24 கருத்துரைகள்
  1. மிக மிக அருமை.கருத்தும் மொழியும் செழுமையாக வெளிப்பட்டுள்ளது.கருத்து என்னைப் பலமுறை யோசிக்க வைத்தது.நன்றி

    ReplyDelete
  2. அகோர வெயிலோ நிலா.அழகு தமிழில் அரற்றியிருக்கிறீர்கள்.அழகுதான் வெயிலும் !

    ReplyDelete
  3. மௌனமாய் சகித்திருப்பது
    தாவரங்கள் விலங்குகளோடு
    பாவப்பட்ட ஏழைகளையும்
    சேர்த்துக் கொள்ளலாம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல கவிதை சகோ.. வெயிலும் மழையும் மனிதர்களை படுத்துகிறதோ இல்லையோ நிறைய பேரை புலம்ப வைக்கிறது...

    ReplyDelete
  5. மனம்துடிக்க, பேசவும் வழியற்று
    மெளனித்தே சகித்திருக்கின்றன
    தாவரங்கள், விலங்குகள்.
    அந்த நினைப்பு பாடாய்ப் படுத்துகிறது..
    கொட்டும் மழையில் பறவைகள் எங்கே தங்கும் என்றும் மனசு தவிக்கும்..

    ReplyDelete
  6. இயற்கையோடு முரணிப்பது மனிதன் மட்டுமே.மற்றெல்லா உயிர்களும் தங்களை எளிதாய்ச் சமன் செய்துகொள்கின்றன.நாம்தான் நம்மோடு சேர்த்து அவற்றிற்கும் சுய பச்சாதாப போஸ்டர் ஒட்டுகிறோம்.

    ReplyDelete
  7. @மிருணா...
    ம‌கிழ்ச்சி தோழி... ஒத்த‌ அலைவ‌ரிசையில் ப‌ய‌ணிப்ப‌தில்.

    ReplyDelete
  8. @ஹேமா...
    ஆம் தோழி. இன்னும் இரு நாட்க‌ளில் இவ்வாண்டின் அக்னி ந‌ட்ச‌த்திர‌ நாட்க‌ள் நிறைவுறுகின்ற‌ன‌.

    ReplyDelete
  9. @இர‌த்தின‌ வேல்...
    மிக்க‌ ந‌ன்றி ஐயா.

    @இர‌ம‌ணி...
    ஆம். பாவ‌ப்ப‌ட்ட‌ ஏழைக‌ள் வாயிருந்தும் வ‌ழியில்லாத‌வ‌ர்க‌ள் தான். மிக்க‌ ந‌ன்றி ஐயா.

    @வெங்க‌ட் நாக‌ராஜ்...
    ஆம் ச‌கோ... புல‌ம்ப‌லால் பாடு அதிக‌மாகிற‌து. பாடு தாங்காம‌ல் புல‌ம்பித் திரிய‌ வேண்டியிருக்கிற‌து.

    @ரிஷ‌ப‌ன்...
    நாமெல்லாம் இள‌நீர் வ‌ழுக்கை போன்ற‌ மென்ம‌ன‌சுக்கார‌ர்க‌ளாயிற்றே!

    @சுந்த‌ர்ஜி...

    உண்மைதான் ஜி. வாழ்விய‌ல் ச‌ம‌ன்பாட்டை இய‌ற்கை துல்லிய‌மாக‌வே நிர்ண‌யித்துள்ள‌து. வாயிருப்ப‌தால் புல‌ம்பிக் கிட‌ந்தாலும், 'வாடிய‌ ப‌யிரைக் க‌ண்ட‌போதெல்லாம் வாடும்' ஜீவ‌காருண்ய‌ம் த‌வ‌றில்லைதானே.

    ReplyDelete
  10. சூழ்கவசங்கள் மீறித் துடிதுடித்து அரற்றிடும்
    நம்மையும்
    மனம்துடிக்க, பேசவும் வழியற்று
    மெளனித்தே சகித்திருக்கின்றன
    தாவரங்கள், விலங்குகள்.//
    சிந்திக்கவைக்கும் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. மிருகங்களாவது ஓரளவுக்கு பரவாயில்லை... தாவரங்கள் என் செய்யும்? ஆனாலும்...இது குறித்து எப்போதேனும் மரங்களோடு பேசிப் பார்த்திருக்கிறோமா? அவை மௌனமாய் சொல்லும் சேதிகள், உரத்த சிந்தனைகள்.

    மரம்தான்..மரம்தான்...எல்லாம் மரம்தான்..
    மறந்தான்...மறந்தான்...மனிதன் மறந்தான்.

    ReplyDelete
  12. வாயில்லா தாவரங்கள் & விலங்குகள் மேல் கருணை உள்ளங்கொண்டு எழுதப்பட்டுள்ள நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. வாயில்லா ஜீவன்கள் மேல் உங்களுக்கிருக்கிற அக்கறையை உங்களின் பல எழுத்துக்களில் நான் கண்டிருக்கிறேன் நிலா.

    ஒரு அணில் குறித்தும் முன்னொரு போது எழுதி இருந்தீர்கள்.

    அப்படிப் பார்ப்பதற்கு ஒரு தனி மனம் வேண்டும்.

    தாய்மை கனிந்த மனம்!!

    வாழ்க தாயே!

    ReplyDelete
  14. /சித்திரைச் சூரியனின் அக்கினிப் பிழம்படி
    சிதைஎறி பிழம்பாய் உடல்வருத்த/

    முக்க‌ண்ண‌னின் உச்ச‌ம்

    /மனம்துடிக்க, பேசவும் வழியற்று
    மெளனித்தே சகித்திருக்கின்றன
    தாவரங்கள், விலங்குகள்./

    வ‌ள்ளலாரின் மிச்ச‌ம்.

    ReplyDelete
  15. நிலாமகள்..

    மனிதநேயம் கசியும் கவிதை. நேற்றுத்தான் இதுபோன்ற பலரையும் இந்த கொளுத்தும் வெயிலின் கொடுமையை அனுபவிக்கும் சூழலைப் பேசிக்கொண்டிருந்தேன் என் மனைவியிடம். எலும்புக்கூடுபோல உடம்புகொண்ட ஒருவர் பழைய பேப்பர் வாங்குபவர்...தள்ளுவண்டியோடு வெங்காயம் தக்காளி மர்ம்பழம் எல்லாம் வைத்துக்கொண்டு...செருப்பு அறுந்துவிட்டது என்று நாலைந்து துணிகளை வைத்து காலில் செருப்புபோல சணல்கயிறால் கட்டியிருந்தார். மாலையில்தான் செருப்பு வாங்கவேண்டும் என்றார். வழக்கமாக வரும் ஒரு வயதான பிச்சைக்காரி.. குடிகார கணவனால் துன்பம் அனுபவித்துப் புலம்பும் தயிர்க்காரப் பெண்.. பஸ்ஸ்டாப் அருகில் லேசான நிழலில் செருப்பு தைப்பவர்...இந்த வெயிலிலும் நன்றாக குடித்துவிட்டு பிளாஸ்டிக் கேரிபேக்கில் சிதறிக்கிடக்கும் மாம்பழங்கள்..பொட்டலங்களுடன் வாயில் ஈ மொய்க்க வெயிலில் கிடக்கும் உடம்பு...எப்போது தெளியுமோ...இப்படி பல இந்த வெயில் காலத்தில் உங்கள் கவிதை எவ்வளவோ சிந்தனைகளைக் கிளறிவிட்டது. வாழ்த்துக்கள். உங்கள் மனிதநேயம் தழைக்கட்டும் தொடர்ந்து.

    ReplyDelete
  16. தோழி கவிதை படித்தேன்.கவிதாளுமையை கைப்பற்றியுள்ள உங்களுக்கு வசந்த வாழ்த்துக்கள்.மனம்-மெளனம்,சித்திரை-சிதை,பருகி-புழுக்கம்,வசை-வெற்றி..என ஓசையை உருவாக்கும் மோனையை கட்டாயம் தவிர்த்தால் கவிதைவெளியில் நிரந்தர இருப்பு நிச்சயம் சாத்தியமாகும்

    ReplyDelete
  17. @இராஜ‌ராஜேஸ்வ‌ரி...

    வாங்க‌ தோழி... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

    @எல்லென்...

    ம‌ர‌ம்தான்... ம‌ற‌ந்தான்... சொல் விளையாட்டு ர‌சிக்கும்ப‌டியும் சிந்தை கிள‌றும்ப‌டியும்... மிக்க‌ ந‌ன்றி ஐயா.

    ReplyDelete
  18. @வை. கோ...

    த‌ங்க‌ள் ம‌திப்புரைக‌ள் க‌ன‌ம்பொருந்திய‌வை ஐயா... ந‌ன்றி!

    @ம‌ணிமேக‌லா...

    த‌ங்க‌ள் நினைவாற்ற‌ல் சிலாகிப்புக்குரிய‌து தோழி. என‌து சிர‌ம் தாழ்ந்த‌ வ‌ந்த‌ன‌ம்.

    ReplyDelete
  19. @வாச‌ன்...

    சுருங்க‌ச் சொன்னாலும் விள‌ங்கிச் சொல்லும் த‌ங்க‌ள் திற‌ன்க‌ண்டு விய‌ந்து நிற்கிறேன் ஐயா!

    ReplyDelete
  20. @ஹ‌ரிணி...

    நீங்க‌ள் விவ‌ரித்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் த‌கிப்பில் க‌சிந்து த‌விக்கிறேன். ம‌ன‌ம‌க‌லா அச்சித்த‌ரிப்புக‌ள் க‌தைக‌ளாய் வெளிப்ப‌டுத்த‌ முய‌ற்சிக்க‌லாமென‌த் தோன்றுகிற‌து. 'ஜீவ‌காருண்ய‌மே மோட்ச‌ வீட்டின் திற‌வுகோல்' என்ற‌ வ‌ள்ள‌லார் பிர‌ம்மாண்ட‌மாய் உய‌ர்ந்து நிற்கிறார் ம‌ன‌சில். மிக்க‌ ந‌ன்றி ஐயா! த‌ங்க‌ள் உற்சாக‌ப்ப‌டுத்த‌லும், பாராட்டுக‌ளும் என்னை உத்வேக‌ம் கொள்ள‌ வைத்திட‌ ஏதுவாயிருக்கின்ற‌ன‌.

    ReplyDelete
  21. @அமிர்த‌ம் சூர்யா...

    முத‌ல் வ‌ருகையும், வ‌ழிகாட்ட‌லும் ம‌கிழ்வேற்ப‌டுத்துகிற‌து தோழ‌ர்! அது திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌த‌ன்று. எனினும் ம‌ன‌வோட்ட‌த்தில் தெறித்து விழுப‌வை அவ‌ர‌வ‌ர் ம‌ன‌ப்பாங்கிற்கும் உட்ப‌ட்ட‌தாக‌வே அமைந்து விடுகின்ற‌ன‌.

    நெருக்க‌டி நேர‌ங்க‌ளில் ஞாப‌க‌க் குச்சியால் துழாவித் துழாவி எடுத்துக் கொள்வ‌துண்டு த‌ங்க‌ள் 'ப‌குதி நேர‌க் க‌ட‌வுளின் நாட்குறிப்பேட்'டிலிருந்து.

    ReplyDelete
  22. ஒவ்வொரு வருடமும் கடந்த வருடத்தைவிட இந்த முறை அதிகம்தான்வெயிலோ, மழையோ குளிரோ. புலம்ப முடிகிறது நமக்கு, முடியாமல் மெளனமாய் அனுபவிக்கும் வாயில்லா ஜீவன்களிடம் காட்டும் பரிவு தெளிவாகத் தெரியுது உங்கள் கவிதையில் .பாராட்டுக்கள்.

    ReplyDelete
  23. @ G.M Balasubramaniam...

    நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ச்ச‌ரியே. கூட‌வே 'போன‌ வ‌ருட‌ம் இப்ப‌டியில்லே' என்ற‌ முத்தாய்ப்பும் ந‌ம் புல‌ம்ப‌ல்க‌ளில் க‌ட்டாய‌மிருக்கும்... இல்லையா ஐயா? வ‌ருகைக்கும் ப‌கிர்வுக்கும் ந‌ன்றி!

    ReplyDelete