நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

வெளியில் இல்லை மழை...

Monday, 13 September 2010
கண்ணை அழுத்தும்
காலைத் தூக்கம்
கிளம்பும் பொழுதை
நெருக்கடி ஆக்க
சுடுசொல் கிளப்பும்
கண்ணில் மழையை...

பலநாள் பயின்றும்
பந்தயக் கோப்பையை
தோற்றவன் கண்களில்
கோடை மழை...
வென்றவன் கண்களில்
மகிழ்வெல்லாம் மழையாய்.

நெருங்கிய உறவோ
இனிய நட்போ
மரணம் தழுவிய தகவல் தெரிய
மழைபோல் கண்ணீர்
மனசை ஆற்றும்.

பிரமச்சரியம்
இல்லறம் தாண்டி
வானப் பிரஸ்தன் ஆகும் ஆவலில்
ஆன்மீகத் தேடலில் அமிழும் மனசில்
எல்லா உயிரிலும் இறை உண்டென்ற
உண்மைத் தூவாணம்
நம்மை மென்மையாய்
நனைக்கும் தருணம்
வெளியே இல்லை மழை...
மனவெளியில் நல்ல மழை!

15 கருத்துரைகள்:

 1. மிகவும் அருமையாக இருக்கிறது.

 1. மனதிற்குலுள்ள மழையும்
  மழைக்குலுள்ள கவிதையும்
  நன்றாக இருக்கிறது .

 1. ஆன்மீகத் தேடலில் அமிழும் மனசில்
  எல்லா உயிரிலும் இறை உண்டென்ற
  உண்மைத் தூவாணம்
  இதாங்க.. இதப் புரிஞ்சுகிட்டாலே போதும்..

 1. @ கோவை 2 டெல்லி.
  மிக்க மகிழ்ச்சி தோழி...

 1. @கமலேஷ்...
  உடனுக்குடன் வரும் பரிவும் நெகிழ்வான மழையானது சகோதரா எனக்கு!

 1. @ரிஷபன்...
  எப்போதுமே சொல்ல வரும் செய்தியின் மையப் புள்ளியைக் கண்டடைந்து விடுகிறீர்கள் அனாயாசமாய்!

 1. Madumitha said...:

  ஆம். எல்லாமே உள்ளுக்குள்தான்
  இருக்கின்றன.

 1. ஹேமா said...:

  நிலா...மனதிற்குள் மழை அடிப்பதால்தான் ஈரலிப்போடு வாழ்கிறோம் !

 1. நீரும் கண்ணீரும் தான் வாழ்வின் சாரம்.வெளியில் பெய்யும் மழை உள்ளில் பெய்யத் தொடங்கும் வரியில் முளைக்கிறது கவிதையின் ஆன்மா.அழகு நிலாமகள்.

 1. Vel Kannan said...:

  ///எல்லா உயிரிலும் இறை உண்டென்ற//
  நிசமாவா..... சொல்றீங்க ......

 1. @மதுமிதா...
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

  @ஹேமா...
  ஆம் சகோதரி... நன்றி!

  @சுந்தர்ஜி...
  சரியான கணிப்பு தங்களுடையது.
  நன்றி ஜி!

  @வேல் கண்ணன்...
  ஆம் சகோதரரே... உணர்வீர்கள் பிறிதொரு நாள். நன்றி!

 1. கண்ணீர் மழை வகையை சேர்ந்ததா அருவிவகையை சேர்ந்ததா? மழைக்கு ஆரம்பபுள்ளி கிடையாது எங்கு உருவாகின்றது என்று தெரியாது அருவியின் ஆரம்ப நிலை தெரியும்

  மனமெல்லாம் மழை ??????

  அது சரி லாஜிக் இல்லாததுதானே கவிதை இல்லையா சகோ?

 1. @ப்ரியமுடன் வசந்த்...
  அருவிக்கு மூலமே மழைதானே தம்பி... 'வானின்று வீழும் அமிழ்தம் என வள்ளுவமே சொல்லியிருக்க, மழையின் தொடக்கம் தெரியாதென சொல்வது விந்தை! இக் கவிதையில் மழை ஒரு குறியீடு. 'மன வெளியில் நல்ல மழை' என்பதில் லாஜிக் சரியாகவே இருப்பதாக நான் கருதுகிறேன். மறுபடியும் கவிதையை வாசித்துப் பார்க்கவும்.

 1. நல்ல கவிதையைப் படித்ததில் மனதுக்குள்ளே சந்தோஷ மழை. பகிர்வுக்கு நன்றி....


  வெங்கட்.

 1. @வெங்கட் நாகராஜ்...
  மிக்க நன்றி சகோதரா!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar