeleteநெய்வேலியில் இது போன்ற அனுபவங்கள் நிறைய கிடைக்கும்! எனக்கு ஒரு முறை கரப்பான் பூச்சி உள்ளே சென்று விட இப்படித்தான் களேபரம்! உப்புத் தண்ணீர் விட்டு அதைச் சாகடித்து தான் மறுவேலை!
ReplyDeleteஎன்ன ஆச்சி அப்புறம்...?
ReplyDeleteஎனக்கு இரண்டு மூன்றுமுறை சென்றிருக்கு உப்பு கரைசலிலே வந்துவிட்டது நம்ம ஏரியா அப்படியிருக்கு வண்டுங்க சத்தம் கேட்காம தூக்கம் வராது மழை நேரத்தில் ரொம்ப மோசமாக இருக்கும் பார்த்துக்குங்க ...
ReplyDeleteஐயோ... படிக்கும்போதே எழுத்தில் வேதனை தெறிக்கிறதே..எப்படிதான் தாங்கிக்கொண்டீர்களோ நிலாமகள்? சிறுவயதில் வருடாவருடம் வெளிச்சி எனப்படும் காது கட்டி வந்து காதுவலியின் உச்சபட்ச கொடுமையை அனுபவித்தவள் என்பதால் உங்கள் வலியை உணரமுடிகிறது. சரியான மருத்துவம் இல்லாமல் வேதனை அதிகமானதுதான் இன்னும் கொடுமையான விஷயம். வண்டு கடிக்காமலாவது இருந்திருக்கலாம். ஒருவழியாக வெளியேறியதா?
ReplyDelete@ வை,கோ. சார்...
ReplyDeleteபயண அவசரத்திலும் பதிவு வாசிப்பா...!
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
பயணம் இனிதே அமைய பிரார்த்திக்கிறேன்.
@மிருணா...
ஆறுதலான அக்கறைக்கு நன்றி தோழி.
@ வெங்கட்...
ஐயோ...! எப்படி வெளியில் எடுத்தீர்கள்?
@ திண்டுக்கல் தனபாலன்...
இன்றைய பதிவில் சொல்லி முடித்துள்ளேன் சகோ...
@ தினேஷ் குமார்...
அனுபவித்த வேதனைக்கு இதம் தருகிறது தங்கள் கருத்து.
@ கீத மஞ்சரி...
துன்புற்றவர் துயர் புரிந்து சொல்லும் வார்த்தைகளில் பாதி மருந்து அடங்கி விடுகிறதே தோழி... தங்கள் தோளில் சாய்ந்து கொண்ட நிம்மதி என்னுள். இன்றைய பதிவில் முடித்து விட்டேன் கதையை.
'வெளிச்சி' என நீங்க குறிப்பிடுவதை நாங்க 'நெகிழ்ச்சி' என்போம்.