நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

அரிதாரமற்ற அவதாரம்

Sunday, 26 August 2012

தன் குழந்தை வயிறு நிறைக்க
ஒரு தாய்க்கு
விளையாட்டு பொம்மையாய்...

மோகித்தவளின் முகம் பொருத்தி
சிலாகிக்கும் காதல் பித்தனை
தெளிவிக்கும் மருந்தாய்...

மின் தடை இரவிலும்
தெருப்பிள்ளைகளின்
விளையாட்டுத் தடையறாமல்
இயற்கையின் வெளிச்சமாய்...

இரவோடிரவாய்
உறவறுத்து வெளியேறும்
அபலையின் வழித்துணையாய்...

வாழ்வின் மூர்க்கத்தில்
கொதிப்பேறிக் கிடப்பவனைத்
தணிவிக்கும் தண்ணொளியாய்...

மினுக்கும் உடுக்களிடையே
கம்பீரமாய் அரசோச்சி
ஜொலிக்கும் பெரு நட்சத்திரமாய்...

நிலவுக்கும் உண்டு...
அரிதாரம் தேவையற்ற
பல அவதாரங்கள்...!

நன்றி: நீலநிலா.. செப். 2012

12 கருத்துரைகள்:

 1. நிலவின் அவதாரங்கள் மிக அழகு.. இக்கவிதை போலவே !

 1. ஆஹா! அந்த நிலாவைப்போன்றே வெகு அழகான வரிகளுடன் கூடிய அற்புதமான கவிதை அவதாரம் எடுத்துள்ளது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். அன்புடன் vgk

 1. நீல நிலாவில் இந்த நிலா உலா வந்துதுள்ளது மிகவும் பொருத்தமே.
  மனமார்ந்த வாழ்த்துகள்.

 1. நிலவின் அவதாரங்கள்... அழகிய கற்பனை நிலாமகள்... வாழ்த்துகள்.

 1. ஹேமா said...:

  கவிதை வாசித்தபின் யோசிக்கிறேன் நிலா.உண்மைதான் எத்தனை அவதாரங்கள்தான் அந்த நிலவுக்கு.சூப்பர் !

 1. வாழ்வின் மூர்க்கம் - அருமையான சொல்லாட்சி.

 1. இத்தனை பரிமாணங்களை கண்முன் நிறுத்தும் இந்தக்கவிதையும்
  அந்த நிலாவிற்கு நிகர்தான், அபாரம் தோழி!

 1. அருமையான சிந்தனை வரிகள்...

  நன்றி... வாழ்த்துக்கள்...

 1. Rasan said...:

  // நிலவுக்கும் உண்டு...
  அரிதாரம் தேவையற்ற
  பல அவதாரங்கள்...! //

  சிறப்பான வரிகள்.நன்றி. தொடருங்கள்

 1. நிலவுக்கு தேவையற்ற அரிதாரம்- வசீகரமான கற்பனை நிலா.
  பூக்கவிதை!

 1. அம்மா பற்றிய கவிதையோ!! ..... அழகு
  ( நிலா மகள் அல்லவா ?

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar