நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

'தானே' தனக்குள்...

Sunday, 8 January 2012
எங்களுக்கு புயலுடன் தொடங்கிய புத்தாண்டு இது. 'தானே' புயலில் இருந்து மீண்டு கொண்டிருக்கிறோம் ஒருவாறாய் .

'நாங்களும்' ஆண்டிறுதி முதல், ஆண்டு தொடக்கம் வரை
( 30 . 12 . 2011 - 5 . 1 . 2012 )  ஆறேழு நாட்கள் மின்தடையை அனுபவித்து வாழ்ந்தோம்.(சந்தோஷப் படுங்கள் மக்களே... தினசரி மின்தடை அனுபவித்த உங்கள் வேதனைக்கு மருந்தாய் இருக்கட்டும் இச்செய்தி.)

மனிதர்களை விடுத்து மரங்களைத்  தாக்கி அழித்தொழித்தது புயல்.

கடந்த ஒரு வாரமாய் கலவர பூமியாய் காட்சியளித்தது  எங்கள் ஊரின் தெருக்களும் தோட்டங்களும்.

தாறுமாறாய் வீழ்ந்து கிடக்கும் மரங்கள் ஈழத்து தமிழ் மனிதர்களாய் தோற்ற மயக்கம் தந்தன  எனக்கு...

டிசம்பர் 30 , 2011 அதிகாலை தொடங்கிய 'தானே' புயலின் சேதாரங்களில் இருந்து நெய்வேலி மீண்டெழ, கட்டமைக்கப் பட்ட நகரான இவ்வூரின் நகர நிர்வாகம் சிறப்பான செயல்பாடினை செய்து வருகிறது .

புயல் பற்றிய அனுபவங்கள் அடுத்த பதிவில்...


7 கருத்துரைகள்:

 1. தாறுமாறாய் வீழ்ந்து கிடக்கும் மரங்கள் ஈழத்து தமிழ் மனிதர்களாய் தோற்ற மயக்கம் தந்தன எனக்கு...

  கனமான பகிர்வு.. இயல்பு நிலை திரும்ப பிரார்த்தனைகள்..

 1. என்னவாயிற்று தோழி? அறிய ஆவல். விரைவில் வருக.

 1. நம் நெய்வேலி -இன் அழிவுகள் சில காணொளிகள் மூலம் கண்டேன்... உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் பார்க்க முடியவில்லை அவ்வளவு வருத்தம்.... எத்தனை எத்தனை மரங்கள் வீழ்ந்துவிட்டன.... :( இன்னும் பழையபடி பசுமையாக மாற இன்னும் நிறைய வருடங்கள் ஆகும்....

 1. கீதா said...:

  நெருங்கிய உறவினர்கள் பாண்டிச்சேரியில் என்பதால் நிலைமையின் தீவிரம் புரிந்தது. தொலைபேசி, கைபேசி, கணினி எதுவும் வேலை செய்யாததால் அங்கு அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடியாமல் தவித்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பிறகு மின்சாரம் வந்தபிறகு ஒருவழியாய் அவர்களைத் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தோம். எங்கள் உறவினர் ஒருவர் நெய்வேலியில் இருப்பதால் அங்கு உண்டான சேதம் பற்றியும் அறிய முடிந்தது. வருடத் துவக்கமே இத்தனைப் பேரழிவுடனும் பெருந்துயருடனும் ஆரம்பித்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. நிகழ்வின் வேதனையைப் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் நினைவின் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறோம். சொல்லுங்க நிலாமகள்.

 1. ஹேமா said...:

  தானே யின் கலவரம் எங்களையும் நினைக்க வைக்குதா நிலா.சுகமா இருக்கீங்கதானே இப்ப.சந்தோஷம்.மீண்டுவிடலாம் தோழி.தைரியமாய் இருங்கள் !

 1. கடலூர், பாண்டிச்சேரியில் ஏற்பட்ட பாதிப்புக்களைத்தான் அதிகம் இங்கு தொலைக்காட்சியில் பார்த்தோம். நெய்வேலியிலும் அதற்கு சமமான பாதிப்பு என்ற‌றிந்ததும் வருத்தமாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏதும் பாதிப்பில்லையே?

 1. கடந்த ஒரு வாரமாய் கலவர பூமியாய் காட்சியளித்தது எங்கள் ஊரின் தெருக்களும் தோட்டங்களும்.

  அடடா.. அழகு பூமி கலவர பூமியாகி விட்டதா..
  விரைவில் அதன் பழைய நிலைக்குத் திரும்பட்டும்.. இயற்கை உதவட்டும்

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar