“உலக இலக்கியம் படித்தவர்களுக்குச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை” என்று தன் கவிதைநூலின் முன்னுரையில் பிரகடனம் செய்யும் துணிவோடு திரு.செளரிராஜன் அவர்கள் வழுவழுக்கும் ஆர்ட் பேப்பரில் நம் கைகளில் தன் கவிதைநூலை தவழச் செய்திருக்கிறார். அவரது மகன் செள.ராஜேஷ் அவர்கள் முகமன் கூறி வரவேற்கிறார் முதல் பக்கத்தில்! கவிஞரின் 66-வது பிறந்தநாள் வெளியீடாக வரும் இந்நூல் செறிவோடும் அழகோடும் நம்மை நிறைக்கிறது.
ஸ்ரீரங்கம் கோவிந்தராஜ் கவிஞரை நேர்கண்டது நூலின் பின் நான்கு பக்கங்களில் நமக்கு பலவற்றை தெளிவுபடுத்திச் செல்கிறது.
கவிதையென்பது என்ன? எனும் கேள்விக்கு கவிஞர், “என்ன விளக்கினாலும் முழுமை பெறாமலிருக்கும் ஒரு வடிவமே கவிதை” என்கிறார்.
கதையம்சம் கவிதைக்கு விலங்கா? சிறகா? எனும் கேள்விக்கு, “ ஒரு சம்பவம் கவிதைக்கான கருப்பொருளாக அமையும் போது கதைத் தன்மை தோன்றலாம். எதன்மீதும் இது கவிதைக்கானது இல்லை என்று முத்திரை குத்த முடியாது. எனவே கதைத் தன்மை ஒரு கவிதைக்கு விலங்காகாது. இயல்பேயாகும்” என்கிறார் கவிஞர்.
“செளரியின் கவிதைகளில் முதலில் நம்மை வசீகரிப்பது அவற்றின் இருண்மையற்ற எளிமைதான். முதல்வாசிப்பில் அவரது கவிதைகள் லேசாகத் தோன்றினாலும் பிரித்துப் பல பொருள் கூறுமளவுக்கு அவற்றில் பல அடுக்குகள் ஒளிந்துள்ளன. சாதாரண சொற்களைக் கொண்டே அசாதாரண அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறார். அரிதான படிமங்களின் பயன்பாடு, அற்புதமான பதச் சேர்க்கைகள், மற்றும் காட்சிப்படுத்துதல் இவை இணைந்து இவரது கவிதைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.” இது பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியின் தமிழ்த்துறையிலிருக்கும் வ.நாராயண நம்பியின் அணிந்துரை.
நமக்கு முன் தாண்ட முடியாத கோடாக பல நிறைவேறாத ஆசைகள். தாண்டுதலும் தாண்ட முடியாமல் போவதும் வேறு வேறான நம் இடங்களை உணர்த்தத் தான் செய்கின்றன. தாண்டுதல் ஒன்றே தகுதி என்ற தீர்ப்பு மாறுவதேயில்லை.(தாண்ட முடியாத கோடு)
இற்றுவிழும் தருணத்தை யாசித்துக் கொண்டிருக்கும் எல்லா உறவுகளும்... நண்பர்கள் வட்டம் மட்டும் பசுமையோடு... (நாற்காலியில் அமர்ந்தபடி) செயலற்ற வியாதி சூழ்ந்த முதுமையின் கொடுமை மலைக்கச் செய்யும்படி.
“ஆடு சமர்த்து... கடிக்காது; நாய் போக்கிரி... கிட்ட போகக் கூடாது” (ஒரே கேள்வி) ஐந்து வயதுப் பிள்ளைக்கு சரியான விளக்கம் தான்... வளர்ந்தவர்கள் பலரும் சமர்த்து ஆட்டை சாப்பிட வெட்டும் அவலம் நோக்கும் போது அதுவும் போக்கிரியாகவே இருந்திருக்கலாமோ...
குழந்தையில்லாத ரமா வரைந்த குட்டிக் கால்கள் ‘தரையிலிருந்து மனதிற்கும் மனதிலிருந்து தரைக்கும் மாறிமாறி' குதித்தன வாசித்தலிலும்(கிருஷ்ணன் கால்கள்).
‘காலம் ஒவ்வொரு முறையும் / எனக்குத் தெரியாதனவற்றின் பட்டியல் ஒன்றை / என் கையில் திணித்துவிட்டுப் போகிறது' (பாடம்)
‘பெண்' பற்றிய கவிதைச் சித்திரம் வெகு துல்லியம்.
என்னைக் கவர்ந்த இவரது கவிதைகளில் சில:
கவசம்
நம் எல்லோருக்கும்
கவசம் வேண்டும்
நம்மைச் சூழ்ந்துள்ள
மனித வட்டத்தின்
எந்தப் புள்ளியிலிருந்தும்
கல் எறியப்படலாம்
தாய் தந்தை
நண்பன் மனைவி
பிள்ளைகளென
யாரும் வீசலாம்
எதிர்பாரா வண்ணம்
எறியப்படும் கல் கூட
கூரம்பாய் மாறித் தைக்கும்
அந்த அம்பு
தட்டில் விழுந்த உணவைப் பறிக்கும்
மனம் கிழித்து தூக்கமும் விழுங்கும்
ஆம், நம் எல்லோருக்கும் கவசம் வேண்டும்!
------------
முதல் கவிஞன்
விளிம்புகள் இல்லாத பிரபஞ்சத்தில்
மண் உருண்டைகளின் அந்தரத்து வாசம்
விரும்பாவிட்டாலும் மண்ணில்
காலூன்ற வைக்கும் நிர்பந்தம்
நேரத்தில்
காற்றை காற்றோடு கலக்கும் விடுதலை
விதைக்குள் மரம் திணித்த மாயாஜாலம்
மானையும் புலியையும் படைத்த அழகான முரண்பாடு
மொழியால்
நகலெடுக்க முடியாத நிதர்சனம்
இவற்றிற்கெல்லாம் காரணமானவனே
முதல் கவிஞன்!
-----------------
தீயே கேள்!
நீ கொடுமைக்காரன் கைப்புகுந்தால்
அவன் பிறர் முதுகு தடவும் போது
மரணம் கொள்
தளிர் அழித்து உண்ணும் பூச்சிகளாய்ப்
பெண்ணை நெருங்கும் காமுகர்கள் முன்
விஸ்வரூபம் கொள்
கணவன் நெஞ்சில் நீ ஜனிக்கையில்
தென்றலாய் மாறும் ரஸவாத வித்தை பயில்
ஏழைக் குழந்தைகள் வயிற்றில் பசியாகும்போது
சாந்தம் கொள்
நியாயவான்கள் நெஞ்சில்
நிலைகொள்!
----------------------
இவரது காதல் ரசத்தில் சில துளிகள்...
...ஆளில்லாக் கிரகம் ஒன்றைக் கொக்கி போட்டு
நிலாவில் தொங்கவிட்டு
நாம் ஊஞ்சல் ஆடிப் பார்க்கலாமா?...
...கண்ணாடிக் குழாய்களில்
ஆரஞ்சு சாறு நிரப்பப்பட்டது போல்
அழகான விரல்கள்...
...பனித்த கண்களில் கரையும் கண்மைபோல்
காலம் மட்டும் கரையும் நம் நினைவுகள் அல்ல...
... நம் ஊமை உறவு ஸ்தாபித்த
மாளிகையின் எல்லா சுவர்களிலும்
நம் பெயர்களை யார் எழுதிப் போனது?...
-------------------------
‘அந்தரத்தில் ததும்பி நிற்கும் பாற்குடம்
ஒரு விரலின் மெல்லிய தொடுதலில்
அமுதத்தை வர்ஷிக்கும்
உரிய நேரத்தில்!' (உரிய நேரம்)
அதனதன் நேரத்தில் எதுவும் நடக்கச் செய்யும் பிரபஞ்சப் பிடியிலல்லவா நாமெல்லாம் பிணைந்திருக்கிறோம் ...!
‘விழுந்த கல்லால் பெருகி விரியும் நீர் வளையங்களாய்' இத்தொகுப்பின் கவிதைகள் நம் சிந்தையை விரிக்கத் தக்கனவாய் இருக்கின்றன

அழகாய் நச்சென்று தொகுப்பு பற்றிய விமர்சனம்.
ReplyDeleteஸ்ரீரங்கம் செளரி ராஜன் கவிதைகள் என்றாலே அருந்த அருந்த திகட்டாத தேன் அன்றோ !!
ReplyDeleteஅருமையான பகிர்வு.... கவிதைத் தொகுப்பின் ரசம் நீங்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளில்.....
ReplyDeleteசிறப்பான பகிர்வு...
ReplyDeleteபதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
வாழ்த்துக்கள்...
இதுவரை அவருடைய படைப்புகளைப்
ReplyDeleteபடித்ததில்லை.தங்கள் அறிமுகம்
அவசியம் படிக்கவேண்டும் என்கிற
ஆவலைத் தூண்டிப்போகிறது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ஸ்ரீரங்கம் செளரிராஜன் அனேகமாய் எல்லா சிறு பத்திரிக்கைகளிலும் வாசகர் கடிதம் பகுதிகளில் தொடர்ந்த தனது பங்களிப்பை அளித்து வருபவர் என்னும் பெருமைக்குரியவர். அவரின் விமர்சனங்களும், படைப்புக்கள் குறித்த கருத்துக்களும் தொடர்புள்ள படைப்பாளனை நெறிப்படுத்தும் ஆற்றல் மிக்கவை என்பதை கவனித்துமிருக்கிறேன். அவரின் தொகுப்பை பற்றிய உங்களின் இந்த பதிவு, படைக்கிற ஸ்ரீரங்கம் செளரிராஜன்-ஐயும் அறியத்தூண்டுகிறது. பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள். அவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete