மருமகளை தனது மூன்றாவது மகளாகவே பாவித்த இவர் எனது மாண்பு மிகு மாமனார்! பதின்ம வயதில் தந்தையைத் தக்க வைத்துக் கொள்ளாமல் யமனுக்கு வாரி வழங்கிய வள்ளல் நான்!! புதுப்பித்துக் கொண்டேன் இவரிடம் என் தந்தையின் மறு உருவை... ஈடில்லா பாசத்தை.... இறை மேல் எனக்கிருந்த புகார் மறைந்தது இவரால்.
உழைப்பும் நேர்மையும் இவரது இரு கண்கள். சிக்கனமும் சேமிப்பும் இவருக்குக் கைவந்த கலை. பேச்சில் கோபமிருக்கும் சமயங்களில். தன் பேரன்பின் பெருவெளியால் அனைத்தையும் சமன் செய்திடும் சூத்திரம் கற்றவர்.இவரது பெருஞ்சினத்தின் ஆர்பாட்டங்களைப் பிறகு நினைத்து நினைத்துப் பேசிச் சிரிப்போம் நாங்கள். தானும் சேர்ந்து கொள்வார் சிரிப்பில். பேரப் பிள்ளைகளிடம் இவரது குழைவும் நெகிழ்வும் உறவுப் பிரசித்தம்.
எங்கள் குழந்தைகளுக்கு தாத்தா பாசத்தைத் திகட்டத் திகட்ட ஊட்டியவர். அவர்களின் சந்தோஷத்துக்காக எதையும் செய்யக்கூடிய அலாதி அன்புக்காரர். அவர்களின் மகிழ்வை அள்ளியள்ளிப் பருகிய அந்தக் கண்கள் மட்டும் இன்னும் உயிர்த்திருக்கிறது எங்கோ...என்பது தான் ஆறுதலளிக்குமொரு விஷயம் எங்களுக்கு.
கழியும் தினங்களில் சில தினங்கள் மறக்கவியலா வல்லமை பொருந்தியிருக்கும் நம் நினைவில்.
இந்த நாள், எங்களின் துரதிருஷ்டத்தைப் பறை சாற்றும் நாள்.
எத்தனை மாமனாருக்கு மருமகளால்
ReplyDeleteகண்ணீருடன் நினைக்கப் படும்
சந்தர்ப்பம் வாய்த்திருக்கும்.
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்,
குழந்தைகளுக்கும் எங்கள் ஆறுதல்.
அவர் கண்களல் வாழ்ந்து கொண்டிருப்பது
மேலும் ஆறுதலான செய்தி.
பிறப்பு, இறப்பு சகஜம். ஆனால் வாழ்நாளை மறக்க முடியாமல் செய்து விட்டு போகிற ஜீவனாய் நாமும் மாற வேண்டும் என்கிற உணர்வை ஊட்டிப் போகிற அற்புத மனிதர்களை எங்ஙனம் மறக்க இயலும்?
ReplyDeleteபிறந்தவரெல்லாம் இறக்கத்தானே வேண்டும்? ஆனாலும், இருக்கும் வரை மற்றவருக்கு உதவியாய் இருந்து சென்ற உங்கள் அப்பாவின் [மாமனார் என்று ஏன் சொல்ல வேண்டும்?] ஆன்மா சாந்தி அடையட்டும்.
ReplyDelete@சந்தான கிருஷ்ணன்...
ReplyDeleteஇதமளிக்கும் தங்கள் பரிவான சொற்களை நெகிழ்வுடன் ஏற்கிறேன்.
@ரிஷபன்...
ReplyDeleteசரியாய் சொன்னீங்க... போகும் வரை போகாமலிருக்கும் சேகரிப்பில் ஒன்றாயிற்றே...
@வெங்கட் நாகராஜ்...
ReplyDeleteஉங்க பிரார்த்தனைகளும் ஆறுதல் மொழிகளும் நெகிழ்வை தருகிறது. பாருங்க வெங்கட்... எனது தந்தையின் திதி நாளும் இன்று தான்! இந்த ஆண்டின் வியப்பு இது!! அவரது நினைவுநாள் வரும் தேதியில் (23 நவம்பர் ) ஒரு பதிவிட இருக்கிறேன்.
நெகிழ்ச்சியாய் இருந்தது நிலாமகள்.உங்கள் பதிவிலிருக்கும் அன்பின் ஈரத்தால் அந்தக் கண்களும் இதைப் படிக்க நேரக்கூடும்.
ReplyDeleteஉங்களுக்கும் பாரதிக்குமாருக்கும் மதுமிதாவுக்கும் சிபிக்குமாருக்கும் பழக வாய்ப்பளிக்காத அந்த மனிதருக்கான ஆறுதலை விட்டுச் செல்கிறேன்.
உங்கள் அப்பா (மாமனார்)வின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
ReplyDeleteஇது போன்ற உள்ளங்கள் அரிதாகிப் போன வாழ்வில் உங்கள் வலியும், இழப்பும் கலங்க வைத்தது. அவரின் நினைவுகள் அவராக உங்களுடன் இருக்கும்.
ReplyDeleteஉங்கள் மாமனாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
ReplyDeleteஉங்களினதும் உங்கள் குடும்பத்தினரினதும் துயரில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன் நிலா.
ReplyDelete‘எப்பிறப்பில் காண்போம் இனி’
மணிமேகலா.
//...அன்பின் ஈரத்தால் அந்தக் கண்களும் இதைப் படிக்கக் கூடும்...//
ReplyDeleteசிலிர்த்துப் போனேன் ஜி! தங்கள் ஆறுதல் மொழிகள் வெகு இதம்.
தங்கள் ப்ரார்த்தனைகளுக்குத் தலை வணங்குகிறேன்... அப்பா இதையெல்லாம் பார்த்திருந்தால் மிக மகிழ்ந்திருப்பார்.
ReplyDelete@சைக்கிள் ...
ReplyDeleteதங்கள் மென்மனசின் தேறுதல் சொற்கள் வருடலாய் எங்கள் வலி குறைக்கும் படி ... மிக்க நன்றி!
@வினோ...
ReplyDeleteபிரார்த்தனைக்கு நெகிழ்வான நன்றி வினோ...!
@மணிமேகலா...
ReplyDeleteஎங்களுள் ஒருவரானது தெம்பளிக்கிறது தோழி... ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதில்லை என்பது தானே புதிர்நிறை வாழ்வின் சூட்சமமாயிருக்கிறது !
மனம் கனக்கிறது நிலா.அவரின் உருவமே அன்பாய்ப் பார்க்கிறதே.இழப்புகளில்தான் தைரியம் அதிகம் வேணும் எங்களுக்கு.உங்கள் மாமா உங்களிடமேதான் நிறைவாய்.
ReplyDeleteஅமைதியாயிருங்கள் தோழி !
@ஹேமா...
ReplyDeleteதட்டிக்கொடுத்து, அரவணைத்து, பெருகும் விழிநீர் துடைத்துத் தேற்றும் விதமான தங்கள் வார்த்தைகள் எம்மை அமைதிப்படுத்தும் விதமாயுள்ளதில் மனம் நெகிழ்கிறேன் தோழி...
இந்த எண்ணங்களையும், நிகழ்வுகளையும் அவரின் நிகழ்காலத்தில் பகிர்ந்திருப்பீர்கள் தானோ?
ReplyDeleteதங்களின் வார்த்தைகளில் அவ்ர்'வாழ்வாங்கு நிறைவாய் வாழ்ந்திருக்கிறார்' என்பதே ஆறுதல்.
நிலாமகள்... உண்மையில் உங்கள் மாமனார்தான் கொடுத்து வைக்காதவர்.. இறைவன் சித்தமிது. நீங்கள் மகள்தான். இந்த மனோபாவத்தைத்தான் பல பெண்களிடம் உலகம் எதிர்பார்க்கிறது. பல வயதானவர்களை ஏக்கம் கொள்ளச் செய்யும் உணர்வு ததும்பும் பதிவிது. என்னுடைய மன அஞ்சலியை உங்கள் தந்தைக்கு (மாமனார்க்கு) அளிக்கிறேன்.
ReplyDelete" பதின்ம வயதில் தந்தையைத் தக்க வைத்துக் கொள்ளாமல் யமனுக்கு வாரி வழங்கிய வள்ளல் நான்!!"
ReplyDeleteஎத்தனை பேருக்கு இது வாய்க்கும்?
சாவே உனக்கொரு சாவு வராதா?
ReplyDelete:(
இழப்புகள் சிலநேரம் வலியை கொடுக்காமல் பதிந்து சென்றுவிடுகின்றன...!
@vasan...
ReplyDeleteஆம் ஐயா...! அவர் வாழுங்காலத்திலேயே எனது அன்பையும் சேவையையும் அர்ப்பணித்திருக்கிறேன் என்பது ஒரு ஆறுதலான விஷயமெனக்கு. பரிவான தங்கள் சொற்கள் என் பாரத்தை குறைக்கின்றன, நன்றி!!
@ஹரணி ...
ReplyDeleteதேற்றிக் கொள்கிறேன் தங்கள் சொற்களால்... இப்படியான பக்குவம் பெற எனது துணைவரின் பங்களிப்பு அளப்பரியது. நிறை குறை நிரம்பிய மனித உறவுகளில் ஏற்படும் மனக் கசப்புக்களை அடி ரச மண்டி போல் ஒதுக்கும் பயிற்சியை நாமாகவே முனைந்து பெற வேண்டியிருக்கிறது.
@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி...
ReplyDeleteஎனது வருத்தங்களைப் பகிர இப்படியான உயரிய மனிதர்கள் வாய்த்ததும் இறையருளே!!
@ப்ரியமுடன் வசந்த்...
ReplyDeleteஆமா தம்பி... சில இழப்புகள் எவ்வளவு காலமானாலும் ஈடு அடைவதில்லை.