நேற்றிரவு எங்களிடம் விடைபெற்று தன் தந்தையுடன் பேருந்து நிலையம் சென்றான் எங்கள் அருமை மகன். இன்றிரவு ஐநூறு கிலோமீட்டர் தாண்டிய பள்ளி விடுதியில் நண்பர்களுடன் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறான். இராமனின் தாய் கோசலையின் ஏக்கத்தையும் தவிப்பையும் எல்லாத் தாயாரும் அனுபவிக்க நேர்கிறது அவ்வப்போது. எனக்கான முறை இப்போது.
பார்க்குமிடங்களெல்லாம் அவனுருவும், கேட்கும் ஒலிகளெல்லாம் அவன் குரலுமாக, பேச்சற்ற, செயலற்ற சமயங்களில் புலன்களை நிறைத்து நிற்கிறான். வீடு முழுக்க விரவிக் கிடக்கும் அவனது பொருட்கள் எனக்கான தேறுதலை சொல்ல வழியற்று மெளனித்துக் கிடக்கின்றன.
கடந்த நான்கு மாதங்களாக ஆயத்தமான மனசு யதார்த்தம் பழக அவகாசம் கேட்டு சட்டென பாரமாகிறது.
'படிப்புக்காக சிலவற்றை இழந்து நீ சிறிது காலமிருக்கப் போகிறாய். உனது படிப்பே நீயிழந்தவற்றை மீட்டுத் தரப் போகிறது' என்று அவனுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொல்ல முடிந்த என்னால் எனது அஞ்ஞானத்தை அகற்றிக் கொள்ள இயலாமல் தவிக்கிறேன்.
எங்கள் வீட்டு வரவேற்பறையிலுள்ள கரும்பலகை வண்ணம் பூசிய சுவரில் எனது மகள் எனக்காகவும் எல்லோருக்காகவும் இன்றெழுதியுள்ள கீழ்க்கண்ட வாசகங்களை அவ்வப்போது படித்துப் படித்து ஆறுதலாகிக் கொள்ள விழைகிறேன்.
"எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாய்த் தானிருக்கும். அதற்காக துறைமுகத்திலேயே நிறுத்தப் படுவதில்லை. கடலின் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்யவே கப்பல்கள் தயாரிக்கப் படுகின்றன"
- 'கிரேஸ் முர்ரே ஹாப்பிர்'.
"துன்பம் ஒரு பழம் போன்றது. தாங்க முடியாத மெல்லிய கிளையில் கடவுள் அதை வளரச் செய்வதில்லை"
- 'உய்கோ'.
கஸ்டம்தான்.வாழ்வு வளமாக நீங்களும் ஆறுதலடைந்து அவருக்கும் ஆறுதல் சொல்லவேணும் நிலா.நல்லதுக்குத்தானே !
ReplyDelete//"எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாய்த் தானிருக்கும். அதற்காக துறைமுகத்திலேயே நிறுத்தப் படுவதில்லை. கடலின் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்யவே கப்பல்கள் தயாரிக்கப் படுகின்றன"
ReplyDelete- 'கிரேஸ் முர்ரே ஹாப்பிர்'.
"துன்பம் ஒரு பழம் போன்றது. தாங்க முடியாத மெல்லிய கிளையில் கடவுள் அதை வளரச் செய்வதில்லை"
- 'உய்கோ'.//
தாயின் தவிப்புக்கு ஆறுதல் அளிக்கும், மிகவும் பொருத்தமான வாசகங்கள். பதிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
voted. 3 to 4 in INDLI
உங்கள் மனது கண்ணாடியாய் தெரிகிறது எழுத்தில்.இது ஒரு இடைக்காலம்.செடி வளர்ந்து மீளவும் மரமாக உங்கள் வீட்டில் தான் பூக்கப் போகிறது இல்லையா.இந்த இடைவெளி வளர்ச்சிக்குத் தேவையானதும் கூட என நீங்களே அறிவீர்கள்.இதில் துன்பம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொன்னால் எப்படி? வாங்க, வந்து நிறைய எழுதுங்க பார்க்கலாம்.
ReplyDeleteஎன்னைக்குமே அம்மாவுக்கு இருக்கும் நல்ல உணர்வு இது. நல்லபடியாய் மேற்படிப்பு முடித்து உங்களிடம் தானே திரும்பி வருவார் உங்கள் மகன். இடைப்பட்ட காலம் வெகுவிரைவாய் சென்று விடும். நல்ல முறையில் மேற்படிப்பு முடித்து வெற்றியுடன் திரும்ப அவருக்கு எனது வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்
ReplyDeleteஉங்களின் அன்பு மகன் படிப்பில் பல உயர் நிலை அடைந்து
வளம் பெற வாழ்த்துகிறேன்
"பார்க்குமிடங்களெல்லாம் அவனுருவும், கேட்கும் ஒலிகளெல்லாம் அவன் குரலுமாக, பேச்சற்ற, செயலற்ற சமயங்களில் புலன்களை நிறைத்து நிற்கிறான். வீடு முழுக்க விரவிக் கிடக்கும் அவனது பொருட்கள் எனக்கான தேறுதலை சொல்ல வழியற்று மெளனித்துக் கிடக்கின்றன".
தாயின் தவி தவிப்பை அழகாய் சொன்ன வார்த்தைகள் அற்புதம்
எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாய்த் தானிருக்கும். அதற்காக துறைமுகத்திலேயே நிறுத்தப் படுவதில்லை. கடலின் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்யவே கப்பல்கள் தயாரிக்கப் படுகின்றன"
ReplyDeleteநல்ல பதிவு - வாழ்த்துக்கள்.
"எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாய்த் தானிருக்கும். அதற்காக துறைமுகத்திலேயே நிறுத்தப் படுவதில்லை. கடலின் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்யவே கப்பல்கள் தயாரிக்கப் படுகின்றன"
ReplyDelete- 'கிரேஸ் முர்ரே ஹாப்பிர்'.
"துன்பம் ஒரு பழம் போன்றது. தாங்க முடியாத மெல்லிய கிளையில் கடவுள் அதை வளரச் செய்வதில்லை"
- 'உய்கோ'.
ஆமேன்!
//இராமனின் தாய் கோசலையின் ஏக்கத்தையும் தவிப்பையும் எல்லாத் தாயாரும் அனுபவிக்க நேர்கிறது//
ReplyDeleteதவிர்க்கவியலாது,தடுக்கவியாலது அதனைத் தாங்கவும் இயலாது துடிக்கும் அன்னையின் மன வலையை, நிலையை இதைவிட உணர்வுபூர்வமாய் விளக்கிட முடியாது. துயரிலும் குழந்தையை ராமனாய் காணும் தாய்மையையும், எனக்கு மட்டுமா, அவளும்தானே பிறிவுத்துயரில் என்பதாய் பெண்மையையும் உணரவைக்கிறது உங்கள் பதிவு.
காலம்..ஈன்ற பொழுதிலும் மேலாய் மகிழ சில காலம் இப்படி தவித்தல் இன்னுமொரு பிரசவமாய்....
உங்கள் மகனின் மேற்படிப்பு சிறப்பாக முடிந்து உங்களிடம் விரைவில் வர வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிபிக்குமார் எங்கே போயிட்டான்.. இதோ ஒரு தொலைபேசி அழைப்பில் அவன் குரல் உங்க பக்கத்துல..
ReplyDelete(கொஞ்சம் இருங்க.. கண்ணை தொடச்சுக்கிறேன்.. இதே போல தள்ளி இருக்கும் என் மகனை நினைத்து)
எவ்வளவு சமாதானம் செய்து கொண்டாலும்
ReplyDeleteகுழந்தைகளை பிரிந்து இருப்பது கஷ்டம் தான்.
@ஹேமா...
ReplyDeleteஆமாமாமாம். தங்கள் இதமான சொற்களில் தெறிக்கும் ஆறுதல் பிரிதலின் தகிப்பை மட்டுப்படுத்துகிறது. நன்றி தோழி.
@வை.கோ. சார்...
ReplyDeleteவேதனையெனும் புதைசேற்றில் அமிழாமல் மீள யாருடைய நல்வார்த்தைகளாவது கைக்கொள்ள வேண்டியிருக்கிறது சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@மிருணா...
ReplyDelete//இந்த இடைவெளி வளர்ச்சிக்குத் தேவையானதும் கூட//
சரியான கணிப்புதான் மிருணா. தங்கள் பயணம் பதிவில் உங்களுக்கும் விடுதியில் தங்கிய அனுபவம் உண்டென அறிய முடிந்தது. இந்தப் பிரிவின் கமறலெல்லாம் தொடக்கச் சிக்கல்தான். போகப்போக சரியாகிவிடுமென புரிகிறது. தங்களின் உற்சாகப் படுத்தலில் படைப்பாற்றலில் மனசை மடைமாற்ற விழைந்துள்ளேன். மிக்க நன்றி.
@வெங்கட் நாகராஜ்...
ReplyDeleteஎனக்கான தேறுதலும், சிபிக்கான வாழ்த்தும் தங்கள் சகோதர வாஞ்சையின் பெருமிதம் உணர்த்தி நிற்கின்றன.நன்றி சகோ...
@ஏ.ஆர்.இராஜகோபாலன்...
ReplyDeleteமுதல் வருகைக்கும் ஆற்றுவிக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ... தங்கள் சுட்டிப் பெண்ணின் படங்கள் மனதை நிறைத்தன. அவளுக்கான பயணப் பதிவுகளும்!
@இரத்னவேல் ஐயா...
ReplyDeleteதங்களைக் கவர்ந்த மேற்கோளை எனக்காக எழுதி, உடனிருந்து அவ்வப்போது ஆற்றுவிக்கும் எங்கள் செல்ல மகளுக்கு தங்கள் பாராட்டுகளைச் சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்த வருகைக்கு நன்றி ஐயா.
@மணிமேகலை...
ReplyDeleteஒரு வாசகமென்றாலும் திருவாசகம்! அன்பிற்கினியவர்களின் வேதனையை ஆற்றுவிக்க சொற்சிக்கனமும் சில சமயங்களில் வெகு பலனளிப்பதாகவே... மிக்க நன்றி தோழி!
@வாசன் ஐயா...
ReplyDeleteதுயரிலும் குழந்தையை ராமனாய் காணும் தாய்மையை//
எனக்கு மட்டுமா, அவனும்தானே பிரிவுத்துயரில் என்பதாய் பெண்மையையும் உணரவைக்கிறது //
காலம்..ஈன்ற பொழுதிலும் மேலாய் மகிழ சில காலம் இப்படி தவித்தல் இன்னுமொரு பிரசவமாய்.... //
தங்கள் நுட்பமும் சிந்தனை வீச்சும் எப்போதும் போல் வியப்பிலாழ்த்தியபடி... மிக்க நன்றி ஐயா! பெரியோர்களின் ஆசியும், இறையருளும் நிலைத்து அவன் உயர்வடைய தங்கள் இன்சொற்கள் துணைநிற்கட்டும்.
@கோவை2டெல்லி...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி! துரையவர்கள் +1 படிக்கப் போகத்தான் இத்தனை ஆர்பாட்டங்கள். இந்த அனுபவங்கள் இனியவன் வேற்று நாடு சென்றாலும் உற்சாகமாக வழியனுப்பவும் காத்திருக்கவுமான ஒரு முன்னோட்டம்!
@ரிஷபன்...
ReplyDeleteஉங்க தேறுதல் மொழியை படித்தவுடன் தொலைபேசியில் தங்கள் துணைவியிடம் பேசவேண்டும் போலிருந்தது. மகனைப் பிரிந்து ஆற்றியிருக்கும் அவரின் ஆறுதல் சொற்கள் வேண்டியிருந்தது. என்ன வியப்பு...! நினைப்படங்கும்முன் தங்களிடமிருந்து தொலைபேசி!! சரியான நேரத்தில் சரியான மருந்திட்டீர்கள்... நெகிழ்வாய் உணர்ந்தேன், தங்கள் துணைவியாரின் வார்த்தைகளால்.அதானே... சிபி எங்கே போய்விட்டான்...? ஒரு தொலைபேசியழைப்பு அவனைக் காதருகில் கொண்டுவந்துவிடாதா...?! உங்களைப் போன்றவர்களின் அன்புள்ளங்களும் அத்துணை நெருக்கமாகவே இருக்கிறதென்பது பெரும் பலம் தானே எனக்கு!!!
@மதுமிதா...
ReplyDeleteஆம் ஐயா! சமாதானங்களால்தான் பெரும்பாலான நேரங்களில் நிரம்பி வழிகிறது நம் வாழ்வியல் கோப்பை. தங்கள் அனைவரின் தேறுதல் மொழிகளும் வெலவெலத்துப் போயிருந்த மனசை இறுக்கமாக்கித் தெம்பேற்றியிருக்கிறது. மிக்க நன்றி!
ஒவ்வொரு தாயும் அனுபவிக்கும் துயரம் இது! நீங்களே சொல்லியிருப்பது போல அறிவுரை சொல்லும் நம்மால் விட முடியாத அஞ்ஞானம் இது! நானும் அனுபவித்திருக்கிறேன். இந்த நிலை மட்டுமல்ல, அதன் பின் கல்லூரிப்பருவத்தில், எங்கோ வேலையில் அமரும்போது, அதற்கும் பின்னால் திருமணத்திற்கப்புறம்.. இப்படி ஒவ்வொரு நிலையிலும் ஒரு தாய் தன்னை பதப்படுத்திக்கொண்டே இருக்க வேன்டிய கட்டாயம்! உலக நியதி இது! நீங்களும் உங்களை கொஞ்சமாக சரி செய்து கொள்ளுங்கள் நிலாமகள்!!
ReplyDelete@மனோ சாமிநாதன்...
ReplyDeleteதங்கள் தேறுதல் வார்த்தைகள் நெறிப்படுத்துகின்றன சகோதரி,என்னை. தாயன்பின் நெருக்கத்தில் முதல் பிரிவு தாய்ப்பால் மறக்கடித்த நாளொன்றில் துவங்கிவிடுகிறது. உயிரில் கலந்து உணர்வில் இழைந்து வளர்ந்த சிசு ... தொப்புள்கொடியறுத்த பின்னும் தொடர்பறாத பாசம்...தொலைவிலும் புது உறவிலும் தள்ளிப் போகலாம்; தயாராகிக் கொள்ளத் தான் வேண்டும். நேசம் மிகுந்து நெஞ்சில் சுமக்கிறோம் நினைவறும் வரை.உற்சாகப்படுத்துகிறது தங்கள் வருகை.
எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
ReplyDeleteஉங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்
ReplyDeleteஉங்களின் அன்பு மகன் படிப்பில் பல உயர் நிலை அடைந்து
வளம் பெற வாழ்த்துகிறேன் தாயின் தவி தவிப்பை அழகாய் சொன்ன வார்த்தைகள் அற்புதம்
@மாலதி...
ReplyDeleteமுதல் வருகைக்கும் தேறுதலான வார்த்தைகளுக்கும் நன்றி மாலதி.