பையில் போட வேண்டியதை மனசிலும்
மனசில் போட வேண்டியதை பையிலும்
போடுவது தான்
உங்க பிரச்னையே சுவாமி
பத்திரமாக இருக்க பையில் போடுங்கள்
சித்திரமாக ரசிக்க மனசில் வையுங்கள்
அன்பு காதல் பாசம் பரிவு
இதையெல்லாம்
பையில் வைத்திருக்காதீர் ஓய்!
இதெல்லாம் மனசில் வைக்க வேண்டிய பண்டங்கள்
பணம் புகழ் பசி காமம்
எல்லாவற்றையும் தூக்கி
பையில் போடுங்காணும்!
பையை சீக்கிரம் காலி செய்யச்செய்ய
மனசு நிரம்பிக் கொண்டே இருக்கும்.
பையையே எறியும் பக்குவம் வந்தால்
மனசு நிறைந்து மானுடம் தழைக்கும்.
- தஞ்சாவூர் கவிராயர் .
கவிராயரின் கவிதைகள் அமுத ரசம் நிரம்பியவை என்பதை நாமறிவோம் .
நாளை தனது இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர இருக்கும் அவருக்கு நமது பிரார்த்தனைகளை காணிக்கை ஆக்குவோம் வாருங்கள் தோழர்களே...
நம் விசாரிப்புக்களை அவர் உடனிருக்கும் நம் சுந்தர்ஜி அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம் . கவிராயர் பூரண நலம் பெற்றவுடன் அவரிடம் நம் மகிழ்வான விசாரிப்புக்களை பகிரலாம்.
பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாதவர்களின் நல்லெண்ணமும் நேர்மறை சிந்தனைகளும் கூட அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லவா...!!
நாளையும் நாளை மறுநாளும் (29.8.2012, 30.8.2012) நம் சிந்தனையில் அவரது மேன்மைகள் நிறைந்திருக்கட்டும்!
மனசில் போட வேண்டியதை பையிலும்
போடுவது தான்
உங்க பிரச்னையே சுவாமி
பத்திரமாக இருக்க பையில் போடுங்கள்
சித்திரமாக ரசிக்க மனசில் வையுங்கள்
அன்பு காதல் பாசம் பரிவு
இதையெல்லாம்
பையில் வைத்திருக்காதீர் ஓய்!
இதெல்லாம் மனசில் வைக்க வேண்டிய பண்டங்கள்
பணம் புகழ் பசி காமம்
எல்லாவற்றையும் தூக்கி
பையில் போடுங்காணும்!
பையை சீக்கிரம் காலி செய்யச்செய்ய
மனசு நிரம்பிக் கொண்டே இருக்கும்.
பையையே எறியும் பக்குவம் வந்தால்
மனசு நிறைந்து மானுடம் தழைக்கும்.
- தஞ்சாவூர் கவிராயர் .
கவிராயரின் கவிதைகள் அமுத ரசம் நிரம்பியவை என்பதை நாமறிவோம் .
நாளை தனது இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர இருக்கும் அவருக்கு நமது பிரார்த்தனைகளை காணிக்கை ஆக்குவோம் வாருங்கள் தோழர்களே...
நம் விசாரிப்புக்களை அவர் உடனிருக்கும் நம் சுந்தர்ஜி அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம் . கவிராயர் பூரண நலம் பெற்றவுடன் அவரிடம் நம் மகிழ்வான விசாரிப்புக்களை பகிரலாம்.
பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாதவர்களின் நல்லெண்ணமும் நேர்மறை சிந்தனைகளும் கூட அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லவா...!!
நாளையும் நாளை மறுநாளும் (29.8.2012, 30.8.2012) நம் சிந்தனையில் அவரது மேன்மைகள் நிறைந்திருக்கட்டும்!
விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteஅழகிய கவிதைப் பகிர்வு.
ReplyDelete//நாளை தனது இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர இருக்கும் அவருக்கு நமது பிரார்த்தனைகளை காணிக்கை ஆக்குவோம் வாருங்கள் தோழர்களே... //
அழகான வேண்டுகோள். நிச்சயமாகச் செய்வோம்.
கண்டிப்பாக நண்பரே.எல்லா வல்ல இறைவனிடம் கவிராயர் விரைவில் குணமடைய வேண்டி பிராத்தனை செய்வேன்.
ReplyDeleteகவிராயர் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்!
ReplyDeleteஅவர் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்......
ReplyDelete‘ மனிதர்கள் நேசிக்கவும், பொருட்கள் உபயோகிக்கவும் படைக்கப் பட்டவை. ஆனால் மனிதர்கள் பொருட்களை நேசிக்கி
றார்கள். மனிதர்களை உபயோகிக்கிறார்கள்..’ என்ற ஜக்கி வாசுதேவின் வரிகளை நினைவூட்டுகிறது கவிராயரின் கவிதை....
கவிராயருக்காக என் பிரார்த்தனைகளும்!
ReplyDeleteவிரைவில் அவர் பூரண குணமடைந்து, வாழும் கவி படைக்க வாழ்த்துக்கள்.
விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனைகள்
ReplyDeleteஅவர் குணமடைய எனது பிரார்த்தனைகளும்.....
ReplyDeleteமனசு நிறைந்து மானுடம் தழைக்கும்..
ReplyDeleteபாடிய கவிராயர் பூரண நலத்துடன் வர பிரார்த்தனைகள்
இப்பதிவிட்ட கையோடு ஒரு மரண அறிவிப்பு... நெருங்கிய உறவில். சென்று மீண்ட இம்மாலைப் பொழுதில் பரமக்குடி சினேகிதியை தொடர்பு கொண்டு கவிராயர் உடல் நலமாக சாத்தியப்படுமாறு நன்முறையில் அறுவை சிகிச்சை நடந்தேறியதை கேட்டதும் களைப்பும் அயர்வும் மாறி புத்துணர்வுடன் விட்டுச் சென்ற வீட்டு வேலைகளை பார்க்கப் போய்விட்டேன்.
ReplyDeleteஓய்வு கிடைத்தவுடன் வலைப்பூக்களை நுகர்ந்தபோது நறுமணமாய் சுந்தர்ஜி வலைப்பூவும் ஹரிணி வலைப்பூவும் மனதை நிறைத்தது.
அப்பாடா. நாம் மகிழும்படியாய் கவிராயர் பத்திரமாக இருக்கிறார்!
அக்கறையுடன் பிரார்த்தித்த தோழமைகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்!
”இப்பதிவிட்ட கையோடு, நெருங்கிய உறவில் ஒரு மரண அறிவிப்பு...”
ReplyDeleteஎன்று இருந்திருக்கலாம் நிலா அந்த வரி...
சட்டென்று ஒரு பதட்டத்தை தந்து விட்டது அந்த வரி...
தொடர் வாசிப்பில் நெஞ்சில் நிம்மதி நிறைந்தது..
(அட , எனக்கு கூட நிலா மாதிரி எழுத வருதே!)
நன்றி நிலா....
With my sincere parayers also!
ReplyDeleteஉங்கள் பிராத்தனையும், கவிராயரை கைபிடித்து அழைத்து வந்துவிட்டது சிறு கட்டெறும்புகள், பறவைகள் கூடும் அவரின் குடிலுக்கு.
ReplyDeleteஅன்பின் தோழி,
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு கொடுத்த விருதினை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி எனக்கு.
http://manjusampath.blogspot.com/2012/09/2.html