23 கருத்துரைகள்
  1. அனுபவம் போல உண்மைதான் சகோதரா இந்த வலை நானும் அனுபவித்திருக்கிறேன்

    ReplyDelete
  2. அருமை
    கோவில் பக்கம் வீடு உள்ளவர்கள்
    அனுபவிக்கிற கொடுமையை
    மிக அழகாக பதிவாக்கியிருக்கிறீர்கள்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பக்கத்து கோயில்ல திருவிழாவா.!? ஹி ஹி.. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணலாமா.?

    ReplyDelete
  4. எனக்குப் புரிஞ்சு போச்சு நிலாமகள்!

    உங்க வயல்ல மாடு புகுந்து பயிரையெல்லாம் மேஞ்சு பாழாக்கிடுச்சு. அந்த சோகத்தோட வீட்டுக்கு வந்தா இந்த மாரியம்மன் கோயில் லௌட் ஸ்பீக்கர் தொல்லை.

    இது தாங்க முடியாம எழுதினதுதானே இந்தக் கவிதை.

    ReplyDelete
  5. நிலா...ரொம்பக் கோவத்தில எழுதியிருக்கீங்க.அதுமட்டும் நல்லாத் தெரியுது !

    ReplyDelete
  6. @சிவசங்கர்...
    ஈழத்து சகோதரருக்கு இனிய வணக்கம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. @ரமணி...
    மிக்க நன்றி ஐயா. அதே படகில் நீங்களும் பயணித்திருப்பது புரிகிறது.

    ReplyDelete
  8. @தம்பி கூர்மதியன்...

    திருவிழாவென்றால் ஓரிருநாளில் முடிந்து விடுமே... நித்ய விசேடப் பெருமாளை அருகில் வைத்து நான் படும் பாடு அப்பப்பா...
    தங்களின் முதல் வருகை மகிழ்வே

    ReplyDelete
  9. @தம்பி கூர்மதியன்...

    திருவிழாவென்றால் ஓரிருநாளில் முடிந்து விடுமே... நித்ய விசேடப் பெருமாளை அருகில் வைத்து நான் படும் பாடு அப்பப்பா...
    தங்களின் முதல் வருகை மகிழ்வே

    ReplyDelete
  10. @சுந்தர்ஜி ...

    உங்க கலாய்ப்பு என்னை மேலும் சில வரிகள் சேர்க்கத் தூண்டியது ஜி. நீண்ட காலத்துக்குப் பின் எட்டிப் பார்க்கத் தோன்றியதே பெருமகிழ்ச்சி.ஆனால் உங்க கருத்து நினைத்து நினைத்து சிரிக்கும்படி இருந்தது. நல்ல கற்பனை.

    ReplyDelete
  11. @ ஹேமா ...

    வாங்க தோழி... சரியான புரிதல். அனுபவத்தை வரிகளாக்கி ஆனது பல காலம். வண்டியை ஸ்டார்ட் செய்தபின் போகாமல் நிற்கும்போது ஆக்சிலேட்டரை இலேசாக முறுக்கிக் கொண்டிருப்பது போல் பதிவு மாற்றும் அவஸ்த்தையில் துழாவிப் போட்டது. கடைசியாய் சேர்த்த நாலைந்து வரிகள் அனுதாபம் எழச் செய்துவிட்டதல்லவா...!

    ReplyDelete
  12. நிலையாமை புரியாது
    ஒருசார்பாய் நகையாடியவர்
    நடமாடுவாரா பழயபடி...?!
    நிலையாமையே நிலையானது

    ReplyDelete
  13. நல்ல கவிதை சகோ. சில விஷயங்கள் நமக்கு தவறு எனப் புரிந்தாலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. :)

    ReplyDelete
  14. பாட்டு கேட்பது என்றாலே சத்தமாக ஒலிக்க வைப்பது என்ற பொதுப் புரிதல் உள்ள நிலையில் இது போன்றவற்றை புரிய வைப்பது கடினம். மேட்டிமைத்தனமாக வேறு பார்க்கப் படும். சிக்கலான விஷயம். கவனமாக எழுதி இருக்கிறீர்கள் தோழி.

    ReplyDelete
  15. 'மதம்' பிடித்த
    ஒலிபெருக்கி அறியுமா

    சரியான வார்த்தை போட்டால் எப்படி சுரீலென்று தெறிக்கிறது கவிதை.. அழகாய் உணர்த்தி விட்டது

    ReplyDelete
  16. மாட்டுக்கும் ஒலிபெருக்கிக்கும் அரசியலுக்கும் பின்னால் இருப்பது விகாரப்பட்ட ஒரு மனநோயாளி தோழி!

    சமூகத்தில் பல விதமான மன நோயாளிகள்!

    அதில் இது ஒரு வகை!

    - மணிமேகலா.

    ReplyDelete
  17. @இராஜ இராஜேஸ்வரி ...
    'நிலையாமையே நிலையானது' அனைவரும் உணரவேண்டியதுதான் தோழி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  18. @வெங்கட் நாகராஜ்...
    ஆம் சகோ... நம் கைமீறிய விஷயங்களை ஆதங்கமோடோ, ஆவேசமோடோ வேடிக்கை பார்த்தாக வேண்டிய நிலை.

    ReplyDelete
  19. வேலி முறித்து
    பயிர் மேயும்
    பசித்த மாடறியுமா
    நீரூற்றி
    களைபறித்து
    உரம்போட்டு
    பயிர் வளர்த்த
    உழவன் மன உளைச்சலை...?!
    அருமை வாழ்த்துக்கள்............

    ReplyDelete
  20. @ மிருணா ...

    ஆம் தோழி. எந்தவொரு ஆகம சாத்திரங்களிலும் ஒலிபெருக்கி வைத்து ஆன்மீகம் பரப்பச் சொன்னதாக தெரியவில்லை. சம்பிரதாயங்களை தத்தம் போக்கில் வளைத்துக்கொள்ளும் சில தனிமனிதர்களின் சுயலாபங்களுக்காய் முதியோரும் நோயாளிகளும், சிறு குழந்தைகளும் பள்ளிப் பிள்ளைகளும் படும் துயரம் ஆவேசம் கிளப்புகிறது.

    ReplyDelete
  21. @ரிஷபன்...
    ஆமாம் சார். எங்க ஊர் 'மதம்' பிடித்த ஒலிபெருக்கிகளுக்கு மின் கட்டணம் இல்லாததால் அதிகாலை நான்கு முதல் இரவு பத்தும் தாண்டி அலறியடிக்கும்.

    ReplyDelete
  22. @ மணிமேகலா...
    எழுந்து நின்று கைதட்டுகிறேன் தோழி. பெரியதொரு தடியால் அடித்தமைக்கு. இத்தருணம் வெளியே பெய்திடும் கோடை மழையாய் தங்கள் தெளிந்த சிந்தனை எனை ஆற்றுவிக்கிறது

    ReplyDelete
  23. @அம்பாளடியாள்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றியுடையவளாகிறேன் சகோதரி.

    ReplyDelete