விட்டிலாக எரிதல்
வேறென்ன இருக்கிறது
காதலில்?
^^^^^^^^^^^^^^^
*நான் தவளை
என் கிணறு நீ
இது என் பெருமை.
^^^^^^^^^^^^^^^^
*நீ காற்று நான் சுடர்
என்னை
எரிப்பதும் நீதான்
அணைப்பதும் நீதான்.
^^^^^^^^^^^^^^^^^
*நான் தோணி
நீ கரையா? புயலா?
தெரியவில்லை.
^^^^^^^^^^^^^^^^^^
*சுடரின் ஒளியாய்
சுவரில் ஆடும்
நிழல்கள் நாம்.
^^^^^^^^^^^^^^^^^^
*உன் சிரிப்பில் சுரந்த
கண்ணீர் போல்
பூவில் பனித்துளி.
^^^^^^^^^^^^^^^^^
*நான் வெறும் ஓட்டை மூங்கில்
காற்றும் நீ
வாயும் நீ
விரலும் நீ.
^^^^^^^^^^^^^^^^^^
*காதல் தோல்விக்கு
ஏன் கலங்குகிறாய்?
அது வாழ்க்கையின்
வெற்றிகளை விட
உயர்ந்தது.
^^^^^^^^^^^^^^^^^^^^
*விளக்கிடம் விட்டில் சொன்னது
எரிப்பதில் இருக்கிறது
உன் பெருமை
எரிவதில் இருக்கிறது
என் பெருமை.
^^^^^^^^^^^^^^^^^^^^
*உன் நதியில் நானொரு துளி
என் விதியில்
நீயோர் எழுத்து.
^^^^^^^^^^^^^^^^^^^
*இந்தப் பனித் துளிகள்
இரவு யாருக்காகவோ
அழுதிருக்கின்றன
என்னைப் போலவே.
^^^^^^^^^^^^^^^^^^^^
*மேகமாகி
உன்னைப் பிரிவதும்
நதியாகி
உன்னைத் தேடிவருவதும்
எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
*உன் கோபமும் எனக்கு இன்பம்தான்
எனக்குத் தெரியும்
எனக்கு நீ
நெருப்பால் எழுதும் காதம் கடிதமது.
^^^^^^^^^^^^^^^^^^^^^
*தரைக்குத் தண்ணீர் மேல் தாகம்
தண்ணீருக்கு தரைமேல் பசி
உன்னையும் என்னையும் போல்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
*காதலின் நஞ்சைக் குடித்தே
சாகாமலிருப்பவன் நான்!
மரணமே!
என்னை என்ன செய்யமுடியும்
உன்னால்?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^




அருமையான கவிதை.