நீளும் வாக்குவாதத்தின்
உச்சாணியில் நிற்கும்
உக்கிரம் தணிய
அருமருந்தாய்
இருக்குமொரு
வார்த்தையுமற்ற
மெளன வெளிநடப்பு .
சூழல்களால் கிளறப்பட்ட
அடிமனசின் ஆற்றாமைகள்
மேலெழும்பி நம்மை
அமிழ்த்தும்போது
வாயடைத்து
மனப்புழுக்கம் கூட்டுவிக்கும்
மெளனம் மட்டும்
பெருநோயாய் ...
ஒரு பெண் மனதின் நீண்ட மௌனத்திற்கான காரணங்களின் விளக்கமாக உங்களின் இக் கவிதை அமைந்துள்ளது.
ReplyDelete@நிரூபன்...
ReplyDeleteவாங்க நிரூபன்! தூங்கப் போகும் நேரமெது?!வலையுலவி முடிக்க நடு இரவு கடந்துவிடுமோ...!
மெளனம் ஒரு இடத்தில் உக்ரம் தணிக்கும் அரு மருந்தாய், அதே மெளனம் வேறொரு இடத்தில் பெருநோயாய். அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeleteமௌனம் சிலசமயம் சுகமாயும் வேதனையாயும்தான்....தேவைக்கேற்ப !
ReplyDeleteஅந்த மௌனமே ஆதரவாகவும், எழவும் வைக்கும் மாயமும் உடையது தோழி.
ReplyDeleteமௌனத்திற்குத் தான் எத்தனை வலிமை... அதிலும் அந்த மௌனமான வெளிநடப்பு....
ReplyDeleteநல்ல கவிதை சகோ.
மிகுந்த துயர் நினைவுகளை அடைகாக்கும் அந்த மௌனம் உலகின் மிகப்பெரும் இயக்கம். எனக்கிந்த மௌனம் மேலே அலாதிப்பிரியம் தோழி.
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteநல்லதொரு கவிதை.
ReplyDelete#வை.கோ.சார்...
ReplyDeleteமெள்னத்தின் பெருமையை மணிக்கணக்கில் பேசினாலும் ஓரிரு நிமிட உணர்தலில் அதன் அனுபவம் பல தினுசு இல்லையா... தொடர்வருகை என்னை உற்சாகப் படுத்துகிறது. நன்றி!
#ஹேமா...
ஆம் தோழி. அவ்வப்போதைய சூழலும் மனோநிலையுமே நிர்ணயிக்கின்றன.
#மிருணா...
சரிதான் மிருணா. மெளனித்திருக்கும் போது தான் புத்தியும் அறிவும் தெளிவாய் வேலை செய்யும்.
#வெங்கட் நாகராஜ்...
தம்பதியரிடையே வாக்குவாதமெனில், ஆணுக்கு கைவந்த கலையிது இல்லையா சகோ...
#காமராஜ்...
துயர்நினைவுகளை அடைகாக்கும் மெளனம்... எவ்வளவு அடர்த்தி மிக்க கொடுமையான வேதனை...! உங்கள் படைப்புகளை வாசிக்கும் போது மெளனத்தின் பிடியில் சூழலை அவதானிப்பதாலோ நுட்பமான விடயங்களை உள்வாங்க முடிகிறதெனத் தோன்றும். சலசலத்துக் கிடக்கும் அருவியைக் காட்டிலும் தெளிந்த நீரோடை அழகாய் தோன்றுகிறது.
#ரத்னவேல் ஐயா...
வருகையும் கருத்தும் என்னை ஊக்குவிக்கின்றன. நன்றி ஐயா!
#கோவை2டெல்லி...
தொடர் வருகையில் மகிழ்கிறேன் ஆதி. மிக்க நன்றி!
அழகிய முரண்!:)
ReplyDeleteநம் நாட்டுக் கன்பராக் கவிஞை ஆழியாள் ஒரு கவிதை எழுதியிருந்தாள்.’பேரமைதியில் இசைக் குறிப்பு’என்றொரு வரி வரும் அதில்.
என்னைப் பொறுத்தவரை மெளனம் என்பது ஒரு சாதிக்க முடியாத பதிலடி.ஒரு விடயத்தின் இறப்பு அல்லது அதற்கான கல்லறை.எளிமையாகச் சொல்வதானால்,’பாடம் முடிவுற்றது.முற்றுப் புள்ளி’.(chapter closed.full stop.)என்பது அதன் மொழிபெயர்ப்பு.
மெளனம் அடுத்த கட்டத்திற்கான நகர்வும் கூட.
காலம் மட்டுமே எழுதிச் செல்லும் அதன் மொழியை.அதன் மகத்தான இசைக் குறிப்பை.
அடிக்கடி இதனை நான் பாவிப்பதால் தான் அது பற்றி இத்தனை விளக்கம்.
:)மணிமேகலா.
@மணிமேகலா...
ReplyDelete"மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி
சம்மதமின்மைக்கும் அறிகுறி
அது எதிர்ப்புணர்வின் அறிகுறி
எதற்கான அறிகுறியுமே அல்ல
மெளனம் சினத்தின் இறுக்கம்
இயலாமையின் துயரம்
மெளனம் ஒரு பாவனை
கூர்ந்து கவனித்தலின் குணாம்சம்
அல்லது
ஒட்டாமலிருத்தலின் வெளிப்பாடு
அனுபவம் கற்றுத் தந்த மந்திரச் சொல்
பேரமைதியின் மகத்தான இசைக்குறிப்பு*
ஆனால்
அவமானங்கள், ஏமாற்றங்கள், துரோகங்களின் முன்
மெளனம் ஓர் உதடு பிய்ந்த கறுப்புச் சிறுமி
சட்டை கிழிந்து, முகம் கன்றி
கூனிக் குறுகி ஒரு காலோடு நிற்கும்
அம்மெளனம்
அவளின் வற்றும் உயிர்ச்சாறு
பறக்க விட்ட கடைசி வெள்ளைக் கொடி"
என்ற ஈழத்துப் பெண்கவிஞர் ஆழியாளின் கவிதை மெளனம் பற்றிய ஒட்டுமொத்த விவரணையாயிற்றே...!
தங்கள் கூர்ந்து கவனித்தலின் குணாம்சம் எனக்கு எப்போதுமே மிக உவப்பானது தோழி!:-))))
மெளனம் நம்மை
ReplyDeleteதோற்கடிக்கும்,
வாக்குவாதத்தில்
மட்டுமல்ல........
@கதிரவன்...
ReplyDeleteபேச வேண்டிய நேரத்தில் அமைதிகாப்பதும், மெளனிக்க வேண்டிய நேரத்தில் சலசலப்பதும் சிறுபிள்ளைத் தனமாகிவிடும் தான்.முதல் வருகை மகிழ்வை அளிக்கிறது தோழர்.