சிவாலயங்களில் வில்வார்ச்சனை உயரியது. வில்வதளத்தில் ஒரே காம்பில் மூன்று இலைகள், ஐந்து இலைகள், ஏழு இலைகள் கொண்ட மரங்கள் உண்டு. மூன்று வகையும் மருத்துவச் சிறப்பு மிக்கதே.
இரத்த சுத்தி: வில்வத்தின் துளிர் இலைகளை அரைத்து மிளகளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வேளைக்கு இரண்டு மாத்திரைகளை வெந்நீருடன் உட்கொள்ள இரத்தம் சுத்தியாகும். தொடர்ந்து 48 நாட்கள் உட்கொள்ள மேக நோய்கள் குணமாகும்.
சரும நோய்கள்: வில்வ இலைகளைச் சேகரித்து வெயிலில் நன்றாக உலர்த்தி பொடித்து சலித்துக் கொள்ள வேண்டும். இரண்டு தேக்கரண்டி தூளை பசுமோரில் கலந்து ஒரு நாளைக்கு இரு வேளை உட்கொள்ளவும். தொடர்ந்து மூன்று நாட்கள் உட்கொள்ள எல்லாவிதமான சருமப் பிணிகளும் நீங்கும். இரத்தம் சுத்தியாகும்.
இந்த தூளை சோப்புக்குப் பதிலாக அன்றாடம் தேய்த்துக் குளிக்க சருமம் பட்டு போலாகி தோல் நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குளித்து வந்தாலும் தோல் மென்மையும் பளபளப்பும் பெறும்.
காய்ந்த வில்வ மலர்களை சேகரித்து தூளாக்கி சம அளவு சீயக்காய் தூளுடன் கலந்து அன்றாடம் காலை உடலில் தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது. மினுமினுப்பும் கவர்ச்சியும் அதிகரிக்கும்.
ஆஸ்த்மா: அதிகாலையில் ஐந்து வில்வ இலைகளையும் ஏழு மிளகையும்
சேர்த்து வெறும்வயிற்றில் மென்று தின்னவும். தொடர்ந்து நாற்பது நாட்கள் தின்றால் நோய் படிப்படியாகக் குணமாகும்.
மேக எரிச்சல்: வில்வமரத் துளிர்களை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து நூறு மிலி பசுமோரில் கலக்கி ஒரு நாளைக்கு இரு வேளை என பத்து நாட்கள் உட்கொள்ள மேக எரிச்சல் நீங்கும்.
பசி அதிகரிக்க:
கல்லீரல் கோளாறு காரணமாக சில சமயம் பசியே இருக்காது. வில்வ மலர்களை சேகரித்து நிழலில் உலர்த்தி இடித்து தூளாக்கவும். இரு தேக்கரண்டி தூளை நெய்யில் குழைத்து ஒரு நாளைக்கு இரு வேளை உட்கொள்ள பசி மந்தம் அகலும்.
வில்வ மலர்களை பறித்த உடனே பச்சையாக அரைத்து பசும்பாலில் கலந்து சிறிது தேன் சேர்த்து உண்டாலும் பசியுணர்வை தூண்டும்.
உடற்சூடு தணிய: ஒருகைப்பிடியளவு காய்ந்த வில்வ மலர்களைச் சேகரித்து 150 மிலி நீரில் இரவு முழுதும் ஊற வைத்து காலையில் வடிகட்டிக் குடிக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் குடிக்க உடற்சூடு தணியும்; அதிதாகம் அடங்கும்; பசி ஏற்படும்; மலச்சிக்கல் நீங்கும்.
நரம்புத் தளர்ச்சி: காய்ந்த வில்வ மலர்களைத் தூளாக்கி சலித்தெடுத்து இரண்டு தேக்கரண்டி தூளை 150 மிலி பசும்பாலில் விட்டு தேன் கலந்து உட்கொண்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். மூளையின் இயக்கம் சுறுசுறுப்படையும். இரத்த ஓட்டம் சீராகும்.
குடல் வலிமை, மலச்சிக்கல்: காய்ந்த வில்வ மலர்களை புளி சேர்க்காமல் ரசமாக தயாரித்து உணவுடன் சேர்க்க, குடலியக்கம் வலிமை பெறும். குடல் தொடர்புடைய நோய்கள் வராது. மலச்சிக்கல் அகலும்.
உடல் வலிமை: வில்வ மலர்கள் - 500 கிராம், கற்கண்டு அல்லது சர்க்கரை - 250 கிராம், தேன் - 100 கிராம், ஏலம் - 20 கிராம், சுக்கு - 10 கிராம்.
ஏலத்தையும் சுக்கையும் பொடித்துப் போட்டு சர்க்கரை அல்லது கற்கண்டை பாகாக்கவும். பின் காய்ந்த மலர்களை சேர்த்து நன்கு கிளறவும். மலர்கள் நன்கு வெந்ததும், கீழே இறக்கி, தேனை சேர்த்து நன்கு கிளறி ஆறவிட்டு பத்திரப்படுத்தவும்.
ஒரு நாளைக்கு இரு வேளை நெல்லிக்காயளவு உண்டு பசும்பால் அருந்த வேண்டும். உடல் வலிமைக்கும் நரம்பு மண்டல இயக்கம் சுறுசுறுப்படையவும், நல்ல ஜீரண சக்திக்கும் உகந்தது. குழந்தைகளுக்கும் அளவு குறைத்து தரலாம்.
வயிற்றுவலி: வில்வப்பிஞ்சின் சதைப்பகுதியை சேகரித்து நன்கு அரைக்கவும். அதில் நெல்லிக்காயளவு எடுத்து வெந்நீரில் கலந்து வடிகட்டி அருந்த அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி குணமாகும்.
குன்ம நோய்: வில்வ பிஞ்சுகளின் சதைப் பகுதிகளை சேகரித்து நிழலில் உலர்த்தி, தூளாக்கிக் கொள்ளவும்.தொடர்ந்து மூன்று நாட்கள் அத் தூளில் தேக்கரண்டியெடுத்து பசு மோர் கலந்து அருந்தவும். எட்டுவித குன்ம நோய்களும் அகலும்.
குடல்புண், இரைப்பைப் புண்: வில்வப் பிஞ்சின் சதைப் பகுதியை சேகரித்து காயவைத்து இடித்து தூளாக்கி, ஐநூறு கிராம் எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு, இரண்டு லிட்டர் நீர் விட்டு அடுப்பிலேற்றி கொதிக்க விடவும். நீர், கால் லிட்டராக சுண்டக் காய்ந்ததும், ஆறவைத்து சக்கைகளை அகற்றி விடவும். கஷாயத்தை வடிகட்டி, 250 கிராம் சர்க்கரை கலந்து கம்பிப் பதமாக காய்ச்சி கண்ணாடி பாட்டிலில் பத்திரப் படுத்தவும். இரு தேக்கரண்டி சர்பத் எடுத்து வெந்நீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தவும். தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தி வர, இரைப்பைப் புண், வயிற்றுப் புண், குன்ம வயிற்று வலி ஆகியன குணமாகும்.
கண் நோய்கள்: மரத்திலேயே பழுத்த வில்வப் பழங்களை எடுத்து ஓடுடைத்து விதைகள் நரம்புகளை அகற்றவும். சதைப் பகுதியில் எடைக்குச் சமமான நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்க. எலுமிச்சையளவு எடுத்து ஒரு நாளைக்கு இரு வேளை உட்கொள்க. மூன்று நாட்கள் உட்கொள்ள சிறந்த குணம் தெரியும். பத்து நாட்கள் அருந்த முழுமையான குணம் தெரியும். இம்மருந்தை ஒவ்வொரு வேளையும் புதியதாக தயாரித்தே உண்ண வேண்டும்.
இன்னுமிருக்கிறது...

மிகவும் பயனுள்ள அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஅவசியமான பதிவு.
ReplyDeleteநான் சிறுவயதில் வில்வக்காயைத் தலையில் தேய்த்துக் குளித்திருக்கிறேன். இன்றைய ஷாம்பூக்கள் பிச்சையெடுக்க வேண்டும். சூடு தணிந்து தலைமுடி பட்டுப் போல இருக்கும். நல்ல தூக்கம் வரும்.
நீண்ட நாட்களுக்குப் பின் மரங்களின் ம(க)ருத்துவம் கண்டு மகிழ்ச்சி. நல்லதொரு பகிர்வு.
ReplyDeleteஇங்கு வில்வ ஜூஸ் குடிப்பார்கள்.
மரங்களின் மகத்துவம்.... அதுவும் வில்வம் பற்றிய பகிர்வு.... நன்றாக இருக்கிறது சகோ.... தொடருங்கள்...
ReplyDeleteவில்வத்தைப்பற்றியும் அதன் பயன்களைப்பற்றியும் தெரிந்து கொள்லள நல்லதொரு உபயோகமான பதிவு!
ReplyDeleteஊரில் இருந்தபோது வில்வங்காய் கண்ட ஞாபகம்.விளாங்காய்போலத்தானே நிலா !
ReplyDeleteவில்வ மரத்தால் இத்தனை நன்மைகளா? வியப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.
ReplyDeleteவில்வம் மட்டுமா?அரிய மூலிகைகளும்,நம் கண்முண்னே காணக்கிடைக்கின்ற எத்தனையோ வகைகளையும் முறைப்படி பயன்படுத்தினாலே மனிதவாழ்வு வளப்படும்.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteமரங்களின் மக(ரு)த்துவம் - வில்வம் (பகுதி - 1)
ReplyDeleteபறத்தல்- பறத்தல் நிமித்தம்
வில்வம் - ஒரு மாமருந்து. நான் நலம் பெற்றது வில்வத்தினாலும். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி:
பறத்தல்- பறத்தல் நிமித்தம்