வந்ததும், சென்றதும்... 28.6.1916--23.11.1985 |
தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சுகமே பிரதானம் என்று பெரும்பாலோர் வாழ்ந்திருக்க, ஊர் உலக நலனுக்கும் உழைத்துக்
களைத்த உத்தம வாழ்வை கண்டு வளர்ந்த எங்களுள்ளும் செழித்திருக்கிறது சமூகத்தின் மீதும் சக உயிர்கள் மீதும் நேசமிக்க காருண்யம்!
அப்பா...! எங்களுள் நீங்கள் விதைத்துச் சென்ற நற்சிந்தனைகளும், நல்லொழுக்கமும் கிளைத்துப் பரவி எம் சந்ததிகளுக்கும் நிழலாய்... உங்கள் ஜீவ அணுக்கள் உட்பொதிந்து வளர்ந்து பிரகாசிக்கும் எங்கள் வாரிசுகளை ஆசீர்வதியுங்கள்!!
அன்பை மட்டும் விதைக்கும்
ReplyDeleteபெற்றோர்கள் மத்தியில்
சமூகத்தின் மீதும் சக உயிர்கள்
மீதும் நேசமிக்க காருண்யத்தை
விதைத்த தங்களின் தந்தை
போற்றத்தக்கவர். அவரின் ஆசிகள்
தலைமுறை தலைமுறையாய்
உங்களைத் தொடரும்.
திரு.கே.வி.ராமலிங்கம் அய்யா அவர்களின் நினைவுகளுக்கு தூவுகிறேன் என் மலர்களையும்.
ReplyDeleteஉங்கள் தந்தையின் அருளாசி உங்களுக்கு என்றும் இருக்கும் சகோ. நினைவு நாளான இன்று மட்டுமல்ல என்றும்....
ReplyDeleteஉங்கள் தந்தையின் ஆசி பரிபூரணமாய் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிச்சயமாய் கிடைக்கும்.
ReplyDeleteவித்தியாசமாய் ஒரு நினைவஞ்சலி!
ReplyDeleteஎங்கள் வணக்கங்களும்..
என் அப்பாவையும் அவர் கையெழுத்தையும் நானும் சேகரித்து வைத்திருக்கிறேன் நிலா.மனம் தளர்கிறது நினைக்கவே !
ReplyDeleteகம்பீரமான வணக்கங்கள்
ReplyDeleteவாரிசுகளுக்கு வாழ்த்துகள்!
வித்யாசமாய்...இந்த நினைவுக் கீறல்..மனதினை வருடுகிறது கொஞ்சம் ‘கனமா’கவே....
ReplyDeleteமனித நேய மிக்க அந்த பெரியவருக்கு அஞ்சலியும்,
வாரிசுகளுக்கு நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்களுமாய்...
ஆர்.ஆர்.ஆர்.
@சந்தான கிருஷ்ணன்...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா! இணையாக தங்களின் மேலான ஆசிகளும் எனை மகிழ்விக்கிறது!!
@சுந்தர்ஜி...
ReplyDeleteநினைவாஞ்சலிக்கான தங்களின் சுகந்தமளிக்கும் மலர்கள் மனம் நிறைகின்றன ஜி! மிக்க நன்றி!!
@வெங்கட் நாகராஜ்...
ReplyDeleteதங்கள் பரிவு மிக்க ஆறுதல் மொழிகள் என்னை பலப்படுத்துகின்றன சகோ... மிக்க நன்றி!!
@கோவை2தில்லி...
ReplyDeleteதங்கள் வார்த்தைகளால் தெம்பாய் உணர்கிறேன் தோழி... மிக்க நன்றி!!
@ரிஷபன்...
ReplyDeleteவிவரம் புரிந்த நாள் முதலாய் அவரது பெயருக்கான மரியாதை எனது கம்பீர அடையாளமாயிருக்கிறது. என்னாலான எளிய அர்ப்பணிப்பாய் இப் பதிவு. பகிரக் கிடைத்த இப்படியான தோழமைகள் எனது புதிய பலம்!! நெகிழ்வான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
பரஸ்பரம் ஆறுதலுக்கும் தேறுதலுக்கும் பொதுவான புள்ளியில் நாமிருக்கின்றோமோ தோழி... இழப்பை பகிர்ந்து கொண்ட இதமான வார்த்தைகளுக்கு நன்றி ஹேமா!!
ReplyDelete@ப்ரியமுடன் வசந்த்...
ReplyDelete'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' நன்றி சகோதரா...
@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி...
ReplyDeleteஇழப்பின் வலியிலிருந்து மீளச் செய்கிறது தங்கள் இதமான ஆறுதலளிக்கும் சொற்கள்...! மிக்க நன்றி ஐயா!!