உதிர்க்கும் இலைகளைத் துளிர்த்துச் சமன்செய்து விடுகிறது மரம்!கழியும் நாட்களை வாழ்வின் கணக்கில் கூட்டவியலா பெரும் திகைப்பில் நாம்...! Share on:
படித்து முடிக்கையில் திடுக்கிடவைத்தது அட, ஆமாம் என்னும் ஒப்புதலான தலையசைவு.
ReplyDeleteதிகைப்பை உணர்த்தும் வரிகளில் இழையோடும் நிதர்சனம் மிக அருமை. பாராட்டுகள் நிலாமகள்.
அருமையான கவிதை.... நிச்சயம் நாம் உணர வேண்டிய விஷயம் தான். இருக்கும் நாட்களில் மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் வாழ்வது தான் நல்லது....
ReplyDeleteஉதிர்ந்த இலை உதிர்ந்தது தான். கழிந்த நாட்கள் கழிந்தவை தானே தோழி!
ReplyDeleteஇலைகளை உதிர்ந்து முதிர்கிறது மரம்.நாட்களை உதிர்த்து முதிர்கிறது மனம்!
(நீங்கள் சொல்ல வந்ததை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ?)
கவிதை அருமை!
ReplyDeleteசுருக்கமாக இருந்தாலும் நறுக்கென கருத்தினைச் சொல்லும் கவிதை... ரசித்தேன் சகோ.....
ReplyDeleteஉண்மைதான் நிலா.இயற்கைக்கும் மனிதனுக்கும் இதுதான் வித்தியாசம் !
ReplyDeleteஅட ஆமாம் . என்னதான் இயற்கையை மனிதன் தனக்கு சாதகமாக வளைத்தாலும் ,இயற்கையின் இயல்புக்கு ஈடாக முடியாது தான். நச்சென்று கவிதை நன்றாக இருக்கிறது,
ReplyDeleteஉதிர்த்த நாட்களின் எச்சமே
ReplyDeleteஉதிரத் தொடர்பின் மிச்சமாய்
மரமும் மனிதனும்
அறிவின் அளவில் வேறாயினும்
உறவு வேர்களில் ஒன்றே தானா?
அசத்தல்...அசத்தல்..
ReplyDeleteஅனுபவத்தின் எளிமை. அழகு. பாராட்டுக்கள் மனம் நிறைவாய் நிலாமகள்.
அதனால்தான் வைரமுத்து மனிதனை மரம் என்று சொல்லாதே என்றார். மரம் மனிதனைவிட உயர்ந்ததுதான். வாழ்த்துக்கள்.
நிதர்சனமான உண்மை, ஆனால் அதற்க்கு பதில்தான் 'எழுதிவிடுகிறோமே' போதாதா சகோதரி
ReplyDeleteஅதுதான் வாரிசுகளை உருவாக்குகிறோமே, அப்புறம் என்ன:-)
ReplyDelete