திருவிழாக் கூச்சலில்
தனித்து இனிக்கிறது
ஊதல்காரனின் இசை
காலை நேரத்தில்
உற்சாகமாய் தொடர்ந்தொலித்த
அவனது ஊதல்
வியாபார மந்தமாலோ
வயிற்றைப் புரட்டும் பசியாலோ
தட்டுத் தடுமாறுகிறது
மதியப் பொழுதில்
இசையால் மட்டுமே
உயிர்த்திருந்தான்
அவன்
கூட்டம் நெரிந்த
மாலைப் பொழுதில்
இருள் விலக்க
எரியும் தீப்பந்தமாய்
உயர்ந்தோங்கிய
அவனது குழலொலி
எட்டும் செவிகளைப்
பிரகாசமாக்குகிறது
பெற்றோரை தம்
பிடிவாதத்தால் மசிய வைக்கும்
குழந்தைகள்
சூழ்ந்தனர் அவனை
இன்றிரவு உறங்கலாம்
அவனும்
நிறைந்த வயிறுடன்.
(கல்கியில் பிரசுரம் ஆனது )
அருமையான கவிதை. வயிற்றின் இசை எத்தனை பேரின் காதுகளை அடைகிறது? அடைந்தாலும் கவிதை தருகிறது? சபாஷ் நிலாமகள்.கல்கியிலும் வாசித்தேன்.
ReplyDeleteமிக்க நன்றி ஜி! அவன் வயிற்றின் இசை மது மூலமாக என் செவியடைந்து கவிதையாக உருப்பெற்றது. வைகுண்ட ஏகாதசிக்காக பலரும் பசித்திருக்க, உணவற்ற அவலத்தில் தனித்துத் தெரிந்தது அவனின் குழலொலியில் ஊடாடியிருந்த பசிப்பிணி.
ReplyDeleteஅருமையான கவிதை.உணர்ந்து ரசிக்க மனம் சிலிர்க்கிறது நிலா !
ReplyDelete//பெற்றோரை தம்
ReplyDeleteபிடிவாதத்தால் மசிய வைக்கும்
குழந்தைகள்
சூழ்ந்தனர் அவனை
இன்றிரவு உறங்கலாம்
அவனும்
நிறைந்த வயிறுடன்.//
அருமையான வரிகள்.
கல்கியில் பிரசுரமானதற்கு வாழ்த்துகள்.
@ ஹேமா...
ReplyDeleteஉடனடி வருகையும் உற்சாகமூட்டலும் எனக்குள்ளும் சிலிர்க்கிறது தோழி...
@ ஆதி...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி...
எத்தனை குழந்தைகள் வாங்கிய குழலை விற்பனையாளனைப் போல வாசிக்கப் பழகுகின்றனர்...? மிஞ்சி மூன்று நாட்களில் மூலையில் கிடக்கும் அது. திருவிழாக் கொண்டாட்டத்துக்காகவும், அப்படியானவர்களின் பிழைப்புக்காகவும் தானே நம் குழந்தைகளின் பிடிவாதத்துக்கு மனமிரங்குவது...!
நெஞ்சம் இனிக்கும் ஒரு கவிதை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteGood one Nilamagal.
ReplyDeleteCorrect
/கூச்ச்சலில்/ கூச்சலில்
கல்கியில் வாசித்தபோதே நெகிழ்ந்தேன்.
ReplyDeleteஇருள் விலக்க
எரியும் தீப்பந்தமாய்
உயர்ந்தோங்கிய
அவனது குழலொலி
இந்த வரிக்கு பிரத்தியேகமாய் ஒரு சபாஷ்.
@ அரசன்...
ReplyDeleteஇனிய நன்றி தோழர்!
@ செல்வராஜ் ஜெகதீசன்...
மகிழ்வும் நன்றியும் தோழர்...
திருத்திக் கொண்டேன். நன்றி!
@ ரிஷபன் சார்...
நெகிழ்வான நன்றி சார். சற்று முன் தான் கல்கி பார்த்தேன். துண்டுபட்ட பத்து வரிகள் புகார் சொல்ல வழியின்றி தவித்து நின்றன தீப்பந்தத்தின் அடியிருட்டில்.
//இசையால் மட்டுமே
ReplyDeleteஉயிர்த்திருந்தான்
அவன் //
ரசித்த வரிகள் ! பாராட்டுக்கள்!
மிக நல்ல வரிகள் சகோ.... நமக்கு வாசிக்கத் தெரிகிறதோ இல்லையோ, வாங்கத் தோன்றும் பல சமயம்.....
ReplyDeleteகல்கியில் பிரசுரம்... - வாழ்த்துகள் சகோ.
இப்படியானவர்களின் வயிறு நிறையவாவது வருடந்தோறும் திருவிழாக்கள் வரவேண்டும். மனத்தை நெகிழ்த்திய வரிகள். கல்கியில் பிரசுரமானதற்கு சிறப்புப் பாராட்டுகள் நிலாமகள்.
ReplyDeleteநெகிழ வைத்த கவிதை மேடம், அன்பு வாழ்த்துகள் உங்களுக்கு!
ReplyDeleteகல்கியில் பிரசுரமா.....சூப்பர்ங்க....
ReplyDeleteகல்கியில் முன்னே வாசித்துவிட்டேன். மனசுக்குள் இழைகிறது கவிதை அவனின் வாழ்வியல் இசையை மௌனமாக. வர்ழ்த்துக்கள் நிலாமகள்.
ReplyDeleteகண்களை ஈரமாக்கிய வர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நிலாமகள்.
ஊதல்காரனை ஒரு படிமமாகக் கொள்ளுகையில்
ReplyDeleteகவிதையின் வீச்சுபிரமிக்கவைக்கிறது
எளிமையான வார்த்தைகளில்
மிகக் கனமான விஷய்ம
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
நல்லா இருக்குங்க..
ReplyDelete"இன்றிரவு உறங்கலாம் நிறைந்த வயிறுடன் அவன்"வாழ்வின் அருகில் போய் பார்க்கும் யதார்த்த வரிகள்.வாழ்த்துக்கள்.
ReplyDelete@ கே. பி. ஜனா...
ReplyDeleteமிக்க நன்றி!
@ வெங்கட் நாகராஜ்...
வருகையும் வாழ்த்தும் உற்சாகமூட்டுகின்றன சகோ...
@ கீதா...
நெகிழ்வான நன்றி தோழி...
@ ப. தியாகு...
மகிழ்வுடன் நன்றி தோழர்.
@ ஆர். ஆர். ஆர். ...
சந்தோஷம்!
@ ஹரணி...
புத்துணர்வூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.
@சந்தானகிருஷ்ணன்...
நீண்ட இடைவெளிக்குப் பின்னான தங்கள் வருகையும் வாழ்த்தும் உவகையளிக்கிறது... நன்றி!
@ இரமணி சார்...
ஆழ்ந்த தங்கள் கருத்துரை படைப்பூக்கமாய் இருக்கிறது... நன்றி சார்.
@ முத்துலட்சுமி...
தங்கள் வருகையை சாத்தியமாக்கிய கவிதை பேரழகாகிறது தோழி...
@ விமலன்...
மகிழ்வும் நன்றியும் ஐயா.
பகலில்
ReplyDeleteநாபிக் கமலத்திலிருந்து நாவிற்கு வந்து
ஊதலில் உயிர்க்கும் இசையின் அலையும்,
பசியின் மையத்தில் தீட்டப்படுகிறதென்பதை
சிறுவரின் பிடிவாதத்தால் வரும் சுபத்தேடு முடிகிறது
இரவில்.
அன்பு நிலாமகள், தங்களுக்கு நேரமிருக்கும்போது கீழ்க்காணும் என் பதிவைப் பார்வையிட அன்புடன் அழைக்கிறேன். நன்றி.
ReplyDeletehttp://geethamanjari.blogspot.com.au/2012/02/blog-post_08.html
செவிக்குணவு'- என் சிந்தனைக்கு உணவாகியது.
ReplyDelete