இலக்கியக் கூட்டமொன்று...
சிறப்புப் பேச்சாளரின்
ஓங்கிய குரலில்
வெள்ளமெனப் பெருகியது தமிழமுது
கட்டுண்டது காற்றும்...
விட்டுவர ஆளற்ற
தம்பதியருடன் வந்த சிறுபிள்ளை
காற்றுக்கு மாற்றாய்
சுற்றித் திரிந்தது இருக்கைகளூடே...
அதனிரு கரங்களில்
பந்தாக மாறியிருந்த பலூனில்
சிறைபட்டிருந்த காற்றால்
புழுக்கமற்றதாகியது சூழல்.
அச்சின்னஞ்சிறு தளிரசைவைப்
பின் தொடர்ந்தன சில கண்கள்
சலனமுற்ற புத்தியில்
தங்காது நழுவின
செவிநுகர் விருந்தின் சுவை
'கவனம் சிதறாமல் தன் போக்கிலிருக்க'
ஒலிவாங்கியில்லாமல்
போதித்தது குழந்தை.
சிறப்புப் பேச்சாளரின்
ஓங்கிய குரலில்
வெள்ளமெனப் பெருகியது தமிழமுது
கட்டுண்டது காற்றும்...
விட்டுவர ஆளற்ற
தம்பதியருடன் வந்த சிறுபிள்ளை
காற்றுக்கு மாற்றாய்
சுற்றித் திரிந்தது இருக்கைகளூடே...
அதனிரு கரங்களில்
பந்தாக மாறியிருந்த பலூனில்
சிறைபட்டிருந்த காற்றால்
புழுக்கமற்றதாகியது சூழல்.
அச்சின்னஞ்சிறு தளிரசைவைப்
பின் தொடர்ந்தன சில கண்கள்
சலனமுற்ற புத்தியில்
தங்காது நழுவின
செவிநுகர் விருந்தின் சுவை
'கவனம் சிதறாமல் தன் போக்கிலிருக்க'
ஒலிவாங்கியில்லாமல்
போதித்தது குழந்தை.
அழகிய கவிதை சகோ… நல்ல சிந்தனை.
ReplyDeleteஉங்களின் கவிதை ஆழ்ந்த பொருள் தருகிறது. எப்போதுமே இந்த சமூகம் சிறார்களிடமிருந்துதான் கற்றுக் கொள்கிறது. வாழ்த்துக்கள். வந்து போங்கள்.
ReplyDeleteசிறப்புப் பேச்சாளரின் ஓங்கிய குரலினும் குரலற்ற சிறுவனின் காற்றுண்ட பலூனைத் தொடர்வது கவிதை மனம்.பேசாது பேசியது சிறுவனின் போதனை.அழகு நிலாமகள்.
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteஉங்க வாண்டு அதை விட அழகு
அருமையான கவிதை தோழி.
ReplyDeleteதாய்மை ததும்புகிறது சொற்களில்.:)
ReplyDeleteமுகப்பில் இருப்பது உங்கள் மகளா?
தலைப்பே கவிதை!
ReplyDeleteநானும் நிறைய விஷேசங்களில் அப்பா அம்மாவினால் கண்டு கொள்ளப்படாமல் விட்ட குழந்தைகளின் சேட்டைகளை ரசிப்பதுண்டு!
பந்தாக மாறியிருந்த பலூனில்
ReplyDeleteசிறைபட்டிருந்த காற்றால்
புழுக்கமற்றதாகியது சூழல்.
ஆஹா.. இந்த வரியில் சிறைப்பட்டது என் மனசு, வாழ்த்துகள்
@வெங்கட் நாகராஜ்...
ReplyDelete@தமிழ்க் காதலன்...
@சுந்தர்ஜி...
@கோவை 2 டெல்லி...
@தினேஷ் குமார்...
@மணிமேகலா...
@ப்ரியமுடன் வசந்த்...
@ரிஷபன்...
தங்கள் அனைவரின் வருகையும் உற்சாகமான கருத்துகளும் மிகுந்த மகிழ்வை அளிக்கிறது. நன்றி!!!!!!!!
தினேஷ்... வாண்டு நம்ம 'வந்தேமாதரம்' சசிகுமார் மகள் யுதிஷா !
மணிமேகலா... ஒரு வழியாக இப்போதுதான் என் வளர்ந்த மகள் தன் சிறு வயசு படத்தை எனது ப்ளாகில் உபயோகித்துக்கொள்ள அனுமதித்திருக்கிறாள். அடுத்து வருவது அவளது படமாயிருக்கும்.
இலக்கிய கூட்டமாயிருக்கட்டும்
ReplyDeleteஅல்லது திருமணக் கூட்டமாயிருக்க்ட்டும்
அதனை சுவாரசியப் படுத்துவது
இத்தகைய குழந்தைகளின் இருப்பும்
அவர்களின் ஓட்டங்களூம் தான்.
குழந்தையா இலக்கியமா...குழந்தைகள் எங்கும் முதலிடம் பிடித்துக்கொள்வார்கள் !
ReplyDelete@santhanakrishnan...
ReplyDelete@ஹேமா...
நமது ஒத்திசைந்த கருத்துக்கள் மகிழ்வு தருகின்றன. நன்றி...!!
அழகு அழகு..
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு
@கமலேஷ்...
ReplyDeleteவாங்க வாங்க கமலேஷ்... நலம் தானா? பெரும் இடைவெளிக்குப் பின்னான சந்திப்பு உவகை ஏற்ப்படுத்துது.
அருமையாக எழுதுகிறீர்கள் நிலாமகள்....
ReplyDeleteவாழ்த்துக்கள்....
@கிருஷ்ணப்ரியா ...
ReplyDeleteமிக்க நன்றி தோழி... வருகைக்கும் வாழ்த்துக்கும்!!