நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

மரணத்தின் தூசி

Friday, 7 September 2012

பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி இருக்கின்றதென்பது மெய்தானே...
... .... ....

உடம்பு என்பது உண்மையில் என்ன... கனவுகள் வாங்கும் பைதானே...!

 

                எவ்வளவுதான் மனசை துடைத்து துடைத்து தெளிவாக்கிக் கொண்டாலும் ஒவ்வொரு மரணத்தின் தூசியிலும் கலங்கித் தான் போகிறது பாழும் மனசு.

                உறவாயிருக்கட்டும், நட்பாயிருக்கட்டும், அறிந்தவரோ அறியாதவரோ யாராகவேனும் இருக்கட்டும்... இறப்பின் இழப்பு சற்றேனும் சலனப்படுத்தவே செய்கிறது நம்மை. கணநேரமேனும் ஆட்பட்டு மீள்கிறோம்.

                போனவர் போக இருப்பவர் நினைத்து அனுதாபமெழுகிறது.

                மூன்று நாட்களுக்கு முன் தோழர் யாழி கோவையிலிருந்து அனுப்பிய குறுஞ்செய்தியால் திரு.கோவை ஞானியின் துணைவியார் இவ்வுலகைத் துறந்து உடல் கிடத்தினார் என்ற தகவலும் மனதைக் குடைந்தவண்ணமிருக்கிறது.

                அம்மையாரின் ஆன்மசாந்திக்கு நாம் பிரார்த்திப்போம்.10 கருத்துரைகள்:

 1. சில இழப்புக்கள் மறக்கவே முடியாதது. அவரின் மனதில் அமைதி ஏற்பட வேண்டுகிறேன்.

 1. அம்மையாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

 1. அம்மையாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

 1. ஹேமா said...:

  சில கட்டாய விதிகளுக்குள் மரணமும் ஒன்று.என் அஞ்சலிகளும் !

 1. தவிர்க்க முடியாத ஒன்று மரணம்....

  அவரது ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகளும்...

 1. பிரார்த்திக்கிறேன்

 1. கோவை ஞானிக்கு ஆறுதல்களும், அவர் துணைவியாரின் மறைவுக்கு ப்ரார்த்தனைகளும்.

 1. PUTHIYATHENRAL said...:

  மரணம் ஒவ்வொரு மனிதனும் எதிர் நோக்கி இருக்கவேண்டிய உண்மை. மனைவி ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கம். மனிவியின் இழப்பு என்பது பேரிழப்பு. கோவை ஞானிக்கு நமது நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.

 1. இறப்பு என்பது உண்மையானது,கனவுகள் வாங்கும் பைதான் உடம்பு,,,,எல்லாம் வாஸ்தவமே.அதற்காய் வாழாதிருப்பது எப்படிசரியாக முடியும்?கோவை ஞானி அவர்களுக்கு என ஆழ்ந்த அனுதபங்கள்.

 1. கோவையிலிருந்துகொண்டே ஞானி அய்யா அவர்களுக்கு ஆறுதல் கூற செல்லவும் இயலாமல் நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கிறதே என்கிற என் மனக்குறை மேலும் அதிகரிக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்களும் ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகளும் சேர்வதாக.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar